10th History Unit 10 Additional Questions

10th History Unit 10 Additional Questions

10th Social Science Samacheer kalvi guide – Unit 10 Additional Question – Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide History Unit 10 Answers Tamil Medium. SSLC Social Science 10th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 10. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்.  SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 10. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – Additional Question – Answers

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.

அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) தமிழ்

2.……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அ) 1999
ஆ) 1909
இ) 1990
ஈ) 1899

விடை: ஆ) 1909

3.தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.

அ) பிரான்ஸ்
ஆ) சமஸ்கிருதம்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) சமஸ்கிருதம்

4.சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

அ) 1996
ஆ) 1932
இ) 1923
ஈ) 1899

விடை: இ 1923

5.……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.

அ) பெரியார்
ஆ) காமராஜ்
இ) காந்திஜி
ஈ) நேரு

விடை: அ) பெரியார்

6.M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.

அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு
ஆ) கீழ் வகுப்பு
இ) மேல் வகுப்பு
ஈ) நடுத்தர வகுப்பு

விடை: அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

7.அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.

அ) ஆக்ரா
ஆ) கொல்கத்தா
இ) பம்பாய்
ஈ) எதுவுமில்லை

விடை: இ பம்பாய்

8.சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.

அ) M.C. ராஜா
ஆ) M. சிங்காரவேலர்
இ) அடிகள்
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) M. சிங்காரவேலர்

9.இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.

அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) இவையெல்லாம்

விடை: ஆ) தமிழ்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.

விடை:கருத்தியல்

2.தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.

விடை:தமிழ் மறுமலர்ச்சி

3.……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

விடை:பௌத்தம்

4.………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.

விடை:மறைலை அடிகள்

5.நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.

விடை:இந்து சமய அறநிலை

6.பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.

விடை:ஆணாதிக்க

7.1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.

விடை:ஆதிதிராவிட மகாஜன சபை

8.……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

விடை:பெண்களின் விடுதலை

9.………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.

விடை:மதராஸ் தேவதாசி சட்டம்

10.மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.

விடை:15 ஆண்டுகள்

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1.கூற்று : மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும்.
காரணம் : பண்பாடு மற்றும் உணர்வுகளோடு இயைந்திருப்பதால்.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

விடை: இ காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

2.கூற்று : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார். ‘மதராஸ் தேவதாசி’ சட்டத்தை இயற்றினார்.
காரணம் : 1949ல் இச்சட்டம் இயற்றப்பட்டது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விடை: ஆ) காரணம் சரி, கூற்று தவறு

10th History Unit 10 Additional Questions

சுருக்கமான விடையளிக்கவும்.

1.எந்தெந்த துறைகளில் மனிதநேயம் படைப்பாற்றலைத் தூண்டியது?

  • சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் படைபாற்றலைத் தூண்டி எழுப்பியது.

2.நீதிக்கட்சியின் செயல்பாடுகளைக் கூறு.

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

3.இரட்டைமலை சீனிவாசன் பற்றிக் கூறு.

  • இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக
  • ராவ்சாகிப் (1926),
  • ராவ் பகதூர் (1936),
  • திவான் பகதூர் (1936)
  • ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.

4.பெண்கள் இயக்கங்கள் யாவை?

  • இந்தியப் பெண்கள் சங்கம் (WIA)
  • அகில இந்திய பெண்கள் மாநாடு (ALWC)

5.சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடுக.

  • முத்துலட்சுமி அம்மையார்,
  • நாகம்மை ,
  • கண்ணம்மா,
  • நீலாவதி,
  • மூவலூர் இராமாமிர்தம்,
  • ருக்மணி அம்மாள்,
  • அலமேலு மங்கை தாயாரம்மாள்,
  • நீலாம்பிகை மற்றும்
  • சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

விரிவான விடையளிக்கவும்.

1.பெண்களின் இயக்கங்களைப் பற்றி விவரிக்க.

  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன.
  • அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம், அகில இந்தியப் பெண்கள் மாநாடு ஆகியவை முக்கியமானவையாகும்.
  • இந்தியப் பெண்கள் சங்கம் என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது.
  • இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டனர்.
  • பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
  • பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினார்.
  • தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டு கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.
  • இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர்.
  • முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

Leave a Reply