You are currently viewing School Morning Prayer Activities – 21.01.2025
xr:d:DAEg5CGTEbc:1134,j:29256283154,t:22062301

School Morning Prayer Activities – 21.01.2025

School Morning Prayer Activities – 21.01.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 21.01.2025

Click Here

திருக்குறள்

  • பால் : பொருட்பால்
  • அதிகாரம்: குடிமை
  • குறள் எண்:951

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நானும் ஒருங்கு.

பொருள்: நல்குடியில் பிறந்தாரன்றி மற்றவரிடம் ஒழுக்கமும், பாவங்களுக்கு அஞ்சும் நாணமும் இயல்பாக அமைவதில்லை.

பழமொழி :

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது.

When the meek are enraged, even a forest will not hold their wrath.

 

இரண்டொழுக்க பண்புகள் :

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் —தந்தை பெரியார்

 

பொது அறிவு :

1. முதன்முதலில் வெளிவந்த கார்ட்டூன் படம் இது?

Snow White and seven dwarfs(1937)

 

2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?

கெப்ளர்

 

English words & meanings :

Movie – திரைப்படம்

Music – இசை

 

வேளாண்மையும் வாழ்வும் :

பசுமைப் புரட்சிக் காலத்தில் உணவு உற்பத்தியின் பிரமாண்டமான வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக பாசன வசதிகளின் விரிவாக்கம் இருந்தது.

 

நீதிக்கதை

குறையா நிறையா?

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதன் எஜமானன் கூறினான்.

“பானையே!நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்குமுன்னமே தெரியும். அதனால் தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக்கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

 

இன்றைய செய்திகள் – 21.01.2025

* புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

* தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பு மானியத் திட்டத்தின் கீழ் 136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

* ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்தானது என்று ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

* மக்களின் நம்பிக்கையை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா ஓர் இடம் பின்னடவைக் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

 

* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: டெல்லி அணியை வீழ்த்தி கலிங்கா லான்சர்ஸ் வெற்றி.

 

* கோ கோ உலக கோப்பை போட்டி: ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

 

Today’s Headlines

 

🌸With the completion of the new Pampan railway bridge, the railway administration has decided to remove the 111-year-old Pampan railway suspension bridge from the sea.

 

🌸According to the Tamil Nadu government’s translation subsidy scheme, 136 Tamil books are being translated into other languages.

 

🌸IMA’s new president has warned that Ayurvedic and homeopathic doctors prescribing English medicines is dangerous.

 

🌸In the list of countries that have gained people’s trust, India has fallen one place and is ranked 3rd.

 

🌸Hockey India League: Kalinga Lancers beat Delhi

 

🌸Kho Kho World Cup: India won the champion title in both men’s and women’s categories.

 

Covai women ICT_போதிமரம்

Leave a Reply