11th Tamil Guide Unit 2.5
இயல் 2.5 ஐங்குறுநூறு
Book Back | Additional Question and Answers
11th Tamil Samacheer kalvi guide Lesson 2. Unit 2.5 Book Back and Additional Question Answers. இயல் 2.5 ஐங்குறுநூறு. +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 2 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 2 Full Answer Key.
11th Tamil Guide Unit 2 Book Back and Additional Question – Answers இயல் 2.5 ஐங்குறுநூறு
பவைகள் தெரிக (கூடுதல் வினாக்கள்)
1.பொருந்தாத ஒன்றைத் தோந்தெடுக்க.
அ) காயா
ஆ) குறிஞ்சி
இ) பிடவம்
ஈ) கொன்றை
Answer:
ஆ) குறிஞ்சி
2.‘முல்லைத்திணை’ பாடுவதில் வல்லவர்…………..
அ) ஓம்போகியார்
ஆ) பேயனார்
இ) அம்மூவனார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) பேயனார்
3.ஐங்குறுநூறு – பிரித்தெழுத, ……………….. என வரும்.
அ) ஐங் + குறுநூறு
ஆ) ஐந்து + குறுநூறு
இ) ஐந்து + குறுமை + நூறு
ஈ) ஐங்குறுமை + நூறு
Answer:
இ) ஐந்து + குறுமை + நூறு
4.ஐங்குறுநூறு சிற்றெல்லை ………………….
அ) மூன்றடி
ஆ) ஐந்தடி
இ) நான்கடி
ஈ) பதினோரடி
Answer:
அ) மூன்றடி
5.ஐங்குறுநூறு பேரெல்லை ……………….
அ) நான்கடி
ஆ) ஆறடி
இ) பன்னிரண்டடி
ஈ) முப்பதடி
Answer:
ஆ) ஆறடி
6.ஐங்குறுநூறைத் தொகுத்தவர் ………………….
அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
ஆ) பேயனார்
இ) புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
ஈ) பூரிக்கோ
Answer:
இ) புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
7.ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர்……………………
அ) உறையூர் முதுகண்ணன்
ஆ) மாந்தரஞ்சேரல் இரும்பொறை
இ) பாண்டியன் பெருவழுதி
ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
Answer:
ஆ) மாந்தரஞ்சேரல் இரும்பொறை
8.முல்லைநிலப் பூக்களில் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
அ) காயா கொன்றை
ஆ) நெய்தல் முல்லை
இ) குறிஞ்சி, வேங்கை
ஈ) செம்முல்லை பிடவம்
Answer:
இ) குறிஞ்சி, வேங்கை
9.தவறான இணையைத் தெரிவு செய்க.
திணை பாடிய புலவர்
குறிஞ்சி – கபிலர்
முல்லை – பேயனார்
மருதம் – ஓதலாந்தையார்
நெய்தல் – அம்மூவனார்
Answer:
மருதம் – ஓதலாந்தையார்
குறுவினாக்கள்
1.அலர்ந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
- அலர்ந்து – அலர் +திந்) + த் + உ
- அலர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
- உ – வினையெச்ச விகுதி.
சிறுவினாக்கள்
1.ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.
- ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை – முல்லை.
- முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் : இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
- முல்லைத் திணைக்குரிய முதற்பொருள் : நிலம் – காடும் காடு சார்ந்த நிலமும்; பெரும்பொழுது – கார்காலம்; சிறுபொழுது – மாலை.
- முல்லைத் திணைக்குரிய கருப்பொருள்கள்:
- தெய்வம் – திருமால்
- மக்கள் – தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்
- உணவு – வரகு, சாமை
- விலங்கு – முயல், மான், புலி
- பூ – முல்லை, தோன்றி
- மரம் – கொன்றை, காயா
- பறவை – காட்டுக்கோழி, மயில்
- ஊர் – பாடி, சேரி
- நீர் – காட்டாறு
- பறை – ஏறுகோட்பறை
- யாழ் – முல்லை
- பண் – முல்லை
- தொழில் – ஏறுதழுவல், நிரை மேய்த்தல்
ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள் :
- குறிஞ்சித்திணை – கபிலர்
- முல்லைத்திணை – பேயனார்
- மருதத்திணை – ஓரம்போகியார்
- நெய்தல்திணை – அம்மூவனார்
- பாலைத்திணை – ஓதலாந்தையார்
இலக்கணம் அறிவோம்
- கொண்டன்றால் (ஆல்) – அசைநிலை
- பேரமர்க் கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
- ஆடுகம் விரைந்தே – தன்மைப் பன்மை வினைமுற்று
- காயா கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
- போதவிழ் தளவொடு – (அவிழ் தளவு) – வினைத்தொகை
- அலர்ந்து கவினி, விரைந்து – வினையெச்சங்கள்
உறுப்பிலக்கணம்
- 1. அலர்ந்து – அலர் + த் (ந்) + த் + உ | அலர் – பகுதி, த்-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, உ -வினையெச்ச விகுதி.
