You are currently viewing Today’s Important Historical Events – 20.03.2025

Today’s Important Historical Events – 20.03.2025

Today’s Important Historical Events – 20.03.2025

வரலாற்றில் இன்று 20/03/2025 வியாழன்

Today's Important Historical Events

  • 1602 : டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது.

  • 1739 : நாதிர் ஷா டெல்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடினார்.

  • 1760 : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஏற்பட்ட பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களை அழித்தது.

  • 1815 : எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பெரும் படைகளுடன் பாரிஸை மீண்டும் கைப்பற்றி 100 நாட்கள் ஆட்சியை ஆரம்பித்தார்.

  • 1861: மேற்கு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றிலும் அழித்தது.

  • 1915 : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்.

  • 1922 : அமெரிக்கக் கடற்படையின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் லாங்லி செயல்படத் தொடங்கியது.

  • 1934 : ஜப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் ஏற்பட்ட பெரும் தீ 4,170 சதுர கிலோமீட்டர் நகரை அழித்தது.

    2,165 பேர் உயிரிழந்தனர்.

  • 1942 : போலந்தில் நாஜி ஜெர்மனியர்களால் கட்டாய வேலைக்கு கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

  • மேற்கு உக்ரைனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் ஜெர்மனிப் படைகளால் கொல்லப்பட்டனர்.

  • 1948 : சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.

  • 1956 : பிரான்ஸிடம் இருந்து துனிசியா விடுதலை பெற்றது

  • 1981 : ஒரு பைசா,

    2 பைசா, 3 பைசா நாணயங்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

  • 1987 : அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எய்ட்ஸுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.

  • 1988 : பிரேஸிலில் கத்தோலிக்க ஆலயத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, ரயிலுடன் மோதிய விபத்தில் 65 பேர் இறந்தனர்.

  • பர்மாவில் லாஷியோ எனுமிடத்தில் ஒரு வீட்டின் சமையலறையில் பற்றிய தீ 2,000 வீடுகளைத் தீக்கிரையாக்கியதுடன் 113 பேர்களையும் பலி வாங்கியது.

  • எரித்ரியாவில் எரித்ரிய மக்கள் விடுதலை முன்னணியினர்

    அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

  • 2003 : ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

  • 2006 : கிழக்கு சாடில் 150 சாட் ராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

  • 2012 : ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

  • 2015 : சூரிய கிரகணம், சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலவு, மற்றும் சம இரவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.

  • 2020 : டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வரும் காலை 05:30 க்கு தூக்கிலிடப்பட்டனர்.

Leave a Reply