11th Tamil Guide Unit 4.2
இயல் 4.2 பிள்ளைக்கூடம்
Book Back | Additional Question and Answers
11th Tamil Guide Unit 4 Book Back and Additional Question – Answers இயல் 4.2 பிள்ளைக்கூடம்
11th Tamil Guide Unit 4.2
1. குறுவினா இங்கே ஐம்பதாண்டு வேம்பு கோடையில் கொட்டும் பூக்களை எண்ணச் சொல்கிறார்கள் – எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?
- எண்ணச் சொல்கிறவர்கள் : தாய்மொழியில் கற்பிப்போர்.
- எண்ணுபவர்கள் : தாய்மொழியில் கற்போர்
11th Tamil Guide Unit 4.2
கூடுதல் வினாக்கள்
1. இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
- நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதய காலிருந்து, கொடிவிளக்கு என்பன, இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகளாகும்.
2. பிள்ளைகள் எவற்றினைப்போல் நடக்க, இசைக்க, பறக்கவேண்டுமெனப் பிள்ளைக்கூடக் கவிதை கூறுகிறது?
- பிள்ளைகள், காலையில் மயிலுடன் நடக்க வேண்டும்; மாமன் குயிலுடன் கூவி இசைக்க வேண்டும். வண்ணத்துப் பூச்சிகளுடன் பறக்கவேண்டுமெனப் பிள்ளைள்க்கூடக் கவிதை கூறுகிறது.
சிறுவினா (கூடுதல்)
1. இரா. மீனாட்சி குறித்துக் குறிப்பெழுதுக.
- புதுச்சேரியில் ‘ஆரோவில்’ என்னும் இடத்தில் இரா. மீனாட்சி வாழ்கிறார். ஆசிரியப் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார். நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப் புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
- பாடமாக அமைந்த கவிதை, கொடிவிளக்கு’ நூலிலிருந்து தேர்வு செய்யப் பெற்றுள்ளது. இயற்கையோடு இயைந்த கல்வியை வரவேற்று, அதனால் கிடைக்கும் மகிழ்வைக் கவிதையாக்கி அளித்துள்ளார்.
இலக்கணக்குறிப்பு
கற்பிக்கும் – பெயரொம்
பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்
உறுப்பிலக்கணம்
1. விழந்து – வீழ் + த் (ந்) + த் + உ
ஓழ் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
‘உ – வினையெச்ச விகுதி.
2. பறந்து – பற + த் (ந்) + த் + உ
பற – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.
3. பயின்று – பயில் (ன்) + p + உ
பயில் – பகுதி, ‘ல்’ ‘ன்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.
4. விரும்புகின்றேன் – விரும்பு + கின்று + ஏன்
விரும்பு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதிகள்
1. பள்ளிக்கூடம் – பள்ளி + கூடம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பள்ளிக்கூடம்)
2. ஐம்பதாண்டு – ஐம்பது + ஆண்டு
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (ஐம்பத் + ஆண்டு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஐம்பதாண்டு)
3. தட்டுக்கூடை – தட்டு + கூடை
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசபத மிகும்” (தட்டுக்கூடை)
4. சர்க்கரைப் பண்டம் – சர்க்கரை + பண்டம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (சர்க்கரைப்பண்டம்)
5. குறுஞ்செடி – குறுமை + செடி
“ஈறுபோதல்” (குறு + செடி); “இனமிகல்” (குறுஞ்செடி)
பலவுள் தெரிக (கூடுதல்)
1. கீழ்உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ. கொட்டும் பூக்களை – 1. குறிக்கச் சொல்கிறார்கள்,
ஆ. தியானிக்கும் நேரத்தை – 2. ஓவியமாகத் தீட்டச் செய்கிறார்கள்
இ. எறும்புகளின் வேகத்தை – 3. கவிதை எழுதச் சொல்கிறார்கள்
ஈ. மழைத்துளிகளின் வடிவத்தை – 4. எண்ணச் சொல்கிறார்கள்
– 5. அளக்கச் சொல்கிறார்கள்
1. அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3.
2. அ – 1 , ஆ – 3, இ – 5, ஈ – 2.
3. அ – 3, ஆ – 2, இ – 1, ஈ – 5.
4. அ – 4, ஆ – 1, இ – 5, ஈ – 2.
Answer:
அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3.
2. சரியான விடையைத் தெரிவு செய்க
‘பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதை இடம்பெற்ற நூல்……………….
அ) சுடுபூக்கள்
ஆ) கொடிவிளக்கு
இ) மறு பயணம்
ஈ) வாசனைப்புல்
Answer:
ஆ) கொடிவிளத்து
3. பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதையை எழுதியவர் ………………..
அ) மீ. ராசேந்திரன்
ஆ) இரா. மீனாட்சி
இ) அழகிய பெரியவன்
ஈ) சு. வில்வரத்தினம்
Answer:
ஆ) இரம் மீனாட்சி