12th Bio-Botany Unit 8 உயிரி தொழில்நுட்பவியல் பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

 12th Botany Unit 8 Lesson 5 Additional 3 Marks

 12th Botany Unit 8 Lesson 5 Additional 3 Marks

TN 12th Bio-Botany Samacheer kalvi guide Tamil Mesium

12th Botany  பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Additional 3 Marks Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide

 12th Botany Unit 8 Lesson 5 Additional 2 Marks

 12th Botany Unit 8 Lesson 5 Additional 3 Marks

VIII. மூன்று மதிப்பெண் வினாக்கள்

1.PTC – இல் பயன்படும் வளர்வூடகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக 
  • M.S ஊட்ட ஊடகம் – (முராஷிகி மற்றும் ஸ்கூஜ் (1962)
  • பொதுவாக பயன்படுத்தப்படும் ஊடகம் இதில் தகுந்த வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்களுடன் தகுந்த கார்பன் மூலங்களையும் கொண்டுள்ளன.
  • B – 5 ஊடகம் (கேம்போர்க் குழுவினர் (1968))
  • ஒயிட் ஊடகம் (ஒயிட் 1943)
  • நிட்ச் ஊடகம் (நிட்ச் மற்றும் நிட்ச் (1969)
2.கேலஸ் தூண்டப்படுதலை விவரி
I)Inoculation (உட்செலுத்துதல்)
தேர்ந்தெடுக்கப்பட்ட
  • இலை
  • கிழங்கு
  • தண்டு
  • வேர்
  1. 1.2செ.மீ
நோய்க்கிருமி நீக்கப்பட்ட துண்டுகளின் பிரிகூறுகள் ஆக்ஸின் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட
II) Incubation : (அடைகாத்தல்)
இவை 25°C±2°C வெப்ப நிலையில் 12 மணிநேரம் ஒளி மற்றும் இருள் என மாறி மாறி வைக்கப்படும்.
III) Induction of Callus (காலஸ் உருவாக்கம்)
  • பிரிகூறின் மேற்பரப்பில் செல்பிரிதல் தூண்டப்பட்டு – கேலஸ் உருவாகிறது.
  • கேலஸ் என்பது ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு
  • ஊடகத்தில் தாவர செல்கள் (அ) திசுக்களின் முறையற்ற வளர்ச்சி ஆகும்
3. தாவர மீளூருவாக்க வழித்தடத்தை விளக்குக
பிரிகூறிலிருந்து உடல் கருவுருவாக்கம் அல்லது உறுப்புகளாக்கம் மூலம் தாவரங்கள் மீளுருவாக்கம் செய்யப்படுகிறது.
 12th Botany Unit 8 Lesson 5 Additional 3 Marks
4.உடலக்கரு உருவாக்கத்தின் பயன்பாடு எது?
  • இவை திறன் மிக்க நாற்றுருக்களை வழங்கி, பின்னர் வன்மையாக்கத்திற்குப் பின் முழுத்தாவரங்களைக் கொடுக்கிறது.
  • செயற்கை விதைகள் உற்பத்திக்கு பயன்படுகின்றது
  • எ.கா: அல்லியம் சட்டைவம், ஹார்டியம் வல்கேர், ஒரைசா சட்டைவா, சியாமெய்ஸ்
5.உடல்நகல்சார் வேறுபாட்டை, கேமீட்டக நகல்சார் வேறுபாட்டிலிருந்து வேறுபடுத்துக
உடல் நகல் சார் வேறுபாடு
  • 1.ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பிலிருந்து உருவாகும் தாவர மீள் உருவாக்கத்தில் மூலத் தாவரத்தில் இருந்து சில வேறுபாடுகள் காணப்படுகின்றன
  • 2.இலை, தண்டு, வேர், கிழங்கு இனப்பெருக்க வித்து ஆகியவற்றில் காணப்படுகின்றன
கேமீட்டக நகல் சார் வேறுபாடு
  • 1)ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பின் போது கேமீட்களிலிருந்து உருவாகும் கேமீட்டகத் தாவர மீள் உருவாக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன
  • 2)கேமீட்டிலும், கேமீட்டகத் தாவரத்திலும் காணப்படும் வேறுபாடு
6.வைரஸ் அற்ற தாவரங்களைஉருவாக்குவது ஏன் அவசியம்?
  • A வேதிப்பொருட்களைக் கொண்டு பூஞ்சை,பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற நோய்க் கிருமிகளை அழிப்பது எளிது. ஆனால் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸ்களை அழிப்பது அரிது தாவரங்களுக்கு வைரஸ்களால் உண்டாக்கும் பொருளாதாரச் சேதம் அதிகம்.
  • தண்டு நுனி ஆக்குத் திசு வளர்ப்பு மூலம் வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்க இயலும் ஏனெனில் தண்டு நுனியில் வைரஸ் தொற்று காணப்படுவதில்லை.
7.செயற்கை விதைகளின் சிறப்பம்சங்கள் யாவை?
  • எண்ணிக்கை, நேரம், செலவு மில்லியன்கள் எண்ணிக்கையில் / எந்த காலத்திலும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும்.

