12th Botany Unit 9 Lesson 7 Additional 3 Marks
TN 12th Bio-Botany Unit 9, 7th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 7 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 7 . சூழல்மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 7 Book Back Answers.
12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 7. சூழல்மண்டலம் – Additional 3 Marks
III. மூன்று மதிப்பெண் வினாக்கள்
1.ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு என்றால் என்ன?
- தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குக் கிடைக்கக் கூடிய ஒளியின் அளவு, ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு எனப்படுகிறது.
- இது 400-700 nm க்கு இடைப்பட்ட அலை நீளங்களைக் கொண்ட கதிர்வீச்சாகும்.
- தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய அதிக அளவில் நீலம் மற்றும் சிவப்ப, நிற ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன.
- 2-10% சூரிய ஒளி மட்டுமே ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.
2.பசுமை கார்பனை, சாம்பல் கார்பனிலிருந்து வேறுபடுத்துக.
பசுமை கார்பன்
- பசுமை கார்பன் உயிர்கோளத்தில் சேமிக்கப் படுகிறது.
- இது ஒளிச்சேர்க்கை மூலம் பசுந்தாவரங்களினால் உருவாகிறது.
சாம்பல் கார்பன்
3.முதல்நிலை உற்பத்தித்திறனை இரண்டாம் நிலை உற்பத்தித்திறனிலிருந்து வேறுபடுத்துக.
- சாம்பல் கார்பன் தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன்(நிலக்கரி, எண்ணெய், உயிரி வாயுக்கள்)
- இது மட்காதல் மூலம் மட்குண்ணிகளால் பூமிக்கடியில் உருவாகிறது.
3.முதல்நிலை உற்பத்தித்திறனை இரண்டாம் நிலை உற்பத்தித்திறனிலிருந்து வேறுபடுத்துக.
முதல்நிலை உற்பத்தித்திறன்
4.”ஒவ்வொரு ஆற்றல் மாற்றத்தின் போதும் அமைப்பில் உள்ள கட்டிலா ஆற்றல் அளவு குறைக்கப் படுகிறது”. இக்கூற்று எதைக் குறிப்பிடுகிறது?
- தற்சார்பு ஊட்ட உயிரிகளினால் உற்பத்தி செய்யப்படும் வேதியாற்றல் (அ) கரிம கூட்டுப்பொருட்கள்
- இது ஒளிச்சேர்க்கை மற்றும் வேதிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இது பாக்டீரியங்கள் முதல் மனிதன் வரை உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்கும் மூலமாகும்.
இரண்டாம் நிலை உற்பத்தித்திறன்
- இது நுகர்வோர்கள் (அ) சார்பூட்ட உயிரிகளால் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றல்
- இது நுகர்வோர்களால் தற்சார்பு ஊட்ட உயிரிகளிடமிருந்து பெறப்பட்டது.
- இது நுகர்வோர்களில் சேமிக்கப்படும் ஆற்றல்
4.”ஒவ்வொரு ஆற்றல் மாற்றத்தின் போதும் அமைப்பில் உள்ள கட்டிலா ஆற்றல் அளவு குறைக்கப் படுகிறது”. இக்கூற்று எதைக் குறிப்பிடுகிறது?
- இது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியை கூறுகிறது.
- ஆற்றல் மாற்றம் 100% முழுமையாக இருக்க முடியாது.
- ஆற்றல் ஒரு உயிரினத்திலிருந்து மற்றொன்றிற்கு உணவு வடிவில் கடத்தப்படும் பொழுது அதிகப் படியான ஆற்றல் வெப்பமாக சிதறடிக்கப் படுகிறது. (எ.கா) பத்து விழுக்காடு விதி.
5. பத்து விழுக்காடு விதி என்றால் என்ன?
- இந்த விதி லின்டிமேன் (1942) என்பவரால் முன் மொழியப்பட்டது.
- உணவு வழி ஆற்றல் ஒரு ஊட்ட மட்டத்தி லிருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் போது.10% மட்டுமே ஒவ்வொரு ஊட்ட மட்டத்திலும் சேமிக்கப்படுகிறது.
- மீதமுள்ள ஆற்றல் 90% சுவாசித்தல், சிதைத்தல் நிகழ்வின் மூலம் வெப்பமாக இழக்கப்படுகிறது.
- எனவே இது பத்து விழுக்காடு விதி எனப் படுகிறது.
