You are currently viewing ennum ezhuthum Training date 2024 – 2025

ennum ezhuthum Training date 2024 – 2025

எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,

எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 2025 ஆம் கல்வியாண்டு -4 மற்றும் 5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான மாவட்ட அளவிலான பயிற்சி நடத்துவது சார்ந்து அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்:2411/எஃப்2/2021 ब. 13.11.2024 பார்வை(3)ல் காணும் செயல்முறைகளில், 4 & 5 ஆம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலான எண்ணும் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 11.12.2024 மற்றும் 1212.2024 ஆகிய இரு நாட்களில் நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் காரணத்தால் மேற்கண்ட இப்பயிற்சியானது சில மாவட்டங்களில் நடத்தப்படாத நிலை உள்ளது. எனவே, 4 & 5 ஆம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலான எண்ணும் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய இரு நாட்களில் நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Reply