செய்முறை

  • விரும்பிய பண்புகளைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை இம்முறையில் எளிதாக உருவாக்கலாம்.
தரம்
  • தரமான விரும்பிய பண்புகள் உருவாக்க இயலும் சோதனை செய்ய இயலும்.

சேமிப்பு

  • உறை குளிர் பாதுகாப்பு முறையில், நீண்ட நாட்களுக்கு திறன் மிக்கவையாகச் சேமிக்கலாம்.

உருவொத்த தாவரங்கள் 

  • அதிக எண்ணிக்கையில் உருவொத்த தாவரங்களை உருவாக்கலாம்.
விதையுறாக்காலம்
  • பெரிதாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள்

  • குறுகிய வாழ்க்கை சுழற்சியுடன் கூடிய வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது.
8. திசு வளர்ப்பின் பயன்பாடுகள் யாவை? 
1. உடலகலப்பினமாதல் மேம்பட்ட கலப்புயிரிகளின் உற்பத்தி (உடலகலப்புயிரியாக்கம்)
2. உறை சூழப்பட்ட கருக்கள் செயற்கை விதைகள் (உடலகலப்புயிரியாக்கம்)
3. ஆக்குத்திசு மற்றும் தண்டு நுனி வளர்ப்பு நோய் எதிர்ப்பு தாவரங்கள் உற்பத்தி செய்தல்
4. தாவரங்கள்
  • களைக்கொல்லி சகிப்புத்தன்மை
  • வெப்ப சகிப்புத்தன்மை
  • அழுத்த சகிப்புத்தன்மை

5.நுண் பெருக்க தொழில்நுட்பம்—-> வருடம் முழுவதும் / குறைந்த காலத்தில் பயிர் / மற்றும்வனத்திற்கு பயன்படும் மரச்சிற்றினங்கள் அதிக எண்ணிக்கையிலான நாற்றுருக்கள் கிடைக் கின்றன.

6. இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்கள்
  • மருந்து உற்பத்தி
  • அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு
  • உணவுத் தொழிற்சாலையில் பயன்படுகின்றன
5.வாழையின் நுண்பெருக்க நெறிமுறைகள் தருக
  • வாழையின் ஆய்வுக்கூட சோதனை முறை நுண் பெருக்கம் (மியூசா சிற்றினம்)
  • வாழையில் நுண் பெருக்கம் வாழையின் ஆய்வுக்கூட சோதனை முறை நுண் பெருக்கம் (மியூசா சிற்றினம்)
  • தரைகீழ் உந்து தண்டின் பறப்பரப்பு 1% சோடியம் ஆக்சி குளோரைடு (NaCl) கொண்டு 30 நிமிடத்திற்கு கிருமி நீக்கம் செய்யப்படுகிறது
  • நுனி ஆக்குத்திசு தனிமைப்படுத்தப்பட்டு பென்சைல் அமினோ பியூரைன் (BAP) 10.0 மிகி ,லி மற்றும் இண்டோல் அசிட்டிக் அமிலம் (IAA) 1.0 மிகி.லி MS அடிப்படை ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது.
  • 168 நாட்களுக்குள் தண்டு வளர்ச்சி தூண்டப்படுதல்
  • வேர் வளர்ச்சியை தூண்டுவதற்கு கைனடின் 2.0 மிகி ,லி மற்றும் நாஃப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) 0.5 மிகி.லி சேர்க்கப்படுகிறது
  • காலநிலை இணக்கப்பாடு செய்தல் (பசுமை குடிலில்)
  • நிழற்பாங்கான குடிலைத் தொடர்ந்து 50% ஒளியில் வன்மையாக்குதல்
  • சீரான மரபியல் தன்மையை சோதித்தல்
  • பயிர் நிலத்திற்கு மாற்றுதல்