6.அனைத்து வகையான சூழல்மண்டலத்திற்கும் பொதுவான உணவுச்சங்கிலி எது? ஏன்? (அ) மட்குப்பொருள்
- இந்த வகையான உணவுச்சங்கிலி இறந்த கரிமப் பொருட்களிலிருந்து தொடங்குகிறது.
- இது முக்கியமான ஆற்றல் மூலமாக உள்ளது.
- கரிமப்பொருட்கள் பொதுவான தாவர, விலங்கு கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. எனவே இந்த உணவுசங்கிலி அனைத்து சூழலமண்டலத் திற்கும் பொதுவானது.
8. உணவு வலையை படிப்பதனால் ஏற்படும் முக்கியத் துவம் யாது? (அ) உணவு வலையின் முக்கியத் துவம் யாது? (அ) உணவு வலையை பாதுகாப்ப தினால் ஏதேனும் பயன் உள்ளதா?
- நேரடி இடைச்செயல் எனப்படும் சிற்றினங்களுக் கிடையே நிகழும் இடைவிளைவை விளக்கவே உணவு வலை உருவாக்கப்படுகிறது.
- வேறுபட்ட சிற்றினங்களுக்கிடையேயுள்ள முக தொடர்புகளை விளக்க பயன்படுகிறது. மறை
- நில மற்றும் நீர்வாழ் சூழல் மண்டலங்களின் வேறுபட்ட ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப் படுத்த இது பயன்படுகிறது.
9. எண்ணிக்கை பிரமிடில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படும் பிரமிடை எழுதுக?
- புல்வெளி மற்றும் குளச்சூழல் மண்டலம் ஆகிய வற்றின் பிரமிட்கள் நேரானவை,
- வனச்சூழல் மண்டலத்தில் எண்ணிக்கை பிரமிட்கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.
- ஒட்டுண்ணி சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் எப்பொழுதும் தலைகீழானது.
10. உயிரித்திரன் பிரமிடில் காணப்படும் வெவ்வேறுவகையான (அ) வடிவமான பிரமிடை எழுதுக?
- சூழல் மண்டலம் வடிவம்
- புல்வெளி மற்றும் வனச்சூழல் மண்டலம் நேரான பிரமிட்
- குளச்சூழல் மண்டலம் – தலைகீழ் வடிவ பிரமிட்
11.உயிரித்திரள் பிரமிடில் புல்வெளி மற்றும் வனச் சூழல் மண்டலத்தில் பிரமிட்கள் ஏன் நேராக உள்ளன?
- புலவெளி மற்றும் வனச்சூழல் மண்டலத்தில் உயிரிதிரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங் களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் வரை படிப்படியாக குறைகிறது.
- எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேராக உள்ளது.
12.உயிரித்திரன் பிரமிடில் குளச்சூழல் மண்டலம் தலைகீழ் வடிவத்தில் உள்ளது ஏன்?
- குளச்சூழல் மண்டலத்தில் பிரமிட்டின் அடிப் பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் நுண்ணுயிரி களாக குறைவான உயிரித்திரளை கொண்டு உள்ளது.
- உயிரித்திரள் மதிப்பு பிரமிட்டின் இறுதிவரை படிப்படியாக அதிகரிக்கின்றது. எனவே உயிரித்திரள் பிரமிட் குளச்சூழல் மண்டலத்தில் தலைகீழாக உள்ளது.
13. மட்காதல் மற்றும் கனிமமமாதலை வேறுபடுத்து
மட்காதல்
- எளிமையாக்கப்பட்ட சிதைவுக் கூளங்கள் கடுமையான படிக உருவமற்ற பொருளான மட்காக மாற்றமடையும் செயலுக்கு மட்காதல்
- இது அதிக நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் பெற்றிருக்கிறது.
- இது ஊட்டச்சத்து தேக்கமாகக் கருதப் படுகிறது.
கனிமமாதல்
- மண்ணின் கரிம மட்கிலிருந்து கனிய ஊட்டச்சத்துக் களை வெளியேற்றுவதில் ஈடுபடுகின்றன.
- சில நுண்ணுயிரிகள் ஊட்டச்சத்துக்களை வெளியேற்றுவதில் ஈடுபடுகின்றன.
- இவை களிம ஊட்டச்சத்து வெளியேற்றமாக உள்ளது.
