10th Tamil 1st Revision Test Full Answer key
10th Tamil first Revision Original Question Paper and Answer key ( 09-02-2022) PDF Download. TN 10th Standard Official 1st Revision Test Question Paper and Answer key 2022. 10th Standard Original Revision Exam Question Paper with Answer key February 2022 both Tamil Medium and English Medium Download PDF. 10th and 12th அசல் வினாத்தாள். SSLC Government Official 1st Revision Test Original Question Paper Upload Daily End of the Particular Days also update Answer key as soon as possible. HSC 2nd Year Government Official 1st Revision Test Original Question Paper. 10th 1st Revision Test Original Question Paper 2022. Download PDF.
1.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை
(அ) குலைவகை
(ஆ) மணிவகை
(இ) கொழுந்துவகை
(ஈ) இலைவகை
2.”பெரியமீசை” சிரித்தார் ” அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது ?
(அ) பண்புத்தொகை
(ஆ) உவமைத்தொகை
(இ) அன்மொழித்தொகை
(ஈ) உம்மைத்தொகை
3.எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
(அ) எந் +தமிழ்+நா
(ஆ) எம்+தமிழ்+நா
(இ) எந்த+தமிழ் + நா
(ஈ) எந்தம்+தமிழ்+நா
4.கீரி பாம்பு – இச்சொல்லில் மறைந்துள்ள தொகையைத் தேர்க.
(அ) உம்மைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஆ) வினைத்தொகை
(ஈ) பண்புத்தொகை
5.மொழிஞாயிறு என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர்:
(அ) பெருஞ்சித்திரனார்
(ஆ) பாரதியார்
(இ) தமிழழகனார்
(ஈ) தேவநேயப்பாவாணர்
6.பொதுமொழியைத் தேர்வு செய்க.
(அ) கண்ணன் வந்தான்
(ஆ) எட்டு
(ஈ) அம்மா
(இ) படித்தான்.
7.தாள், தண்டு, கோல், தூறு, கழி முதலிய தமிழ்ச்சொற்கள் குறிப்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) தாவரங்களின் கிளைப்பகுதியைக் குறிக்கும் சொற்கள்
(ஆ) இலைகளின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள்
(இ) தாவரங்களின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்
(ஈ) தாவரங்களின் காய்ந்த பகுதியைக் குறிக்கும் சொற்கள்
8.”நாற்றிசையும் செல்லாத நாடில்லை” ”
ஐந்து சால்பு ஊன்றிய தூண்”
என்ற செய்யுள் அடிகளில் உள்ள எண்ணுப்பெயர்களுக்கான தமிழ் எண்ணுருக்களைத் தேர்க.
(அ) அ, எ
(இ) ங,உ
(ஆ) கங
(ஈ) ச. ரு
9.இருக்கும்போது உருவமில்லை இல்லாமல் உயிரினம் இல்லை : இப்புதிருக்கான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) காற்று
(ஆ) புதுமை
(இ) காடு
(ஈ) விண்மீன்
10.’தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !” பாடல் அடியில் ‘தென்னன்” என்று குறிப்பிடப்படும் மன்னன்:
(அ) சேர மன்னன்
(ஆ) பாண்டிய மன்னன்
(இ) சோழ மன்னன்
(ஈ) பல்லவ மன்னன்
11.உணவு குறித்த பழமொழியைத் தேர்க.
(அ) காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
(ஆ) அக்கரைக்கு இக்கரை பச்சை
(இ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
(ஈ) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
II பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
காற்றே, வா.
எமது உயிர்- நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்து போய், அதனை அவித்து விடாதே. பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
நெடுங்காலம் மெதுவாக, நல்ல லயத்துடன்,
நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.
12.உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் ” – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள்:
(அ) உருவகம், எதுகை
(ஆ) மோனை, எதுகை
(இ) முரண், இயைபு
(ஈ) உவமை, எதுகை
13. “லயத்துடன்” என்ற சொல்லின் பொருள்:
(அ) சீராக
(ஆ) வேகமாக
(இ) தொலைவாக
(ஈ) இனிமையாக
14. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க.
