12th Botany Unit 9 Lesson 8 Additional 2 Marks
12th Botany Unit 9, Lesson 8 | TN Botany Samacheer Kalvi Guide | Additional 2 Marks
TN 12th Bio-Botany Unit 9, 8th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.
12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் – Additional 2 Marks
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. பசுமை இல்ல வாயுக்கள் ஏன் புவி வெப்ப மடைதலை ஏற்படுத்துகிறது?
- பசுமை இல்ல வாயுக்கள் சூரியனிடமிருந்து வரக்கூடிய வெப்பக்கதிர்களை கவர்ந்து வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வை பசுமை இல்ல விளைவு என்கிறோம்.
- பசுமை இல்ல வாயுக்கள் CO2, மீத்தேன் (CH4) நைட்ரஸ் ஆக்ஸைடு (NO2) CFC ஆகியவை அடங்கும்.
2. மேகங்கள், தூசுகள் மற்றும் ஈரப்பத இரவுகள் தெளிவான உலர் இரவுகளை விட அதிக வெப்பத் துடன் காணப்படுகின்றன? ஏன்? (அல்லது) மேகங்கள் மற்றும் தூசுத்துகள்களும் பசுமை இல்ல விளைவுகளை ஏற்படுத்துமா?
- ஆம். மேகங்கள் மற்றும் தூசுத்துகள்களும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பக் கதிர்களை கவர்ந்து பசுமை இல்ல வாயு விளைவினை தோற்றுவிக்கின்றன.
- எனவே, மேகங்கள், தூசுகள் மற்றும் ஈரப்பத இரவுகள் தெளிவான உலர் இரவுகளை விட வெப்பத்துடன் காணப்படுகிறது.
புவி வெப்பமடைதல் (Global Warming)
- பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிக ரிக்கும் போது புவியின் சராசரி வெப்ப நிலையும் உயர்கின்றது. (அதிகபட்சம் 4000 வருடங்கள்) இது புவி வெப்பமடைதல் என அழைக்கப் படுகின்றது.
3. பயனற்ற ஓசோன் படலம் மற்றும் நன்மை தரும் ஒசோன் படலத்தை வேறுபடுத்துக.
பயனற்ற ஓசோன் படலம்
- அடிவளி மண்டலத்தில் (troposphere) காணக் கூடிய ஓசோன் படலம் பயனற்றதாகும். ஏனென்றால், இந்த அடுக்கு சூரியனிடமிருந்து வெளிப்படும் UV கதிர்களை தடுத்து நிறுத்துவதில் ஈடுபடுவதில்லை.
நன்மை தரும் ஒசோன் படலம்
- மீவெளி மண்டலத்தில் (stratosphere) காணக் கூடிய ஓசோன் படலம் நன்மை தரும் அடுக்காகும். ஏனெனில் இவ்வடுக்கு சூரியனிடமிருந்து வெளிப் படும் UV கதிர்களை பெருமளவில் தடுத்து நிறுத்தி DNA சிதைவினால் உயிரினங்களில் தீங்குண்டாவது தடுக்கப்படுகிறது.
4. ஓசோன் குறைந்த பகுதி மற்றும் ஓசோன் மிகு பகுதியை (புவியின் மொத்த ஓசோன் அமைப்பை) எதை கொண்டு அறியலாம்?
- ஓசோன் அமைப்பைக் காண்பிக்கும் பொய் நிறத் தோற்றத்தைக் கொண்டு அறியலாம்.
- ஊதா மற்றும் நீல நிறங்கள் ஓசோன் மிக குறைந்த பகுதியாகும்.
- மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் பகுதிகள் ஓசோன் மிகு பகுதியென அறியலாம்.
5. ஓசோன் அளவு மீவெளி மண்டலத்தில் குறை வதனால் உயிரினங்களில் ஏற்படும் பாதிப்பு யாது?
- UVB கதிர்கள் புவியை வந்தடைந்து உயிை கூறுகளையும், உயிர்ச் செல்களையும் அழிக்கின்றன. (தோல் மூப்படைதல்)
- UV கதிரியக்கம் உயிரிகளின் தோலின் நிறமாற்றம் தோல் கருகுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றைத் தூண்டவும் காரணமாகிறது.
