7th Tamil Term 2 Unit 1.4 Book Back Answers
7th Standard Samacheer Kalvi Guide Unit 1.4 ஆழ்கடலின் அடியில்
7th Standard Term 2 Unit 1.4 Samacheer Kalvi Guide Book back and additional answers. 7th All Terms Full Answers. 7th TNPSC Important Notes, Free Online Test. 7th Standard All Important Study Materials. 7th Tamil Term 2 Unit 1.4 Book Back and additional question Answers.
7th Tamil Term 2 – Unit 1.1 to 1.5 Full BookAnswers – Click Here
1.ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.
விடை :
2.நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறைபற்றிய செய்திகளைத் திரட்டி தொகுத்து எழுதுக.
விடை ::
தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுள்ள நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் மிதக்கும் என்பது ஆர்க்கிமிடிஸ் தத்துவம்.
அதன் அடிப்டையில் தான் நீர் மூழ்கிக்கப்பல்கள் இயங்குகின்றன.
சரளைத் தொட்டிகள் நீர் மூழ்கிக் கப்பல்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இது காற்றால் நிரப்பப்பட்டு இருக்கும். சுற்றிக் காற்று இருப்பதால், நீரில் இருக்கும் காற்றை வெளியேற்றினால் இந்த இடத்தில் நீரானது நிரம்பும்.
இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும் கப்பல் நீரில் மூழ்கும்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
1. ‘ஆழ்கடலின் அடியில்’ கதையைச் சுருக்கி வரைக.
பியரி – விலங்கியல் பேராசிரியர்
ஃபராகட் – அமெரிக்கா நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட போர்க் கப்பலின் தலைவர்.
நெட் – ஈட்டி எறிந்து திமிங்கிலங்களை வேட்டையாடுவதில் வல்லவர்.
கான்சீல் – பியரியின் உதவியாளர்.
முன்னுரை:
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில்’ என்ற புதினத்தின் கதையினைச் சுருக்கிக் காண்போம்.
விலங்கைத் தேடிய பயணம்:
கடலில் உலோகத்தால் ஆன உடம்பு கொண்ட ஒரு விலங்கு கடலில் செல்வோரைத் தாக்கியது. அதனைக் கண்டுபிடித்து அழிக்க பியரி, ஃபராகட்,நெட்,கான்சீல் ஆகியோர் கொண்ட குழு நியூயார்க் நகரில் இருந்து ஒரு போர்க்கப்பலில் செல்கின்றது.
அமெரிக்கா முதல் ஜப்பான் வரை மூன்று மாதங்களாகத் தேடியும் அந்த விலங்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த விலங்கு இவர்களின் கப்பலைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகளும், நெட்டின் ஈட்டியும் அந்த விலங்குகளை எதுவும் செய்ய முடியவில்லை. அது இவர்களைத் தூக்கி வீசியது.
நீர்மூழ்கிக் கப்பல்:
அது விலங்கன்று. நீர் மூழ்கிக் கப்பல் என்பதை அவர்கள் அறிந்தனர். அவர்களை நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் சிறைபிடித்தனர். அந்த நீர் மூழ்கிக் கப்பல் பெயர் நாட்டிலஸ் என்றும், அதன் தலைவர் நெமோ என்பதையும், இக்கப்பலை விந்தையான விலங்கு என்று நம்ப வைத்ததையும் நேமோ கூறிவிட்டு, இச்செய்தி அறிந்த உங்களை வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான இந்தத் தனி உலகத்தில் தான் நீங்களும் இருக்க வேண்டும் என்றார். அனைவரும் அச்சப்பட்டனர்.
கப்பலின் இயக்கம்:
கப்பலுக்குத் தேவையானவை எப்படி உங்களுக்குக் கிடைக்கின்று என்று பியரி, நெமோவிடம் கேட்டார். அதற்கு அவர் மின்சாரம் தயாரிக்க தவையான கருவிகள் உள்ளன, கப்பலில் மிகப்பெரிய நீர்த்தொட்டி உள்ளது. அதனை நிரப்பும் போது கப்பல் கடல் அடியிலும் நீர் வெளியேறும் போது மேல் செல்கின்றது. சில நாட்களுக்கு ஒரு முறை கப்பல் மேலே வரும் பொழுது சுவாசிக்கத் தேவையான காற்றைப் புதுப்பித்துக்கொள்ளும், காற்றுச் சேகரிக்கும் நிறைய பைகளும் உள்ளன என்றார்.
மணல் திட்டில் சிக்கிய கப்பல்
ஒரு நாள் மணல் திட்டில் கப்பல் சிக்கிவிட்டது. தூரத்தில் தெரிந்த தீவில் காய்கறி வாங்கி வர அவர்களை, நெமோ இசைவளித்தார். அவர்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பும் போது அத்தீவில் உள்ளவர்கள் துரத்தினார்கள். அவர்கிளிடம் மாட்டாமல் கப்பல் வந்து சேர்ந்தனர்.
அக்கப்பலை அவர்கள் முற்றுகையிட்டனர். கடலின் நீர்மட்டம் உயர கப்பல் மேலே வந்தது. ஆறு நாள் போராட்டத்திற்குப் பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது. கடலுக்கடியில் அவர்கள் செல்லும் போது, முத்துக்குளித்துக் கொண்டிருந்த இந்தியர் ஒருவரை சுறாவிடம் இருந்து காப்பாற்றினர்.கடலடியின் உன்னத காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தனர்.
முடிவுரை:
பெரும் கடல் சுழலில் கப்பல் மாட்டிக் கொண்டது. மூவரும் தூக்கிவீசப்பட்டனர். மயக்கநிலையில் நார்வே நாட்டு மீனவர் குடிசையில் இருந்ததை விழித்துப் பார்த்தனர். நெமோவும் கப்பலும் என்ன ஆனது என்று தெரியவில்லை.