(அ) தருமாறு, விடாதே
(இ) வீசு,விடாதே
(ஆ) நெடுங்காலம், கொண்டிரு
(ஈ) அவித்துவிடாதே, மடித்துவிடாதே
15.இப்பாடலின் ஆசிரியர் :
(அ) பெருஞ்சித்திரனார்
(ஆ) பாரதிதாசன்
(இ) பாரதியார்
(ஈ) தமிழழகனார்
பகுதி – II (மதிப்பெண்கள் : 18)
பிரிவு – 1
குறிப்பு: எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
21-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக
16. வசன கவிதை – குறிப்பு வரைக.
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க :
(அ) தேவநேயப் பாவாணர் உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
(ஆ) பூவின் தோற்ற நிலை அரும்பு எனப்படும்.
18. பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைத்த நூல்களுள் எவையேனும் இரண்டின் பெயர்களை எழுதுக.
19. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகடலங்கள் இரண்டின் பெயர்களை எழுதுக.
20. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களை எழுதுக.
21. ‘எப்பொருள் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு 2
குறிப்பு : எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடைஅளிக்கவும்.
22. “எழுது என்றாள்” என்பது விரைவு காரணமாக “எழுது எழுது என்றாள்” என அடுக்குத் தொடரானது.
“சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்
23.நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்பை எழுதுக.
(அ) கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்.
(ஆ) குயில்களின் கூவலிசை,இலைகளின் அசைவுகள், குறைக்காற்றின் ஆலோலம்.
24.விடுபட்ட எழுத்துகளை நிரப்ப அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள நூலின் பெயரை எழுதுக.
இ-கு (பறவையிடம் இருப்பது)
கு-தி (சிவப்பு நிறத்தில் இருப்பது)
அ-கா (தங்கைக்கு மூத்தவள்)
ம- (அறிவின் மறுபெயர்)
பட -(நீரில் செல்வது )
வா-(மன்னரிடம் இருப்பது)
25.”வேங்கை” என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
26.சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
‘தேணிலே ஊரி ய செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதி காறமதை ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம் ஓதி யுனர்ந்தின் புருவோமே’
27. கரும்பு தின்றான், வீசு தென்றல் – இவற்றின் தொகை வகையை எழுதுக.
28. கலைச்சொற்கள் தருக.
(அ) Discussion
(ஆ) Modern literature
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா. சொற்களை இணைத்து நான்கு புதிய சொற்களை உருவாக்குக. விலங்கு, சேய்.
தேன், விளக்கு. மழை,விண்,மணி,மேகலை. வான்,பொன்,பூ.
பகுதி -iii
(மதிப்பெண்கள் : 18)
பிரிவு 1
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்கவும்.
29.”புளியங்கன்று ஆழமாக நடட்டப்பட்டுள்ளது”.
-இதுபோல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்கவும்
30. நில வகைகளைக் குறிக்கும் சொற்கள் மூன்றினையும், நீர்நிலைகளின் வகைகளைக் குறிக்கும் சொற்கள் மூன்றினையும் எழுதுக.
31.உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறவொழுக்கங்களும் அமைந்திருக்கும். நாட்டின் தனிப்பெரும் நாகரி கத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். திருந்திய மக்களை பற்ற உயிரிகளினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும்.
(அ) மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக்காட்டுவது எது?
(ஆ) எதனால் பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர்?
(இ) மொழி எதனை அளந்தறிவதற்குச் சிறந்த வழியாக உள்ளது ?
10th Tamil 1st Revision Test Full Answer key
பிரிவு 2
குறிப்பு எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
34-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
32. எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எழுதுக.
33. காற்றே. வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா
(அ) பாடலில் இடம் பெற்றுள்ள மயலுறுத்து என்ற சொல்லின் பொருளை எழுதுக.