 

9. வாழையின் நுண்பெருக்க நெறிமுறைகள் தருக

10. வைரஸ் அற்ற நுனி ஆக்குத்திசு வளர்ப்பிற்கான நெறிமுறையைத் தருக
  • வைரஸ் அற்ற நுனி ஆக்குத் திசு வளர்ப்பிற்கான செயல்முறைகள்
  • பிரிகூறிலிருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்ட நிலையில் ஒன்று அல்லது இரண்டு இலை தோற்றுவிகளுடன் கூடிய நுனி ஆக்குத்திசு பிரித்தெடுக்கப்படுகிறது
  • கூடுதலான வளர்ச்சி ஹார்மோன்களுடன் கூடிய 10 மிலி திட MS ஊடகத்தில் ஆய்வுக்கூடசெயற்கை சோதனை வளர்ப்பு செய்யப்படுகிறது
  • 2400 லக்ஸ் சாதாரண ஒளிச்செறிவைத் தொடர்ந்து 2441°C வெப்பநிலையில் மூன்று நாட்களுக்கு இருளில் வளர்ப்பானது பராமரிக்கப்படுகிறது.
  • உறுப்புகள் உருவாக்க செயல்முறைக்கு பிறகு நுனி ஆக்குத்திசு வளர்ப்பிலிருந்து உருவாக்கப்பட்ட நாற்றுருக்கள் வன்மையாக்க செயலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
  • பயிர் நிலச் சூழலுக்கு மாற்றப்படுகிறது

 

11. நோய் தடுப்புத் திறனை ஒரு தாவரத்தினுள் புகுத்த சிறந்த பாரம்பரிய பயிர்பெருக்கத்தன்மை எது? விளக்குக.

  • திசு வளர்ப்புமுறை (அ) நுண்பெருக்க முறையே ஒரு தாவரத்தினுள் புகுத்த சிறந்த பாரம்பரியப்பயிர் பெருக்க தன்மையாகும்.
  • இம் முறையில் தெரிவு செய்யப்பட்ட தாவர நுனி ஆக்குத்திசு – செல்களின் பிரிகூறு ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் போது அதில் நோய் தடுப்புத்திறன் பெறப்படுகிறது.
12. காப்புரிமம் அதன் 3 பகுதிகள் யாவை? அதன் 3 பகுதிகளாவன அனுமதி, விவரக்குறிப்பு மற்றும் உரிமைகோருதல் பகுதியாகும். அனுமதி
  • காப்புரிம அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவலகத்தில் நிரப்பப்படுகிறது (வெளியிடப்படுவதில்லை)
  • அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவகலத்தில் நிரப்பப்படுகிறது. ஆனால் வெளியிடப்படுவதில்லை. இவை கையொப்பம் இடப்பட்ட A ஆவணங்களாகும்.
  • உருவாக்குபவர்களுக்குக் கொடுக்கப்படும் காப்புரிமை அனுமதி ஒப்பந்தமாகும். விவரக் குறிப்பு
  • ஒற்றை ஆவணமாக, பொதுமக்களுக்கும் காப்புரிம அலுவலகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்படுகிறது.
  • இதில் உருவாக்கத்தின் விவரிப்பும் – எவ்வாறு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் காணப்படும். கோருதல் பகுதி
  • உருவாக்கத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி குறிப்பாக வரையறுக்கப்படுகிறது.
  • இந்த நோக்கம் மற்றவர்களால் நடைமுறைப்படுத்த முடியாததாக தடுக்கப்படுகிறது.
13. காப்புரிமம் சார் பொதுவான படிநிலைகள் யாவை?
 12th Botany Unit 8 Lesson 5 Additional 3 Marks
14. அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன? அதன் கூறுகள் யாவை?
முதல் கட்டம் உள்ளடக்குவது 
  • படைப்புகள் காப்புரிமை & வணிகமுத்திரை
  • உயிர்நுட்பவியல் வணிக உற்பத்திக்கான மாற்றப்பட்ட நுண்ணுயிர்கள், தாவரங்கள் கண்டுபிடிப்பாளர்களுக்கே உரிய சொத்தாகும். இரண்டாம் கட்டம் உள்ளடக்குவது & வணிக ரகசியங்கள் & விளம்பர உரிமைகள் தார்மீக உரிமைகள் மற்றும் & நேர்மையற்ற போட்டிகளுக்கு எதிரான உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இவையனைத்தும் ஒரு நாட்டின் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.
15. GEAC இன் பணிகள் யாது?
GEAC மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு
  • 1. சூழலியல், வனங்கள், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் அமையும் ஒரு மதிப்பீட்டு முதன்மைக் குழு
  • 2. ஒழுங்குப்படுத்துதல் மரபணு மாற்றமடைந்த (GMOs) போன்ற வற்றின் உற்பத்தி பயன்பாடு, இறக்குமதி ஏற்றுமதி சேமிப்பு போன்றவற்றை ஒழுங்கு படுத்துகிறது.
  • 3. மேலும் தீங்கு செய்யும் உயிரிகளையும் பெரிய அளவில் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்க (அ) கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட முக்கிய அமைப்பு.
  • 4. மேலும் சோதனை அடிப்படையில் கள முயற்சி களையும் உள்ளடக்கிய சூழலில் மரபணு மாற்ற மடைந்த உயிரிகளையும், உயிரிப் பொருட் களையும் வெளியிடுவது தொடர்பான செயல் திட்டங்களுக்கும் களமுயற்சிகள் BRI – I, BRI – II & BRI – III என மூன்று கட்டங்களுக்குப் பின்னரே அனுமதியளிக்கிறது.
16. தாவரத்திசு வளர்ப்பிற்கான அடிப்படை வசதிகள் யாவை?
  • கண்ணாடிக் கலன்களை கழுவுவதற்கான வசதி மற்றும் அவற்றை உலர்த்துவதற்கான நுண்ணலை அடுப்பு ஆகிய வசதிகள் இருக்க வேண்டும்.
  • தன்னழுத்தக் கலன் மற்றும் எலக்ட்ரானிய தராசு மற்றும் pH மீட்டருடன் கூடிய வளர்ப்பு ஊடகம் தயாரிப்பதற்கான அறை இருக்க வேண்டும்.
  • நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை:இது ஒரு சீரடுக்கு காற்றுபாய்வு அமைப்பும், உயர்திறன் துகள் காற்று வடிப்பான் என்றழைக்கப் படும் அழுத்தக் காற்றோட்ட அலகும் உள்ளன.
  • இவற்றின் வேலை நுண்ணுயிர் அற்ற ஒருசூழலை உருவாக்குவதாகும்.
17. மரபணு தொகையை ஆராய்ச்சியில் அறம்சார் பிரச்சினைகள் பற்றி எழுதுக. 
  • தொழிலில் அமர்த்துதல் மற்றும் காப்பீட்டில் மரபணுக்கள் வேறுபாட்டை உள்ளடக்கிய மரபணுசார் தகவல் பயன்பாட்டில் தனிமனித ரகசியத்தையும் நேர்மையையும் செயல்படுத்துதல்.
  • மரபணுசார் சோதனை போன்ற புதிய மரபணுசார் தொழில்நுட்பங்களைச் சிகிச்சைச் சார் மருத்துவ நடைமுறையில் ஒன்றிணைத்தல்.
  • மக்களின் முன் ஒப்புதலுடன் கூடிய மரபணு ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பைச் சார்ந்த அறநெறி சார்பிரச்சனைகள் ஆகும்.

Leave a Reply