You are currently viewing NEET Result Announced 2023

NEET Result Announced 2023

NEET Result Announced 2023

NEET 2023 Result update | NEET 2023 Result Out? | How to check NEET 2023 Result

வெளியானது நீட் தேர்வு முடிவுகள் : தமிழக மாணவர் முதலிடம்!

NEET Result Announced 2023

2023 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

இதில் தமிழக மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. சரியாக 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் முதல் 10 பேரில் 4 மாணவர்கள் தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Leave a Reply