12th Botany Unit 10 Lesson 9 Additional 3 Marks
TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Additional 3 Marks Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.
12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Additional 3 Mark Answers
12th Botany 9th Lesson பகுதி-II. கூடுதல் வினாக்கள் 3 Marks
- உழவியல், மானடவியல், தொல்லியல், வேதியியல், சில்லறை மற்றும் பெரும் வணிக துறைகளை இணைக்கிறது.
2.தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் என்றால் என்ன?
- அது தாவரச் சிற்றினங்களை மனிதனின் கட்டுக்குள் கொண்டு வருவதாகும்.
3.இயற்கை வேளாண்மை என்றால் என்ன?
- பழைய பாரம்பரிய விவசாய முறையே இயற்கை வேளாண்மையாகும்.
- 20ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மிக வேகமாக மாறிவரும் விவசாய முறைகளுக்கு எதிராக மீட்டுக் கொண்டு வரப்பட்டது.
- இது மீள்நிலைத்த மண்வளம், சூழல்வளம், மற்றும் மக்கள் வளத்திற்கான வேளாண் முறை யாகும்.
4. பியூவிரியா சிற்றினம் எவ்வாறு உயிரி பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது?
- ஒரு மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி பூஞ்சையாகும்.
- இது பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர் டைன் நோயிலிருந்து தாவரத்தை பாதுகாக்கிறது.
- ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படும் நாற்றுமடிதல் நோயை கட்டுப்படுத்துகிறது.
5.தழை உரம் மற்றும் தழையிலை உரம் வேறுபடுத்துக.
- தழை உரப்பயிர்களை வளர்த்து அவற்றை நேரிடையாக வயல்களிலிட்டு உழுவது தழை உரமிடல் என்பதாகும்.
- மண்ணில் தழைச்சத்தை உயர்த்துகிறது.
- மண்ணின் அமைப்பையும் இயற்பியல் காரணியையும் மேம்படுத்துகிறது.
தழையிலை உரம்
- தாவரங்களின் இலைகள், கிளைகள், சிறுசெடிகள், புதர்செடிகள், தரிசு நிலங்களிலிலுள்ள தாவரங்கள் மற்றும் வயல்வெளிகளின் வரப்புகளிலுள்ள போன்றவற்றை பயன்படுத்துவதைக் குறிக்கும்.
- கொன்றை, அகத்தி, வேம்பு மற்றும் புங்கை போன்ற தாவரங்களை தழையிலை உரத்திற்கு பயன்படுத்தலாம்.
6.பயிர்பெருக்கம் என்றால் என்ன?
- தகுந்த சூழ்நிலையில் பயிர்வகைகளில் உயர் விளைச்சல், சிறந்த தரம், நோய் எதிர்ப்புத்திறன், குறுகிய கால வாழ்நாள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அறிவியலே பயிர்பெருக்கம் ஆகும்.
7. தேசியத் தாவர மரபியல் வளத்துறை பற்றி குறிப்பு வரைக.
- இது நமது நாட்டிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பயிர் இரகங்களை அறிமுகப்படுத்திப் பராமரிக்கிறது.
- மூலிகை மற்றும் தாவரவியல் சார்ந்த தாவரங்களையும் வனமரங்களையும் பாதுகாக்கும் பொறுப்பிலும் இருக்கிறது.
- இதன் தலைமையகம் புதுதில்லியிலுள்ள, இரங்கபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
8. கலபுறுத்தம் என்றால் என்ன?
- மரபணுவகையத்தில் வேறுபட்ட இரண்டிற்கு மேற்பட்ட தாவரங்களைக் கலப்புறச் செய்யும் முறைக்குக் கலப்புறுத்தம் என்று பெயர்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரகச்சிற்றினங்களின் தகுந்த பண்புகளை இணைக்கப்பயன்படும் மிகச்சிறந்த வழிமுறையாகவும் உள்ளது.
- இயற்கையான கலப்புறுத்தம் நிகழ்வு முதன்முதலாகக் காட்டன் மேதர் என்பவரால் சோளப்பயிரில் அறியப்
9. பொய்கலப்பின வீரியம் என்று ஏன் அழைக்கின்றோம் ? காரணம் கூறுக.
- சந்ததி தாவரமானது உடல் வளர்ச்சியில்பற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் காணப்படும்.
- விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது.
12th Botany Unit 10 Lesson 9 Additional 3 Marks
10. சில பயிர்களின் இரகங்கள் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு திறன் பற்றி அட்டவணை வரைக.
- கோதுமை
- பிராசிகா
- காலிஃபிளவர்
- காராமணி
- மிளகாய்
இரகங்கள்
- ஹிமகிரி
- பூசா சுவர்னிம்
- பூசா சுப்ரா, பூசா ஸ்போனபால் K-1
- பூசா கோமல்
- பூசா சடபஹர்
நோய் எதிர்ப்பு திறன்
- இலை மற்றும் பட்டைத்துரு ஹில் பண்ட்
- வெண்துரு
- கருப்பு அழகல் மற்றும் சுருள் கருப்பு அழகல்
- பாக்டீரியா அழகல்
- மிளகாய் மொசைக் தேமல் வைரஸ்
11. நோரின் – 10 பற்றி சிறு குறிப்பு தருக.
- இது ஒரு குட்டை மரபணு கொண்ட கோதுமை ரகமாகும்.
- கான்ஜிரா இனாசுகா என்பவர் தேர்ந்தெடுத்த அரைக்குட்டை கோதுமை இரகம்
- பல கோடி மக்களின் பசியையும், பட்டினியையும் போக்க உதவியது.
12. பயிர்பெருக்கத்தின் மூலம் பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்?
- ஒம்புயிரித் தாவரங்களின் பூச்சி எதிர்க்கும் திறனானது புறத்தோற்றம், உயிரிவேதியியல், உடற்செயலியல் போன்ற பண்புகளை கொண்டு அமையலாம்.
- பல தாவரங்களின் தூவிகளுடைய இலைகள் பூச்சி எதிர்க்கும் திறனுடன் தொடர்புடையதாக உள்ளன. (எ.கா) பருத்தியின் இலைத்தத் துப்பாக்கி எதிர்ப்பு திறன்.
13. உயர்ரகப் பயிர்கள் பெற பயன்படுத்தும் நவீன பயிர்பெருக்க முறைகளைப் பட்டியலிடுக.
- மரபணுபொறியியல், தாவரத் திசு புரோட்டோபிளாச இணைவு, உடல் இணைவு முறை மற்றும் மூலக்கூறு குறிப்பு ஆகும்.
14. சடுதி மாற்றம் வரையறு.
- ஒரு உயிரினத்தின் மரபணுவகையத்திலோ அல்லது புறத்தோற்ற வகையத்திலோ திடீரென மரபுவழியாக ஏற்படும் மாற்றம் சடுதி மாற்றம் எனப்படும்.
15. காமா தோட்டம் (அ) அணுத்தோட்டம் வரையறு
- கோபால்ட் 60 (அ) சீசியம் 137 போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தி தகுந்த சடுதி மாற்றங்களைப் பயிர் தாவரங்களில் உண்டாக்கும் ஒரு முறையாகும்.
- இந்தியாவில் முதல் காமாத் தோட்டம் கொல்கத்தாவில் உள்ள போஸ் ஆய்வு நிறுவனத்தில் 1959 -யிலும்
- இரண்டாவது தோட்டம் 1960-யிலும் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் மூலம் பல மரபுவழி வேறுபாடுகள் கொண்ட பயிர்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது.
16. உயிர்வழி ஊட்டம் சேர்த்தல் வரையறை தருக.
- மனித உடல்நலத்திற்காக அதிகளவு வைட்டமின் களோ அல்லது அதிக அளவு புரதங்களோ (அ) கொழுப்பு சத்துக்களோ நிறைந்த பயிர்களைப் பெருக்குவது உயிர்வழி ஊட்டம் சேர்த்தல் எனப்படும்.