You are currently viewing 9th Tamil Guide Unit 7.2

9th Tamil Guide Unit 7.2

9th Tamil Guide Unit 7.2

9th Tamil 7th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 7.2 சீவக சிந்தாமணி. Ninth Standard Tamil 7th Lesson Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 7 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 7

9th Tamil Samacheer Kalviuide Guide 7th Lesson – Unit 7.2 சீவக சிந்தாமணி

7.2. சீவக சிந்தாமணி

I. சொல்லும் பொருளும்
  • தெங்கு – தேங்காய்
  • இசை – புகழ்
  • வருக்கை – பலாப்பழம்
  • நெற்றி – உச்சி
  • மால்வரை – பெரியமலை
  • மடுத்து – பாய்ந்து
  • கொழுநிதி – திரண்ட நிதி
  • மருபபு – கொம்பு
  • வெறி – மணம்;
  • கழனி – வயல்
  • செறி – சிறந்த
  • இரிய – ஓட
  • அடிசில் – சோறு
  • மடிவு – சோம்பல்
  • கொடியன்னார் – மகளிர்
  • நற்றவம் – பெருந்தவம்
  • வட்டம் – எல்லை
  • வெற்றம் – வெற்றி
II. இலக்கணக் குறிப்பு
  • தேமாங்கனி – பண்புத்தொகை
  • தண்டகல் – பண்புத்தொகை
  • நற்றவம் – பண்புத்தொகை
  • விளைக – வியங்கோள் வினைமுற்று
  • தேர்ந்த – பெயரச்சம்
  • இறைஞ்சி  – வினையெச்சம்
  • கொடியனால் – இடைக்குறை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. இறைஞ்சி = இறைஞ்சு +இ

இறைஞ்சு – பகுதி
இ – வினையெச்ச விகுதி

2. ஓம்புவார் = ஓம்பு + வ் +ஆர்

ஓம்பு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர் பால் வினைமுற்று விகுதி

IV. பலவுள் தெரிக

1. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பாெருள் யாது?
  1. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
  2. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
  3. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்
  4. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

விடை : மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

2. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக
  1. உருவகத்தொடர், வினைத்தொகை
  2. உவமைத்தாெடர், வினைத்தொகை
  3. வினைத்தொகை, பண்புத்தொகை
  4. வினைத்தொகை, உருவகத்தொடர்

விடை : உவமைத்தாெடர், வினைத்தொகை

V. குறு வினா

1. சுருக்கொண்ட பச்சைப் பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

சுருக்கொண்ட பச்சைப் பாம்பு நெற்பயிர்களின் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது

VI. சிறு வினா

2. ஏமாங்க நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?
  • ஆயிரம் வகையான உணவுகள்
  • உணவளிக்கும் அறச்சாலைகள் ஆயிரம்
  • மகளிர் ஒப்பனை செய்ய மணிமணிமாடம் ஆயிரம்
  • கம்மியர் ஆயிரம் பேர்
  • திருமணங்கள் ஆயிரம்
  • இப்படி ஆயிரம் நிகழ்வுகள் ஏமாங்க நாட்டில் குறைவின்றி நடக்கின்றன.

VII. நெடு வினா

1. ஏமாங்க நாட்டு வருணணைகளை நும் ஊர் குறித்த வளங்களோடு ஒப்பிடுக
  • ஏமாங்க வருணணை எங்கள் ஊர் வளம்
  • தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய் தேனடையைக் கிழித்து பலாப் பழத்தைப் பிளந்து, மாங்கனியை சிதற வைத்து, வாழைப்பழத்தை உதிரச்செய்தது தேங்காய்கள் வயல் ஓடைகளில் விழுந்து பூக்களை தழுவிச் செல்கிறது.
  • வள்ளல்களைப் போன்றது வெள்ளம். அது மலையில் இருந்து செல்வத்தை அடித்து வந்து ஊர் மக்களுக்கு வழங்கும் வகையில் பாய்கின்றது. பூக்களையும், பழங்களையும் வெள்ளம் அடித்து வந்து ஊரினில் சேர்க்கும்.
  • எருமைகளும், எருதுகளும் பேரொலி எழுப்புகின்றன. அது கேட்டு வாரல் மீன்கள் ஓடுகின்றன. ஏர் மாடுகளின் சத்தம் வயல்களில் எங்கும் கேட்கும்.

சீவக சிந்தாமணி – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சீவகனைத் தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம் ______________
விடை : சீவக சிந்தாமணி

2. இன்பங்களை துறந்து துறவு பூண வேண்டும் என்பது ______________ மையகருத்து
விடை : சீவக சிந்தாமணியின்

3. சீவக சிந்தாமணி ______________ பாவால் ஆனது.
விடை : விருத்தப்பா

4. ______________ நரிவிருத்தத்தை பாடியவர்.
விடை : திருத்தக்கதேவர்

5. நாட்டு வளம் இடம் பெறும் இலம்பகம் ______________
விடை : நாமகள் இலம்பகம்.

6. சீவக சிந்தாமணியில் _________ இலம்பகம் உள்ளன.
விடை : 13

7. சீவக சிந்தாமணியின் ______________ என அழைக்கப்படுகிறது
விடை : மணநூல்

V. குறு வினா

1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • குண்டலகேசி
  • வளையாபதி
  • சீவக சிந்தாமணி
2. நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது எது?

பயிர்கள் முற்றியவுடன் சாய்ந்து இருப்பது நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.

3. ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எவை? களைந்து ஓடியவை எவை?
  • ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எருதுகள்.
  • களைந்து ஓடியவை வாரல் மீன்கள்.
4. ஏமாங்க நாட்டில் செழித்திருந்த மரங்கள் யாவை?
  • தென்னை
  • பாக்கு
  • பலா
  • மாங்கனி
  • வாழை
5. சீவக சிந்தாமணி குறிப்பு வரைக
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று,
  • விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்,
  • மணநூல் என அழைக்கப்படுகிறது.
  • 13 இலம்பகங்களை கொண்டது.
  • இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்
6. திருத்தக்கதேவர் குறிப்பு வரைக
  • சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர்
  • சமண மதத்தை சார்ந்தவர்
  • இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டை சார்ந்தவர்
  • சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்பே நரிவிருத்தம் பாடியுள்ளார்.

Leave a Reply