6. ஓசோனில் துளைகள் காணப்படுகின்றனவா?
- ஓசோனில் துளைகள் காணப்படுவதில்லை. ஆனால் சில வகையான வேதிப்பொருட்கள் வளி மண்டலத்தில் வெளியிடப்படும்போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகிறது.
- குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியேறும் குளோரோஃபுளோரோ கார்பன், ஏரோசால் தொழிற் சாலைகளில் அழுக்கு நீக்கும் வேதிப்பொருட்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- எனவே ஓசோனின் அடர்வு குறைந்து காணப் படும் பகுதிகள் ஓசோன் துளை என அழைக்கப் படுகின்றன.
7. மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் குறிக்கோள்கள் யாவை?
- வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தைச் சேதப் படுத்தும் பொருட்களை களைவது மற்றும் படிப் படியாக அத்தகைய பொருட்களை உற்பத்தியை நிறுத்தி பயன்பாட்டைக் குறைக் கவும் குறிக்கோளாக கொண்டு விவாதிக்கப் பட்டது.
8. வேளாண் காடுகள் என்றால் என்ன?
- வேளாண் காடுகள் என்பது ஒரு நிலப்பகுதியில் காணப்படும் மரங்கள், பயிர்கள் மற்றும் கால் நடைகளின் ஒருங்கிணைப்பாகும். மேலும் அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளை அறிவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
9. மரப்புல்வெளி என்றால் என்ன? (அல்லது) நிலையிழந்த வனங்கள் மற்றும் பொழுதுபோக்குக் காடுகளைப் புனரமைத்தல் என்றால் என்ன?
- புற்களுடன் கட்டைத்தன்மையுடைய தாவரங் களை வளர்க்கும் முறை மரப்புல்வெளி எனக் குறிப்பிடப்படுகிறது.
- மரங்கள் மற்றும் புதர் செடிகள் கால்நடை களுக்குத் தீவனங்கள் தயாரிப்பதில் முதலில் பயன்படுத்தப்படலாம். அல்லது வெட்டுமரம். எரிகட்டை மற்றும் பழம் (அல்லது) மண்ணின் தரத்தை மேம்படுத்த வளர்க்கப்படலாம்.
10. வேளாண் காடுகளை சமூகக் காடுகளிலிருந்து வேறுபடுத்துக
வேளாண் காடுகள்
- ஒரு நிலப்பகுதியில் காணப்படும் மரங்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகளின் ஒருங்கிணைப்பாகும்.
- இதன் முக்கிய நோக்கம் மரங்கள், பயிர்கள், கால் நடைகளின் ஒருங்கிணைப்பாகும்.
சமூகக் காடுகள்
- i) சமூகக் காடுகள் உள்ளூர் சமூகத்தால் பராமரிக்கப் படுகின்றது.
- ii) சமூகக் காடுகளின் நோக்கம் வளிக்கார்பன் சேகரிப்பு மாற்றங்களைக் குறைத்தல், மாசுபாடு நீக்கம். காடழிப்பு, காடுகள் மீட்டெடுப்பு மற்றும் இளைஞர் களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு ஆகியவற்றை குறிக்கும்.
11. காடழிப்பிற்கான காரணங்கள் யாவை?
- காடுகள் விவசாயத் தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு நிலங்களாக மாற்றப்படுதல் ஆகியன முக்கிய காரணமாகும்.
- மரத்துண்டுகளுக்காக வெட்டப்படுதல்.
- சாலை மேம்பாடு. மின் கோபுரம் அமைத்தல் மற்றும் அணை கட்டுதல் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகாக அழித்தல்,
12. இந்தியாவின் வன மனிதன் என்றழைக்கப்படுபவர் யார்?
- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதிர்குமார் சோபோரி என்பவரால்
- ஜாதவ் ‘மோலாய் பயேங்’ அக்டோபர் 2013 ஆம் ஆண்டு இந்திய வன மனிதன் என்று அழைக்கப் பட்டார்.
