12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany PURE SCIENCE 1st Lesson Additional 5 Marks

12th Botany PURE SCIENCE 1st Lesson Book Back Answers

12th Botany PURE SCIENCE 1st Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 6, 1st Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 6, 1st lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.

12th Bio-Botany Unit 6 | Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் – Book Back Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium
VI. 5 மதிப்பெண்கள்
1. மகரந்தத்துக அமைப்பை விரிவாக விவரி
அமைப்பு : 
  • மகரந்தத்துகளில் புரோட்டோபிளாசம் அடர்ந்த  சைட்டோபிளாசத்தையும் மையத்தில் அமைந்த உட்கருவையும் புறச்சுவர்களையும் கொண்டுள்ளது.

இன்டைன்: 

  • இதன் சுவர் உட்புற இன்டைன் (intine) மற்றும் வெளிப்புற எக்சைன் (extine) என இரு அடுக்கு களைக் கொண்டது.
  • இன்டைக் பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், செல்லுலோஸ், காலோஸ் மற்றும் புரதங்கள் கொண்டு சீரான மெல்லிய தடிப்புடன் காணப்படும்.

எக்சைன் (வெளிச்சுவர்) :

  • எக்சைன் செல்லுலோஸ், ஸ்போரோ பொலினின். போலன்கிட் கொண்டு தடித்த காணப்படும். எக்சைன் சீரற்ற தடிப்புகளுடன் சில பகுதிகளில் மெல்லியதாகக காணப்படும்.
  • இப்பகுதிகள் சிறிய வட்ட வடிவில் இருந்தால் வளர்துளைகள்  என்றும் சற்று நீண்டு காணப்பட்டால் பிளவுப் பள்ளங்கள் என்றும்,   அழைக்கப் படுகின்றன.இவை மகரந்தத்துகளின் முளைத்தலுடன் தொடர்புடையவை.
  • வளர்துளைப் பகுதியில் ஸ்போரோபொலனின் பொதுவாகக் காணப்படுவதில்லை
  • எக்சைனின் புறப்பரப்பு மென்மை யாகவோ அல்லது பலவகை அலங்கார பாங்குகளுடனும் உள்ளது. (தடி வடிவம், சிறு குழியுடைய, கரணை போன்ற சிறு புள்ளி போன்ற)
  • இவை தாவரங்களை அடையாளம் கண்டறியவும் வகைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
வடிவம்:

  • மகரந்தத்துகளின் வடிவம் சிற்றினத்திற்கு சிற்றினம் மாறுபடுகிறது. கோளம், நீள்கோணம், கதிர்கோல், மடல், கோண அல்லது பிறை வடிவம் என பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.

அளவு :

  • மகரந்தத்துக்களின் அளவு 10 மைக்ரோ மீட்டர் (மயோசோடிஸ்) முதல் 200 மைக்ரோ மீட்டர் (குக்கர் பிட்டேசி மற்றும் நிக்டாஜினேசி குடும்பத் தாவரங்கள்) வரை வேறுபடுகின்றன.

ஸ்போரோபொலினின் :

  • சுவர்ப்பொருளான ஸ்போரோபொலினின் உருவாக மகரந்தத்துகளின் சைட்டோ பிளாசம் மற்றும் டபீட்டம் பங்களிக்கிறது.இது கரோட்டினாய்டிலிருந்து பெறப்படுகிறது.
  • இது இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மையுடையது. அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மை, வீரியமிக்க அமிலம், காரம் மற்றும் நொதிகளின் செயல்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
  • எனவே தொல்லுயிர் புதைப்படிவுகளில் மகரந்தத்துகள் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க இதுவே காரணமாகும். மகரந்தப் பையிலி ருந்து சூலக முடி வரையிலான மகரந்தத் துகளின் பயணத்தை இது பாதுகாப்பான தாக்குகிறது.

போலன்கிட்:

  • போலன்கிட் உருவாக்கத்தில் டபீட்டம் பங்களிக்கிறது. கரோட்டினாய்டு அல்லது ப்ளேவோனாய்ட் இதற்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது.
  • இது மகரந்தத் துகள்களின் புறப்பரப்பில் காணப் படும் பிசுபிசுப்பான பூச்சு கொண்ட எண்ணெய் அடுக்காகும். இது பூச்சிகளைக் கவர்வதுடன் புற ஊதாக்கதிர்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
2. மலரின் பெண் இனப்பெருக்கம் மற்றும் சூலக வட்டம் பற்றி விவரி.
  • சூலக வட்டம் மலரின் பெண் இனப் பெருக்க உறுப்பாகும். சூலகவட்டம் என்ற சொல் மலரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூலக அலகுகளைகக் குறிக்கிறது.
  • சூலசு அலகு, சூலகப்பை, சூலகத் தண்டு சூலகமுடி ஆகிய பகுதிகளைக் கொண்டது.
  • சூலக அலகு (pistil) சூலக இலையிலிருந்து பெறப்படுகிறது.
  • சூலகம் என்ற சொல் சூல்கள் கொண்ட பகுதியைக் குறிக்கிறது.

சூலகமுடி: 

  • மகரந்தத்துகள்களை ஏற்கும் பரப்பாகும்.

சூலகத்தண்டு:

  • சூலகமுடிக்குக் கீழாக காணப்படும் நீண்ட மெல்லிய பகுதி சூலகத் தண்டாகும்.

சூற்பை :

  • சூலக அலகின் பருத்த அடிப்பகுதி சூலகமாகும்.
  • சூலலொட்டுத்திசுவால் இணைக்கப் பட்டுள்ள சூல்கள் சூலக அறையினுள் அமைந்துள்ளன. மலர்த்தோற்றுவியின் நுனியில் தோன்றும்
  • ஆக்குத்திசுவிலிருந்து சூலக அலகு தோன்றுகிறது. இது துரிதமாக வளர்ந்து சூலகம், சூலகத்தண்டு மற்றும் சூலகமுடியாக வேறுபாட்டைகிறது.
  • சூற்ப்பையின் சூலொட்டுத்திசுவிலிருந்து சூல்கள் அல்லது பெரு வித்தகங்கள் தோன்றுகின்றன. ஒன்று (நெல், மா) முதல் பல (பப்பாளி, தர்பூசணி, ஆர்க்கிட்கள்) சூல்களைக் கொண்டிருக்கும்.

3. தாவரங்களின் கருப்பையின் அமைப்பை விவரி. 

  • கடைசி உட்கரு பகுப்பிற்கு பின் செல் குறிப்பிடத்தக்க நீட்சியடைந்து பை போன்ற அமைப்பைத் தருகிறது.
  • இதன் தொடர்ச்சியாக கருப்பை செசல் அமைப்பை தருகிறது.
  • சூல்துளைப் பகுதியிலுள்ள நான்கு உட்கருக்களில் மூன்று முட்டை சாதனமாக மாறுகின்றன. நான்காவது உட்கரு மைய செல்லின் (centre cell) சைட்டோபிளாசத்தில் தனித்து காணப் பட்டு மேல் துருவ உட்கருவாகிறது. பகுதியிலுள்ள நான்கு உட்கருக்களில்
  • சலாசா மூன்று எதிரடிச் செல்களாகவும் (antipodal cells) ஒன்று கீழ்துருவ உட்கருவாகவும் ஆகிறது.
  • தாவரங்களுக்கு ஏற்ப இரண்டு துருவ உட்கரு (polar nuclei) இணையாமல் அல்லது இணைந்து இரண்டாம் நிலை உட்கருவாக (secondary nucleus) (மைய செல்லுக்குள்) மாறுகிறது.
  • முட்டை சாதனத்தின்  (egg apparatus) மையத்தில் ஒரு முட்டை செல்லும் அதன் இரு பக்கங்களிலும் சினர்ஜிட்களும் அமைந்துள்ளன.
  • சினர்ஜிட்கள் வேதியீர்ப்பு பொருட்களைச் சுரப்பதினால் மகரந்தக்குழாயை ஈர்க்க உதவுகின்றன.
  • சினர்ஜிட்களில் உள்ள நூலிழை சாதனம் சூல்திசுவிலுள்ள ஊட்டம் கருப்பைக்கு உறிஞ்சிக் கடத்துவதற்கு உதவுகிறது.
  • மேலும் மகரந்தக் குழாய் முட்டையை நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு 7 செல்கள் கொண்ட 8 உட்கரு பெற்ற கருப்பை உருவாகிறது.

4. கருவுறுதலுக்கு பின் மலரின் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

கருவுறுதலுக்கு முன் பாகங்கள்

  1. புல்லி இதழ்கள், அல்லி இதழ்கள், மகரந்தத் தாள்கள், சூலகத்தண்டு மற்றும் சூலகமுடி
  2. சூலகம்
  3. சூல்
  4. முட்டை
  5. சூலகக்காம்பு
  6. சூல்துளை
  7. சூல்திசு
  8. சூலக வெளியுறை
  9. சூலக உள்ளுறை
  10. சினர்ஜிட் செல்கள்
  11. இரண்டாம்நிலை உட்கரு
  12. எதிரடி செல்கள்

கருவுறுதலுக்கு பின் நிகழும் மாற்றங்கள்

  1. பொதுவாக உதிர்ந்து விடுகின்றன.
  2. கனி
  3. விதை
  4. கருமுட்டை
  5. விதைக்காம்பு
  6. விதைத்துளை (CO2 மற்றும் நீர் கடத்த)
  7. பெரிஸ்பெர்ம்
  8. விதை வெளியுறை
  9. விதை உள்ளுறை
  10. அழிந்துவிடுகின்றன
  11. கருவூண் திசு
  12. அழிந்துவிடுகின்றன

5. கருவுறா இனப்பெருக்கம் என்றால் என்ன? அதன் யாவை?

  • ஆண்,பெண் கேமீட்கள் இணைவின்றி  நடைபெறும் இனப்பெருக்கம் கருவுறா இனப்பெருக்கம்.
  • அப்போமிக்ஸிஸ் என்ற சொல் 1908 ஆம் ஆண்டு விங்களர் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. இது வழக்கமாக நடைபெறும் பால் இனப்பெருக்க முறைக்குப் பதிலாக நடைபெறும். ஒருவித இனப்பெருக்கம் ஆகும். இதில் குன்றல் பகுப்பும், கேமீட்களின் இணைவும் நடைபெறுவதில்லை.
  • மகேஸ்வரி (1950) கருவுறா இனப் பெருக்கத்தை இரண்டு வகைக்களாக வகைப்படுத்தியுள்ளார். அவை மீளவகை கருவுறா இனப்பெருக்கம் மற்றும் மீளாவகை கருவுறா இனப்பெருக்கம்.
  • மீள்வகை கருவுறா இனப்பெருக்கம் (Recurrent apomixis) : இது தழைவழி இனப்பெருக்கத் தையும், பாலிணைவில்லா விதைத்தன்மையை யும் (agamospermy) உள்ளடக்கியது.
  • மீளாவகை கருவுறா இனப்பெருக்கம் (Non recurrent apomixis): குன்றல் பகுப்பிற்குப் பின் ஒருமடிய கருப்பை இது உருவாக்கப்பட்டு கருவுறுதல் நடைபெறாமல் கருவாக மாறும் நிகழ்வாகும். மீள்வகை கருவுறா இனப்பெருக்கத்தின் உருகோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • தழைவழி இனப்பெருக்கம் :தாவரங்கள் விதை தவிர மற்ற பாகங்கள் மூலம் பெருக்கமடைதல் தழைவழி இனப்பெருக்கம் எனப்படும். குமிழ்மொட்டுகள் இமிபீரியாலிஸ், குமிழ்த்தண்டுகள் – அல்லியம் பிரட்டிலேரியா ஓடு தண்டு – மென்தா அர்வென்சிஸ் (புதினா), தரைகீழ் உந்து தண்டு – கிரைசாந்திமம் (சாமந்தி)
  • பாலிணைவில்லா விதைத்தன்மை : இது குன்றல் பகுப்பு மற்றும் கேமீட்டுகளின் இணைவின்றி உருவாகும் கருக்கள் ஆகும்.
  • வேற்றிட கருநிலை (Adventive embryony) : இருமடிய வித்தகத்தாவர செல்களாகிய சூலதிசுவிலிருந்தோ அல்லது  சூல்உறையிலிருந்தோ நேரடியாக கரு உருவானால் அது வேற்றிட கருநிலை எனப்படும். இது வித்தகத்தாவர மொட்டு உருவாதல் என்றும்  அழைக்கப்படும் ஏனெனில் கேமீட்டாக தாவர நிலை முழுவதுமாக இதில் காணப்படுவதில்லை. சிட்ரஸ், மாஞ்சிஃபெரா போன்ற தாவரங்களில் வேற்றிட கருக்கள் உருவாகின்றன.
  • உருவாக்க கருவுறாவித்து (Generative apospory) : பெருவித்து தாய் செல் நேரடியாக இருமடிய கருப்பையாக மாறுகிறது. இங்கு வழக்கமாக நடைபெறும் குன்றல் பகுப்பு நடைபெறவில்லை. எ.கா.யூபடோரியம், ஏர்வா
  • கருவுறாவித்து (Apospory) : பெருவித்து தாய் செல்லில் வழக்கமாக நடைபெறும் குன்றல் பகுப்பு நடந்து நான்கு பெரு வித்துக்களைத் தருகிறது. பின்னர் இந்த நான்கு பெரு வித்துக்களும் படிப்படியாக மடிகின்றன. சூல்திசு செல் ஒன்று தூண்டப்பட்டு ஒரு இருமடிய கருப்பையாக மாறுகிறது. இந்த வகை கருவுறா வித்து தழைவழி வேற்றிட வித்து (somatic apospory) என்றும் அழைக்கப்படும். எ.கா: ஹிராசியம், பார்த்தீனியம்

7. பெருவித்துருவாக்கம் என்றால் என்ன?

  • பெருவித்துருவாக்க வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகள் யாவை? பெருவித்து தாய் செல்லிலிருந்து பெருவித்து உருவாகும் நிகழ்வு பெருவித்துருவாக்கம் (megasporogenesis) எனப்படும்.
  • சூல் வளர்ச்சியடையும் போது சூல் திசுவின் புறத்தோலடித்தோல் கீழ் அமைந்துள்ள ஒரு சூல்திசு செல் பெரிதாகி முன்வித்தாக (archesporium) செயல்படுகிறது.
  • சில தாவரங்களில் முன்வித்து செல் நேரடியாக பெருவித்து (megaspore) தாய் செல்லாகச் செயல்படுகிறது.
  • பிற தாவரங்களில் இவை குறுக்குவாட்டில் பகுப்படைந்து வெளிப்புறத்தில் முதலநிலை புறப்பக்க செல்லையும் (outer primary parietal cell) உட்புறத்தில் முதல்நிலை வித்துருவாக்க செல்லையும் (inner primary sporogeneouscell) உருவாக்கப்படுகிறது
  • இந்த புறப்பக்க செல் பகுப்படையாமலோ அல்லது பரிதி மற்றும் ஆரத்திற்கு இணையாக சில பகுப்புகளை அடைந்து முதல்நிலை வித்துருவாக்க செல் சூல்திசுவில் ஆழமாகப் பதிகிறது.
  • இந்த முதல்நிலை வித்துருவாக்கச் செல் பெருவித்து தாய் செல்லாகச் செயல்படுகிறது.பெருவித்து தாய் செல் குன்றல் பகுப்பிற் குட்பட்டு நான்கு ஒருமடிய பெருவித்துக் களைத் தருகிறது.
  • கருப்பை வளர்ச்சியில் பங்கு பெறும் பெருவித்துகளின் எண்ணிக்கையைப் பொருத்து ஒருபெருவித்துசார் கருப்பை இருபெருவித்துசார் கருப்பை (bisporic) நான்கு பெருவித்துசார் கருப்பை (tetrasporic) என மூன்று அடிப்படை வகையான வளர்ச்சி முறைகள் காணப் படுகின்றன.
  • பொதுவாக நான்கு பெருவித்துகள் நேர்கோட்டில் அமைந்திருக்கும். இந்த நான்கு பெருவித்துகளில் பொதுவாக சலாசா பக்கமுள்ள பெருவித்து செயல்படும் பெருவித்தாகிறது. மற்ற மூன்றும் அழிந்துவிடுகின்றன.
  • செயல்படும் பெருவித்து பெண் கேமீட்டகத் தாவரம் அல்லது கருப்பையை உருவாக்குகிறது.
  • இந்த வகை கருப்பை வளர்ச்சி ஒரு பெருவித்துசார் கருப்பை (எ.கா : பாலிகோனம்) என அழைக்கப்படுகிறது.
  • நான்கு பெருவித்துகளில் இருவித்துகள் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் இருபெருவித்துச்சார் கருப்பை வளர்ச்சி எ.கா. அல்லியம் ) எனப்படுகிறது. நான்கு பெருவித்துகளும் கருப்பை உருவாக்கத்தில் ஈடுபட்டால் அது நான்கு பெருவித்துசார் கருப்பை (எ.கா. பெப்பரோமியா) எனப்படும்.

Leave a Reply