12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 5 Marks

 12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 5 Marks

12th Botany PURE SCIENCE 3rd Lesson Additional 5 Mark Answers. 12th Standard Pure Science Grout Unit 7, 3rd Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 7, 3rd lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 3 . குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 7 | Lesson 3. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் – Additional 5 Mark Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 5 Marks

1.குறுக்கேற்றத்தின் முக்கியத்துவத்தை கூறுக.

  • பாக்டீரியங்கள், ஈஸ்ட், பூஞ்சை, உயர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய அனைத்து  உயிரினங்களிலும் குறுக்கேற்றம் நடைபெறும். அவை
  • குரோமாடிட் துண்டுகளின் பரிமாற்றம், புதிய மரபணுக்களின் சேர்க்கைக்கு வழிகோலுவதால் இந்நிகழ்வு பரிணாமத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
  • குறுக்கேற்றம் பற்றிய ஆய்வின் மூலம் குரோமோசோம்களில் மரபணுக்கள் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
  • குறுக்கேற்ற நிகழ்விரைவின் அடிப்படையிலேயே மரபு வரைபடம் உருவாக்கப்படுகிறது.
  • மரபணுவின் தன்மை மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்ளக் குறுக்கேற்றம் உதவுகிறது.
  • ஒரு புதிய நன்மை பயக்கும் சேர்க்கை தோன்றுவதால் தாவரப் பயிர்ப்பெருக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

2. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?

  • ஒரு உயிரினத்தில் கொடுக்கப்பட்டுள்ள புறத்தோற்றவகைய பண்புக்கூறு (phenotypic trait) அதிலுள்ள தனி இணை மரபணுக்களைச் சார்ந்துள்ளது.
  • இந்த ஒவ்வொன்றும் ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்துள்ளதற்கு அமைவிடம் (locus) என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு மரபணுவின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல் வகைகள் ஒரே அமைவிடத்தில் அமைந்திருப்பது பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்டுகிறது.
  • ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு மரபணுவின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல் வகைகள் ஒரே அமைவிடத்தில் அமைந்திருப்பது பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்டுகிறது.

பல்கூட்டு அல்லீல்களின் பண்புகள் :

  • ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள பல்கூட்டு அல்லீல்களின் வரிசை எப்போதுமே ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ளது. எனவே
  • இந்த அல்லீல்களின் வரிசைகளுக்குள் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை. பல்கூட்டு அல்லீல்கள் ஒரே பண்பிற்கு மட்டும் காரணமாகும்.
  • இயல்பான வகை (wild type) அல்லீல்கள் கொண்ட வரிசை ஓங்குப்பண்பினை வெளிப் படுத்தும். மாறாக் சடுதிமாற்றமுற்ற தாவரங்களின் அல்லீல்கள் ஓங்கு அல்லது நடுத்தர வகை தன்மையுடைய புறத்தோற்ற விளைவுகளை வெளிப்படுத்துகின்றன.
  • இருவகையான சடுதிமாற்றமுற்ற பல்கூட்டு அல்லீல்களைக் கலப்பு செய்யப்படும்போது அதன் புறத்தோற்றவகையம் எப்பொழுதுமே சடுதிமாற்ற முற்ற வகையை ஒத்தே அமைந்திருக்கும். இயல்பான வகையை (wild type) ஒத்திருக்காது.

 

3. ஆண் டுரோசோஃபில்லாவில் முழுமையான பிணைப்பு நடைபெறுவதைப் பற்றி விவரி?

  • பிணைப்புற்ற இரு மரபணுக்களுக்கிடையே பிரிந்து செல்லும் வாய்ப்பு மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில் அவை ஒரு சேர மரபுவழி அடைவதால் பெற்றோர்களின் சேர்க்கை மட்டுமே காணப்படுகிறது.
  • ஏனெனில் ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற மரபணுக்களின் இருப்பிடம் மிக அருகருகே அமைந்துள்ளதால் குறுக்கேற்றம் நிகழ வாய்ப்பில்லை.
  • இந்நிகழ்வு முழுமையாக பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
  • இவை அரிதாக நடைபெற்றாலும் ஆண் டுரோசோஃபில்லா கண்டறியப்பட்டுள்ளது.
  • C.B. பிரிட்ஜஸ் (1919) ஆண் டுரோசோஃபில்லா சில சிற்றினங்களில் குறுக்கேற்றம் முற்றிலுமாக நடைபெறுவதில்லை எனக் கண்டறிந்தார்.-

4.மக்காச் சோள விதையில் நடைபெறும் முழுமையற்ற பிணைப்பை பற்றி விவரி?