(ஆ) அடிமோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
(இ) பாரதியார் எதனை வாசனையுடன் வரச் சொல்லுகிறார்?
34. அடிபிறழாமல் எழுதுக.
(அ) “தென்னன் மகளே!” எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்.
(அல்லது)
(ஆ) அன்னை மொழியே!” எனத் தொடங்கி “மண்ணுலகப் போரசே!” என முடியும் “அன்னை மொழியே பாடல்.
பிரிவு – 3
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்கவும்.
35)ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இக்குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு
36.”அறிந்தது. அறியாதது. புரிந்தது, புரியாதது, தெரிந்தது. தெரியாதது. பிறந்தது. பிறவாதது’இவை அனைத்தையும் யாம் அறிவோம். எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் அது பற்றி உமது அறிவுரை.
-அடிக்கோடிட்ட வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
37. “உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்” இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
பகுதி – IV (மதிப்பெண்கள் : 25)
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5 × 5 =25
38)(அ) ‘எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரி க்கும்” என்ற பாடலடியைக் கொண்டு, ஐந்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவதற்கான உரைக்குறிப்பு எழுதுக.
(அல்லது)
(ஆ) காற்றே வா! என்னும் பாரதியாரின் வசன கவிதை கருத்தைச் சுருக்கமாகஎழுதுக.
39) (அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
(ஆ) புதிதாகத் திறன்பேசி வாங்கியுள்ள தங்கைக்கு அதை முறையாகப் பயன்படுத்தும் வழிகாட்டுதல்களைக் கூறிக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கருத்தினை ஐந்து தொடர்களில் எழுதுக.
41. விழுப்புரம் மாவட்டம் சுப்பையா நகர், சிதம்பரனார் தெருவில் உள்ள 21 ஆம் 4. இலக்க வீட்டில் குடியிருக்கும் திருவுடையான் மகள் எழிலி, கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர், தம்மை எழிலியாகக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. (அ) அன்றாட வாழ்வில் இன்சொல் பேசுவதால் ஏற்படும் நன்மைகள் -ஏதேனும் ஐந்தினை எழுதுக -.
(அல்லது)
(ஆ) மொழிபெயர்க்க
The Golden Sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds starts their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze, The breeze gently blows everywhere and makes everything pleasant.
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான வினா.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடைத் தருக. பாரதியின் வசனநடை – சிட்டுக்குருவி சிறுதானியம் போன்ற மூக்கு: சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு: கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண். அ) சிட்டுக்குருவியின் முதுகு குறித்து பாரதி கூறுவது என்ன?
(ஆ) பாரதியின் வீட்டில் எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன?
(இ) சிட்டுக்குருவியின் மூக்கு எப்படி இருந்தது?
ஈ) உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடரை எழுதுக.
(உ) உமக்குப் பிடித்த பொருள் குறித்து வசன நடையில் இரண்டு வரிகள் ழுதுக.
பகுதி V. (மதிப்பெண்கள் : 24)
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.
43. (அ) தமிழ், சொல் வளமுடையதென்றும் தமிழ்நாடு பொருள் வளமுடையதென்றும் கூறுவதற்கான காரணங்களை விளக்குக.
(அல்லது)
(ஆ) தமிழ் மொழியின் தொன்மை, இலக்கிய வளம், சொல்வளம் குறித்து ஒரு பக்க அளவில் எழுதுக.
44. (அ) பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
(ஆ) புதிதாக வந்த மனிதனிடம் அன்னமய்யா நேசத்துடன் நடந்து கொண்டதையும், அவருக்கு உணவளித்து மகிழ்ந்ததையும் விரிவாக எழுதுக.
45. (அ) குமரிக் கடல்முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
(ஆ) முன்னுரை – விண்நீர் உயிர் நீர் விசும்பன் துளி பசும்புல் நுனி மழைநீரைச் சேமித்தல் நம் கடமை – முடிவுரை. குறிப்புகளைக் கொண்டு “மழைநீர் சேகரிப்பு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.