School Morning Prayer Activities – 20.03.2025
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்… Today’s (20.03.2025 )

திருக்குறள் :
- பால்: அறத்துப்பால்
- அதிகாரம்/Chapter: அவாவறுத்தல் / Curbing of Desire :
- குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
விளக்கம்:
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
பொன்மொழி :
1) அன்பை தருபவர்களை விட அனுபவத்தை தருபவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம்…
2) அன்று உனக்காக சிரித்தவர்கள், இன்று உனக்காக அழுதால்.. நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது
பழமொழி :
A pen is mightier than a sword
கத்தியின் முனையை விட பேனாவின் முனை வலிமை வாய்ந்தது
பொது அறிவு :
மின் அஞ்சலின் தந்தை யார் ?
விடை : ரே டொமில்சன்
இன்றைய முக்கியச் செய்திகள் :
(20.03.2025 – வியாழன்)
மாநிலச்செய்தி:
25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-2025 செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் 17.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெறுகிறது.
உள்நாட்டுச்செய்தி:
போலி வாக்குப்பதிவுகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் நடத்திய கூட்டத்தில் ஒப்புதல்
உலகச்செய்தி:
9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர்: நாசா அறிவிப்பு. விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் சுனிதா வில்லியம்ஸ்
விளையாட்டுச்செய்தி:
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா: பிசிசிஐ அதிரடி திட்டம்
School Morning Prayer Activities in English ….
Today’s Important News: 20.03.2025 – Thursday
State News:
The 25th All India Police Shooting Competition 2024-2025 will be held from 17.03.2025 to 22.03.2025 at the shooting range at the Commando School Training Complex, Chengalpattu District, Ahaavakkam, Tamil Nadu.
National News:
Decision to link voter ID card with Aadhaar number to prevent fake voting: Approval in a meeting held by the Chief Election Commissioner
World News:
Sunita Williams, who returned to Earth after 9 months, is in very good health: NASA announces. Sunita Williams became the first woman to spend the longest time in space.
Sports News:
For the first time in the history of IPL, the opening ceremony will be held at 13 venues: BCCI’s action plan.