  • பிணைப்புற்ற மரபணுக்கள் மிக நிகழ அமைந்தால் குறுக்கேற்றம் விலகி அதிக வாய்ப்புள்ளது.
  • இதன் விளைவாகப் பெற்றோர் மற்றும் பெற்றோர் இல்லாத சேர்க்கைகள் அறியப்பட்டது. இந்தப் பிணைப்புற்ற மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகிறது.
  • இது முழுமையற்ற பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
  • இந்நிகழ்வை வறட்சின்சன் மக்காச்சோளத்தில் முதலில் கண்டறிந்தார்.

6.புள்ளி சடுதிமாற்றத்தின் வகைகள் பற்றி விவரி? 

புள்ளி சடுதிமாற்றத்தின் வகைகள் (Types of Point mutation) : 
  • DNA வில் நடைபெறும் புள்ளி சடுதிமாற்றம் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • கார இணை பதிலீடுகள் மற்றும்  கார இணை  இடைச்செருகல் அல்லது நீக்குதல் ஆகியவையாகும்.
  1. கார இணை பதிலீடு சடுதிமாற்றம் : கார இணை பதிலீடு சடுதிமாற்றம் என்பது DNA வின் ஒரு கார இணை மற்றொரு கார இணையால் பதிலீடு செய்வதாகும். இவை இரு துணை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒத்த பதிலீடு (Transition), வேறுபட்ட பதிலீடு (transversion).
  2. சேர்த்தல் அல்லது நீக்குதல் சடுதிமாற்றம் : சேர்த்தல் அல்லது நீக்குதல் சடுதிமாற்றம் என்பது நியூக்ளியோடைடு இணைகளின் சேர்த்தல் அல்லது நீக்குதல் மற்றும் கார இணை சேர்த்தல் அல்லது நீக்குதல் எனவும் அழைக்கப்படுகிறது.
  3. இன்டெல் சடுதிமாற்றம் : கூட்டாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் இன்டெல் சடுதிமாற்றம் (indel mutation) (Insertion – deletion mutation) எனக் குறிப்பிடப்படுகிறது. பதிலீடு சடுதிமாற்றம் அல்லது இன்டெல் சடுதிமாற்றங்கள் மரபணுக்களின் மரபுச் செய்தி பெயர்வுகளைப் பாதிக்கின்றன. இதன் அடிப்படையில் பல்வேறு வகையான சடுதி மாற்றங்கள் உள்ளன. அவை
  4. ஒத்த அல்லது அமைதியான சடுதிமாற்றம்: ஒரு அமினோ அமிலத்திற்கான ஒரு மரபுக்குறியனை (codon) அதே அமினோ அமிலத்திற்கான வேறொரு மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம் ஒத்த அல்லது அமைதியான சடுதிமாற்றம் (Synonymous or Silent mutation) என்று அழைக்கப்படுகிறது.
  5. தவறுதலாகப் பொருள்படும் அல்லது ஒத்திலாச் சடுதிமாற்றம் : ஒரு அமினோ அமிலத்திற்கான ஒரு மரபுக்குறியனை வேறொரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்படும் அல்லது ஒத்திலாச் சடுதிமாற்றம் (Missense or non synonymous mutation) என்று அழைக்கப்படுகிறது.
  6. பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் : ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியன் முடிவு அல்லது நிறுத்துக் குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் (Nonsense mutation) என்று அழைக்கப்படுகிறது.
  7. கட்ட நகர்வு சடுதிமாற்றம் : ஒரு DNA வில் ஒரு கார இணை சேர்த்தல் அல்லது நீக்குதலால் மரபுச் செய்தி பெயர்வு கட்டமைப்புகளை மாற்றப்படுவதன் விளைவால் இயல்பான புரதத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு இழக்கப்படுவது கட்ட நகர்வு சடுதிமாற்றம் (Frame shift mutation) என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply