8th Tamil Guide unit 7.1
8th Tamil Samacheer Kalvi Full Term Book Answers download PDF. 8th Tamil 7th Lesson இயல் 7.1 படை வேழம் 8th TN Text Books Download PDF. Class 8 Tamil Nadu Samacheer Kalvi Start Board Syllabus Book Back Answers. TNPSC, TNTET, TRB 8th Tamil Important Notes. 8th Tamil Free Online Test. 8th Tamil Full Term All Unit Answers Lesson 1 to 9.
- 8th Tamil Samacheer Kalvi Guide – Unit 7 Full Guide
8th Tamil Guide இயல் 7.1. படை வேழம்
I. சொல்லும் பொருளும்
- மறலி – காலன்
- வழிவர் – நழுவி ஓடுவர்
- கரி – யானை
- பிலம் – மலைக்குகை
- தூறு – புதர்
- மண்டுதல் – நெருங்குதல்
- அருவர் – தமிழர்
- இறைஞ்சினர் – வணங்கினர்
- உடன்றன – சினந்து எழுந்தன
- முழை – மலைக்குகை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சிங்கம் __________யில் வாழும்.
- மாயை
- ஊழி
- முழை
- அலை
விடை : முழை
2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு __________.
- வீரம்
- அச்சம்
- நாணம்
- மகிழ்ச்சி
விடை : அச்சம்
3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- வெம் + கரி
- வெம்மை + கரி
- வெண் + கரி
- வெங் + கரி
விடை : வெம்மை + கரி
4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- என் + இருள்
- எட்டு + இருள்
- என்ற + இருள்
- என்று + இருள்
விடை : என்று + இருள்
5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- போன்றன
- போலன்றன
- போலுடன்றன
- போல்உடன்றன
விடை : போலுடன்றன
III. குறுவினா
1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?
- தங்கள் உயிர்களை பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்
2. கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
- கலிங்க வீரர்கள் தம்மை அழிக்க வந்த தீயோ என்று அஞ்சி ஓடினர்?
3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?
- படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
- கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்
- யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
- எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் மலைக் குகை மற்றம் புதருக்குள் தப்பி ஒளிந்து கொண்டனர்.
IV. சிறு வினா
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
- கலிங்க வீரர்கள் “இது என்ன மாய வித்தையோ” என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரை பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர்.
- படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர்.
- எந்த திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர்.
- ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர்.
- யானை பிளிறியதைக் கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.
படை வேழம் – கூடுதல் வினாக்கள்
I. சேர்த்து எழுதுக
- சிதைந்து + ஓடல் = சிதைந்தோடல்
- என்று + இருள் = என்றிருள்
- போல் + உடன்றன = பேலுடன்றன
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழர்கள் வீரமும், போர் அறமும் _______________ வாய்ந்தவை.
விடை : தனிச்சிறப்பு
2. செயங்கொண்டார் _______________ என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
விடை : தீபங்குடி
3. கலிங்கத்துப்பரணி _______________ பாடப் பெற்றது.
விடை : கலித்தாழிசையால்
4. கலிகத்துப்பரணி _______________ தாழிசைகள் கொண்டது.
விடை : 599
III. சிறு வினா
1. தமிழர்கள் எதனை தமது உடைமைகளாகக் கொண்டவர்கள்?
- தமிழர்கள் அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாகக் கொண்டவர்கள்.
2. தமிழரின் மாண்பினை நமக்கு உணர்த்துவன எவை?
- பகைவரை அஞ்சச் செய்யும் வீரமும், அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பினை நமக்கு உணர்த்துவன.
3. கலிகத்துப்பரணி எதனை பற்றி பேசுகிறது
- கலிகத்துப்பரணி கலிங்கப்போர் வெற்றியை பற்றி பேசுகிறது.
4. பரணி இலக்கியம் என்றால் என்ன?
- போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
IV. குறு வினா
1. செயங்கொண்டார் சிறுகுறிப்பு வரைக
- செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
- முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவர்
- பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவரால் புகழப்பட்டவர்
2. கலிகத்துப்பரணி பற்றி குறிப்பு வரைக
- 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல்
- இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல்
- இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது.
- இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
- கலித்தாழிசையால் பாடப் பெற்றது.
- 599 தாழிசைகள் கொண்டது
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. தமிழர்கள் தமது உடைகளாகக் கொண்டவை …………………
2. கலிங்கத்துப்பரணி …………………. வகைகளுள் ஒன்று.
3. சோழமன்னனின் படையிலுள்ள யானைகள் ………………. போல் பிளிறின.
4. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் ……………………
5. செயங்கொண்டார் ………………… என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர்.
6. செயங்கொண்டார் ………………….. அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
7. செயங்கொண்டாரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர் பலபட்டடைச் ………………………
8. தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் …………………..
9. கலிங்கத்துப்பரணியைத் …………………… என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
10. கலிங்கத்துப்பரணி ………………….. பாடப்பெற்றது.
11. கலிங்கத்துப்பரணியில் மொத்த தாழிசைகள் …………….
12. சோழர் படையின் தாக்குதலைக் கண்டு ஓடியவர்கள் ………………
13. சிற்றிலக்கியங்கள் …………….. வகைப்படும்.
Answer:
1. அறம், வீரம்
2. சிற்றிலக்கிய
3. இடியைப்
4. செயங்கொண்டார்
5. தீபங்குடி
6. முதற்குலோத்துங்கச் சோழனுடைய
7. சொக்கநாதப் புலவர்
8. கலிங்கத்துப்பரணி
9. தென்தமிழ்த் தெய்வப்பரணி
10. கலித்தாழிசையால்
11. 599
12. கலிங்கர்
13. தொண்ணூற்றாறு
விடையளி :
1.செயங்கொண்டார் குறிப்பு வரைக.
- கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார்.
- இவர் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
- இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்.
- இவரைப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்துள்ளார்.
2.பரணி – குறிப்பு எழுதுக.
- போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
3.கலிங்கத்துப்பரணி – குறிப்பு வரைக.
- கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். இந்நூலே தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி ஆகும்.
- இது முதலாம் குலோத்துங்க சோழன் அவருடைய படைத் தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
- கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது. 599 தாழிசைகள் கொண்டது. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
பாடல்
பாடலின் பொருள்
- சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.
- அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்துகொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.
- கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.
- சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.
நூற்குறிப்பு
- கலிங்கத்துப்பரணி தொண்ணூற்று வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும். இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது; 599 தாழிசைகள் கொண்டது. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
ஆசிரியர் குறிப்பு
- செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர். இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.