- இவர் உலகத்தின் பெரிய ஆற்றுத் தீவான மஜீலியை அடர்ந்த காடுகளாக மாற்றியதன் விளைவாகக் காண்டாமிருகங்கள், மான்கள், யானைகள், புலிகள் மற்றும் பறவைகளின் புகலிடமாக இது விளங்குகிறது.
13. ஆக்கிரமிப்புத் தாவரங்கள் என்றால் என்ன?
- உள்ளூர் அல்லாத ஒரு சிற்றினம் இயற்கை யாகவே சூழல் தொகுப்பில் அல்லது குறிப்பிட்ட நாட்டில் பரவி, உள்ளூர் சிற்றினங்களின் உயிரியல் மற்றும் வாழ்நிலையல் குறுக்கீடு செய்வது மற்றும் சூழ்த்தொகுப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி பொருளாதார இழப்பை ஏற்படுத்தவதாகும்.
14. பாதுகாப்பு இயக்கம் : இது எதை அறிவுறுத்துகிறது?
- இது ஒரு சமூக நிலையான பங்களிப்பு நமதுசுற்றுச் சூழலின் பேணுகை மற்றும் பாதுகாப்பிற்கு உதவுகிறது.
15. சிப்கோ இயக்கத்தின் ஐந்து முழக்கங்கள் என்றால் என்ன? அவை எவை?
- சிப்கோ இயக்கத்தின் பிரதான நோக்கங்களான உணவு, தீவனம், எரிபொருள். நார் மற்றும் உரம் ஆகிய ஐந்து முழக்கங்கள் மூலம் தங்கள் அடிப்படை தேவைகளுக்கான தன்னிறைவை ஏற்படுத்துவதாகும்.
16. “ஒவ்வொரு கிராமத்துக் கோயில் காடுகளும் ஐயனார் அல்லது அம்மன் போன்ற கிராம ஆண், பெண் தெய்வங்களின் உறைவிடமாகவே கருதப் படுகின்றன.” இது எதை அறிவுறுத்துகிறது?
- இவை தொகுப்புகளாகவோ அல்லது தோட்டங் களாகவோ சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட சமயச் சித்தாந்தங்களைக் கொண்டி ருக்கும் வலுவான மத நம்பிக்கை கொண்ட அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
- இது கோயில் காடுகள் என்று அழைக்கப் படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 448 கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
17.உயிரிமரக்கரிமம் என்றால் என்ன?
- உயிரிக்கரிமம் என்பது கார்பனைச் சேகரிக்க பயன்படும் ஒரு நீண்டகால முறையாகும். மரக்கரி போல உயிரிய கரிமமும் உயிரித்திரள் களை குறைந்த அளவு பிராண வாயுவுடன் எரித்து உருவாக்கும் வழிமுறையாகும்.
18. “கார்பன் வழித்தடம்” என்றால் என்ன?
- விவசாயம், தொழற்சாலைகள், காடழிப்பு, கழிவு நீக்கம், தொல்படிவ எரிபொருளை எரித்தல் போன்ற மானுட நடவடிக்கைகள் மூலம் நேரடி யாகவோ அல்லது மறைமுகமாகவோ பசுமை இல்ல வாயுப் பொருட்களை மொத்தமாக உருவாக்குதல் கார்பன் வழித்தடம் எனப் படுகிறது.
19. சமூகத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டினால் ஏற்படும் பயன்கள் யாவை?
- ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல்.
- உயிரிப்பன்மத் தொகுப்பினைப் பராமரித்தல்.
- குறைந்தளவு வளங்கள் பயன்பாடு.
- குறைந்த அளவு வாயு வெளியேற்றம் மற்றும் குறைந்த அளவு சுற்றுச்சூழல் சேதம். ஆகிய பயன்கள் ஏற்படுகின்றன.
20. உயிரி கண்காணிப்பு என்றால் என்ன?
