8th Tamil Guide unit 7.5
8th Tamil Samacheer Kalvi Full Term Book Answers download PDF. 8th Tamil 7th Lesson இயல் 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் 8th TN Text Books Download PDF. Class 8 Tamil Nadu Samacheer Kalvi Start Board Syllabus Book Back Answers. TNPSC, TNTET, TRB 8th Tamil Important Notes. 8th Tamil Free Online Test. 8th Tamil Full Term All Unit Answers Lesson 1 to 9.
- 8th Tamil Samacheer Kalvi Guide – Unit 7 Full Guide
7.5. வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
I. பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக. | |
---|---|
சுட்டுத் திரிபு | வல்லினம் மிகும் |
திசைப் பெயர்கள் | வல்லினம் மிகும் |
பெயரெச்சம் | வல்லினம் மிகாது |
உவமைத் தொகை | வல்லினம் மிகும் |
நான்காம் வேற்றுமை விரி | வல்லினம் மிகும் |
இரண்டாம் வேற்றுமை தொகை | வல்லினம் மிகாது |
வினைத் தொகை | வல்லினம் மிகாது |
உருவகம் | வல்லினம் மிகும் |
எழுவாய்த் தொடர் | வல்லினம் மிகாது |
எதிர்மறைப் பெயரெச்சம் | வல்லினம் மிகாது |
II. சிறு வினா
1. சந்திப்பிழை என்றால் என்ன?
வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும்.
2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.
இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும், நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும் வல்லினம் மிகும்.
3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
அது சென்றது
மொழியை ஆள்வோம்
I. பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
1. அதைச் செய்தது நான் அன்று.
விடை : அதைச் செய்தது நான் அல்லேன்
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை : பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை : மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை : சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை : பகைவர் நீவீர் அல்லீர்
II. சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை ____________
விடை : அல்ல
2. உங்களோடு வருவோர் ____________ அல்லோம்.
விடை : நாம்
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ____________
விடை : அல்லன்
4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ____________
விடை : அல்ல
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் ____________ அல்லை.
விடை : நீ
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக | ||
---|---|---|
கருமை | கடுமை | பல் |
கரும்பு | கடமை | வேல் |
நாடு | பழமை | புல் |
களை | கடம் | நாற்று |
வித்து | வேற்றுமை | நாடகம் |
வேழம் | கல் | நாம் |
கற்பு | புதுமை | வேம்பு |
II. கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
- தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
- தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
- ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
- அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
- தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
- தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
விடை :-
அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- குதிரையேற்றம் – Equestrian
- ஆதரவு – Support
- கதாநாயகன் – The Hero
- வரி – Tax
- முதலமைச்சர் – Chief Minister
- வெற்றி – Victory
- தலைமைப்பண்பு – Leadership
- சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
கூடுதல் வினாக்கள்
நிரப்புக .
1. எண்ணுப்பெயர்களில் ………………… ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
2. வடக்கு + தெரு சேர்த்து எழுதக் கிடைப்பது ……………..
3. சுட்டுத்திரிபு வினாத்திரியை அடுத்து வல்லினம் ……………..
4. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடா குற்றியலுகரமாகவோ, ………………….. குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.
Answer:
1. எட்டு, பத்து
2. வடக்குத்தெரு
3. மிகும்
4. இடைத்தொடர்க்
விடையளி :
1.வல்லினம் மிகும் இடங்களுக்குச் சில சான்றுகள் தருக.
- சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
எ.கா: அந்தப்பக்கம்
- வினாத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
எ.கா: எந்தச்சட்டை ?
- இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை வெளிப்படையாக வரும் இடங்களில் வல்லினம் மிகும்.
எ.கா: பாடத்தைப்படி (ஐ) ; அவனுக்கு பிடிக்கும் ,
2.வல்லினம் மிகா இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக
- எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
சான்று: தம்பி படித்தான்.
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
சான்று: சுடு சோறு.
3.மண்வெட்டி கொண்டு வா.
மண்வெட்டிக் கொண்டு வா – இத்தொடர்களின் பொருள் எழுதுக.
- மண்வெட்டி கொண்டு வா – மண்வெட்டியை எடுத்து வா.
- மண்வெட்டிக் கொண்டு வா – மண்ணை வெட்டி எடுத்து வா.