- 2. ஆடுகம் – ஆடு + க் + அம் | ஆடு – பகுதி, க் – சந்தி, அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.
- 3. விரைந்து – விரை + த் (ந்) + த் + உ | விரை – பகுதி, த்-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைதலை, உ- வினையெச்ச விகுதி.
புணர்ச்சி விதிகள்
1. போதவிழ் – போது + அவிழ்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (போத் + அவிழ்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போதவிழ்)
2. பிடவலர்ந்து – பிடவு + அலர்ந்து
“முற்றும் அற்று ஒரோவழி” (பிடவ் + அலர்து) )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே பிடவலர்ந்து)
3. பூவணி – பூ + அணி
“ஏனை உயிர்வரின் வவ்வும்” (பூ + வ் + அணி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பூவணி)
கூடுதல் – குறுவினாக்கள்
2.‘முல்லைத்திணை’க்குரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் யாவை?
- முல்லைத்திணைக்குரிய சிறுபொழுது – மாலை; பெரும்பொழுது – கார்காலம்.
3.முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு கூறுவன யாவை?
- காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தவளம், பிடவம் ஆகியன, முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு குறிப்பிட்டுள்ளது.
4.ஐங்குறுநூற்றின் பாடல்களைப் பாடிய புலவர்கள் யாவர்?
- ஐங்குறுநூற்றில், குறிஞ்சித் திணையைக் கபிலரும், முல்லைத் திணையைப் பேயனாரும், மருதத் திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், பாலைத் திணையை ஓதலாந்தையாரும் பாடியுள்ளனர்.
கூடுதல் – சிறுவினாக்கள்
2.ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் முல்லைநில இயற்கை அழதை விவரிக்க.
ஐங்குறுநூற்றுப் பாடலில் இடம்பெறும் காடும் காடு சார்ந்த நிலமும் ‘முல்லை நிலம்’. கார்காலம் வந்து விட்டமையால் காயா, கொன்றை, நெய்தல் மூல்லை ஆகியவற்றின் மொட்டுகள் இதழ் விரிக்கச் செம்முல்லை, பிடவம் என்னும் தாவா கதைகள் பூத்துக் குலுங்கிக் காட்சியளிக்கின்றன.
அந்த முல்லை நிலத்தின் இயற்கை அழகைக் கண்ட தலைவன், தான் திரும்புவதாகக் கூறிப் பிரிந்து சென்ற கார்காலம் வருவதற்கு முரை தான் வந்து விட்டதைத் தலைவிக்கு உணர்த்த எண்ணி, அவற்றைப் பார்த்து மகிழ்ந்து, வரைந்து ஆட வருமாறு தலைவியை அழைக்கிறான்.
இல்லறம் சிறக்கப் பொருள் தேடி தலைவன் வேற்றூர் செல்வதைச் சங்கப் பாடல்கள் பேசும். தலைவன் திரும்பி வருவதற்குரிய காலத்தை, மக்கள் வாழ்வோடு இயைந்த மலர்கள் மலர்ந்து தலைவிக்கு அறிவிப்பதனை, ஐங்குறுநூற்றுப் பாடல் உணர்த்துகிறது.
3.ஐங்குறுநூறு – நூற்குறிப்புத் தருக.
ஐந்து + குறுமை பறு – ஐங்குறுநூறு.
இது, மூன்றடிச் சற்றெல்லையும், ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
திணை ஒன்பிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
இந்த சாலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.
ஐந்திணைகளில் ஒன்றான முல்லைத்திணையைப் பற்றிய பாடல் நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் பேயனார். இவர், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.