- சூழல் தொகுப்பு, உயிரி பன்மக்கூறுகள், இயற்கை வாழிடங்கள், சிற்றினம் மற்றும் உயிரினத்தொகை சார்ந்த நிலப்பரப்பு ஆகியவற்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்துக் கண்காணிக்கவும் மதிப்பிடவும் உதவும் ஒரு செயலாகும்.
21. வேளாண் பறக்கும் இயந்திரம் என்றால் என்ன?
- பயிர் பெருக்கம் மற்றும் பயிர் வளர்ச்சியைக் கண் காணிக்கும் வேளாண்மைக்க உதவும் ஒரு ஆளில்லா வானூர்தியாகும்.
- விவசாயிகள் தங்களது நிலங்களை வானிலிருந்து கண்காணிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
- நீர்ப்பாசன பிரச்சனைகள், மண்ணின் மாற்றங்கள், பூச்சி மற்றும் பூஞ்சைத் தாக்கங்கள் முதலிய தொல்லைகளை கூரிய பார்வையால் தெளிவுப் படுத்த உதவுகிறது.
- பாதுகாப்பான, சிக்கனமான, அபாயங்களற்ற பூச்சி மருந்து மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதற்கு உதவும். மேலும் ஒரு எளிய முறையாகும்.
22. வேளாண் பறக்கும் இயந்திரம் (அல்லது) உயிரி கண்காணிப்பின் பயன்கள் யாவை?
- நீர்ப்பாசன பிரச்சினைகள், மண்ணின் மாற்றங்கள். பூச்சி மற்றும் பூஞ்சை தாக்கங்கள் முதலிய தொல்லைகளை கூரிய பார்வையால் தெளிவுபடுத்த உதவுகிறது.
- பாதுகாப்பான, சிக்கனமான, அபாயங்களற்ற பூச்சி மருந்து, உரங்கள் பயன்படுத்துவதற்கு பயன் படும் எளிய முறையாகும்.
23. புவியியல் சார் தகவல் அமைப்புகள் என்றால் என்ன?
- புவிப்பரப்பின் மீதுள்ள அமைப்பு சார்ந்த தகவல் களை படம்பிடிக்க, சேமிக்க, சோதிக்க மற்றும் காட்சிப்படுத்த உதவும் தகவல்சார் கணினிசார் ஓர் அமைப்பாகும்.
- மேலும் புவிசார் தகவல், வான்சார் தகவல்கள் அளிக்கவும் திறம்படக் கையாள்வதற்கும், பகுத்தறிதலுக்கும், நிர்வகிக்கவும் உதவுகிறது.
24. புவியியல் சார் தகவல் அமைப்பின் நோக்கம் யாது?
- பூமிப்பரப்பின் மீதுள்ள ஒரு பொருளின் நிலையை நிர்ணயிக்க உதவும் செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பாகும்.
- புவியின் மீதுள்ள ஓர் அமைவிடத்தை மக்கள் துல்லியமாகக் கண்டுணரப் பயன்படும் சமஇடை வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பூமி மீது சுற்றி வரும்,
- நட்சத்திரக் கூட்டம் போன்ற 30 செயற்கைக்கோள் ஒருங்கமைந்த கட்டமைப்பாகும். எ.கா சுரங்கம், வான்பயணம், வேளாண் மற்றும் கடல்சார் சூழல் தொகுப்பு.
25. ஆக்கிரமிப்பு தாவரங்களில் அயல்நாட்டு தாவரம் களின் பெயர்கள் யாவை?
- ஐகோர்னியா கிராஸிபஸ்
- லேண்டானாகமாரா
- புரோசாபிஸ் ஜீலிஃப்ளோரா
- பார்த்தீனியம் ஹிஸ்டிரோஃபோரஸ்
26. கார்பன் தேக்கி என்றால் என்ன? எ.கா. தருக,
- வளிமண்டலத்தில் உள்ள கார்பனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கரியமில வாயுவாக வெளியேறாமல் தடுத்துச் சேமித்து வைக்கும். திறன் பெற்ற அமைப்புகள் கார்பன் தேக்கி எனப் படும் எ.கா: காடு, மண், கடல் ஆகிய இயற்கை தேக்கிகள்