You are currently viewing 8th Tamil Guide Unit 1.1

8th Tamil Guide Unit 1.1

8th Tamil Guide Unit 1.1

8th Standard Tamil Samacheer kalvi guide Lessin 1 – இயல் 1.1 தமிழ்மொழி வாழ்த்து

8th Standard Tamil Guide Lesson 1. இயல் 1.1 தமிழ்மொழி வாழ்த்து Book Back and additional Question and answers. 8th Standard Samacheer Kalvi Guide, 8th Tamil Unit 1.1  Answers Notes, 8th Tamil Full Guide book Answers. 8th Tamil book back question iyal 1 Tamil mozhi valthu you can download 8th Tamil book back question and answer all subjects. 8th Study Materials.

8th Tamil Guide Unit 1

1.1. தமிழ்மொழி வாழ்த்து

8th Tamil Guide Unit 1 தமிழ் இன்பம்

 1.1. தமிழ்மொழி வாழ்த்து

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே! *
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
– பாரதியார்

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

I. சொல்லும் பொருளும்

  • நிரந்தரம் – காலம் முழுமையும்
  • வண்மொழி – வளமிக்கமொழி
  • வைப்பு – நிலப்பகுதி
  • இசை – புகழ்
  • சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  • தொல்லை – பழமை, துன்பம்

நூல் வெளி

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.

  1. வைப்பு
  2. கடல்
  3. பரவை
  4. ஆழி

விடை : வைப்பு

2. “என்றென்றும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. என் + றென்றும்
  2. என்று + என்றும்
  3. என்றும் + என்றும்
  4. என் + என்றும்

விடை : என்று + என்றும்

3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. வான + மளந்தது
  2. வான் + அளந்தது
  3. வானம் + அளந்தது
  4. வான் + மளந்தது

விடை : வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. அறிந்ததுஅனைத்தும்
  2. அறிந்தனைத்தும்
  3. அறிந்ததனைத்தும்
  4. அறிந்துனைத்தும்

விடை : அறிந்தனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. வானம்அறிந்து
  2. வான்அறிந்த
  3. வானமறிந்த
  4. வான்மறிந்

விடை : வானமறிந்த

III. “தமிழ்மொழி வாழ்த்து” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

  • வாழ்க – வாழிய
  • எங்கள் – என்றென்றும்
  • வண்மொழி – வளர்மொழி
  • அகன்று – அறிந்த

IV. குறுவினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்டு வாழ்கிறது

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

  • வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

V. சிறுவினா

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

  • எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!
  • எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க!
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க!
  • உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க!
  • எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று  உலகம் ழுழுவதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
  • என்றென்றும் தமிழே! வாழ்க
  • வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க

தமிழ்மொழி வாழ்த்து – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _____________ கருத்தை அறிவிக்கும் கருவியாகும்
விடை : மொழி


2. தமிழர்கள் தமிழை _____________ ஆகக் கருதி போற்றி வந்துள்ளனர்
உயிர்

3. _____________ அறிந்த தனைத்து அறிந்து வளர் மொழி வாழியவே
விடை : வானம்

4. இசை என்பதற்கு பொருள் _____________
விடை : புகழ்

5. “தமிழ்தேனீ” என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் _____________

விடை : பாரதிதாசன்

II. குறு வினா

1. பாரதியாரின் பன்முக ஆற்றல் யாவை?

  • கவிஞர்
  • எழுத்தாளர்
  • இதழாளர்
  • சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர் விடுதலைப் போராட்ட வீரர்

2. பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?

  • இந்தியா
  • விஜயா

3. பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?

  • சிந்துக்குத் தந்தை
  • செந்தமிழ்த் தேனீ
  • புதிய அறம் பாட வந்த அறிஞன்
  • மறம் பாட வந்த மறவன்

4. தமிழ்நாடு எவ்வாறு ஒளிர்கிறது?

  • பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி ஒளிர்கிறது

5. எந்த இருள் நீங்கட்டும் என பாரதியார் கூறுகிறார்?

  • எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.

6. தமிழ்மொழி எங்கு சிறப்படைய வேண்டும் என பாரதியார் கூறுகிறார்?

  • தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவது சிறப்படைய வேண்டும்

II. சிறு வினா

பாரதியார் குறிப்பு வரைக

  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
  • இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்
  • சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.

நிரப்புக :

1. தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
2. பாரதியார் நடத்திய இதழ்கள் இந்தியா, விஜயா.
3. பாரதியாரின் உரைநடை நூல்கள் சந்திரிகையின் கதை, தராசு.
4. மொழி மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.

விடையளி :

1.சுப்பிரமணிய பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் போன்றவை பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் ஆகும்.

2.தமிழ்நாடு எவ்வகைத் துன்பங்கள் நீங்கி ஒளிர வேண்டும்?

பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டும்.

3.பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?

பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்தமை :
(i) சிந்துக்குத் தந்தை
(ii) செந்தமிழ்த் தேனீ
(iii) புதிய அறம் பாட வந்த அறிஞன்
(iv) மறம் பாட வந்த மறவன்.

4.பாரதியார் இயற்றியவைகளாக நும் பாடப் பகுதியில் குறிப்பிடப்பட்டவை எவை?

(i) சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்கள்.
(ii) வசன கவிதைகள்
(iii) சீட்டுக்கவிகள் ஆகியவையாகும்.

5.தமிழ்மொழி, எதனால் சிறப்படைய வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்?

தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்ந்து, எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்கும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.

செந்தமிழ் அந்தாதி

செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.
உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ; காதல்நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே!
-து. அரங்கன்

Leave a Reply