14. சிதைமாற்றம் (catabolism) வரையறு:
- சிதைப்பவைகள் செல் வெளி நொதிகள் சில வற்றை அவற்றின் சுற்றுப்புறத்தில் சுரந்து அங்குள்ள சிக்கலான கரிம மற்றும் கனிமச்சேர்மங் களை எளிய ஒன்றாக உடைக்க உதவுகின்றன. இது சிதைமாற்றம் எனப்படும்.
15.கசிந்தோடுதல (அ) வடிதல் என்றால் என்ன? சிதைத்தல் செயல்முறையில் எந்த செயல்முறை மண்ணின்கீழ் அடுக்கை வளமானதாக மாற்றுகிறது?
- நீரில் கரையும் கரிம மற்றும் கனிமப் பொருட்கள் மண்ணின் மேற்பரப்பிலிருந்து கீழ் அடுக்கிற்கு இடப்பெயர்ச்சி அடைதலுக்கு கசிந்தோடுதல் (அ) வடிதல் என்று பெயர்.
16. உயிரி புவி வேதிச்சுழற்சி என்றால் என்ன?
- சூழல்மண்டலம் (அ) உயிர்கோளத்திற்குள்ளே யான ஊட்டங்களின் சுழற்சி உயிரி புவி வேதிச் சுழற்சி (அ) பொருட்களின் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
17. எந்த சுழற்சி படிம சுழற்சி என்று அழைக்கப் படுகிறது? ஏன்?
- பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் ஆகியவற்றின் சுழற்சிகள் படிம சுழற்சியில் அடங்கும்.
- இவை உயிரிக்கோளத்தில் காணப்படுவது இல்லை. ஆனால் இவை பாறை படிவுகள், கடல் படிவுகள், கடல் அருகு வாழ் பறவை எச்சங்கள் போன்றவற்றில் உள்ளன.
18. கார்பன் சுழற்சி என்றால் என்ன?
- உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நடைபெறும் கார்பன் ஓட்டத்திற்கு கார்பன் சுழற்சி என்று பெயர்.
- உயிரினங்களுக்கும் வளிமண்டலத்திற்கும் இடையில் கார்பன் சுழற்சியடைதல் ஒளிச் சேர்க்கை மற்றும் செல்சுவாசம் ஆகிய இரு வாழ்வியல் செயல்பாடுகளின் பரஸ்பர விளை வாகும்.
19. சூழல்மண்டலத்தின் மீள்திறன் (அ) சூழல்மண்டல வீரியம் என்றால் என்ன?
- சூழல்மண்டலம் தீ, வெள்ளம், கொன்றுண்ணுதல் நோய்த்தொற்று வறட்சி முதலியவற்றின் பாதிப் பால் அதிக அளவிலான உயிரித்திறளை இழக்கிறது.
- எனினும் சூழல்மண்டலம் சேத எதிர்ப்பையும் விரைவான மீட்சித்திறனையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
- சூழல்மண்டலத்தின் இத்திறனே மீள்திறன் (அ) வீரியம் எனப்படுகிறது.
20. பசுமைக்குச் செல்லும் விதமாக நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளும் பண்புகள் யாவை?
- பயன்படுத்தாத போது தண்ணீர் குழாயை மூடுதல்.
- பயன்படுத்தாதபோது மின்சாதனப் பொருட்களை அணைத்து வைத்தல்.
- நெகிழியை ஒரு போதும் பயன்படுத்தாமல் அவற்றிற்கு மாற்றாக உயிரிய சிதைவடையும் பொருட்களை பயன்படுத்துதல்.
- சூழல நட்புடைய தொழில் நுட்பத்தையும் பொருட்களையும் எப்போதும் பயன்படுத்துதல்.
23. கார்பனின் வகைகள் யாவை?
- பசுமைக் கார்பன் : உயிர்க்கோளத்தில் சேமிக்கப் படும் கார்பன் (ஒளிச்சேர்க்கை செயல் மூலம் )
- சாம்பல் கார்பன் : தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன் பூமிக்கடியில் படிந்திருக்கும்.
- நீலகார்பன் : வளிமண்டலம் மற்றும் கடல்களில் சேமிக்கப்படும் கார்பன்
- பழுப்பு கார்பன்: தொழில் ரீதியாக உருவாக்கப் படும் காடுகளில் சேமிக்கப்படும் கார்பன் (வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் மரங்கள்)
- கருமைக் கார்பன் : வாயு, டீசல் என்ஜின் நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப் படும் கார்பன்