12th Botany Unit 10 Lesson 10 Additional 3 Marks

12th Botany Unit 10 Lesson 10 Additional 3 Marks

TN 12th Bio-Botany Unit 10, 10th lesson Additional 3 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் – Additional 2 Marks Question – Answers 

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

Additional Questionas – மூன்று மதிப்பெண் வினாக்கள்

1.நான்கு வணிகப் பருத்தி சிற்றினங்கள் கூறு?
  1. சா.ஹிர்சுட்டம்
  2. கா. பார்படென்ஸ்
  3. கா.ஹெர்பேசியம்
  4. கா.ஆர்போரியம்
2.பருத்தியின் பயன்கள் கூறு?
  • நெசவுத் துணிகள், உள்ளாடைகள், பொம்மை மற்றும் மருத்துவமனைகளில் பயன்படும்.
3.சணல் தரும் 2 சிற்றினங்கள் கூறு?
  • கார்கோரஸ் கேப்சுலாரிஸ் –
  • சிந்தோ பர்மா பூர்வீகம்
  • கார்போரஸ் ஒலிடோரியஸ் – ஆப்பிரிக்கா பூர்விகம்
4.வல்கனைசேசன் குறிப்பு வரைக?
  • இரப்பரை 1500C ல் கந்தகத்தில் அழுத்தத்துடன் சூடாக்குதல். இதனால் இரப்பர் பொருட் களிலுள்ள குறைகள் சரியாகும்.
5. மரக்கூழ் தயாரிக்கப் மரங்கள் யாது? 
  • மீலியா அசடிரக்டா (மலை வேம்பு )
  • நியோலாமார்கியா சைனென்சிஸ் (வெண் கடம்பு)
  • கேசுவரைனா (சவுக்கு)
6.சாயங்கள் பண்டைக்காலத்திலிருந்து உபயோகத்தில் உள்ளன? விளக்குக.
  • எகிப்தின் கல்லறை ஒவியங்களில் சாயங்கள் இருந்தற்கான பதிவுகள் உள்ளன.
  • அவுரி, குங்குமப்பூவின் சாயங்கள் மம்மியைச் சுற்றி சிமெண்ட்களில் உள்ளன.
  • இந்தியப் பாறை ஓவியங்களிலும் உள்ளன.
7. ஹென்னாவின் முக்கியத்துவம் கூறு? 
  • லாசோனியா இனெர்மிஸ் தாவரத்தின் தண்டு, இலைகளிருந்து ஹென்னா எனும் ஆரஞ்சுச் சாயம் கிடைக்கும்.
  • இதன் சாயப் பொருளான ‘லாகோசோன்” தோல் எரிச்சல் தராது.
  • தோல், முடி, நகச் சாயமாகப் பயன்படும். தோல், குதிரை வால், தலைமுடி சாயமாகப் பயன்படும்.

 

8.தென்னிந்தியா மக்கள், தங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு எவற்றைப் பயன்படுத்தினர்?

  • மஞ்சள், பாசிப்பயறு, மருதாணி, சிகைக்காய், உசிலை.
9. “பெர்ஃபியூம்” என்ற சொல்லுக்கு விளக்கம் தருக? 
  • பெர்(வழி), பியூம்ஸ் (புகை) எனப் பொருள்படும் 2 இலத்தீன் சொற்களிலிருந்து உருவானது. ‘புகை வழி’ எனப் பொருள்படும்.
10. போதைப் பொருள் தடுப்புத் துறை (Narcotics control Board – NCB) குறிப்பு வரைக? 
  • போதைத் தடுப்புத் சட்டத்தை அமல்படுத்தும்,நுண்ணறிவுப் பிரிவு.
  • போதை மருந்து கடத்தல், தவறாகப் பயன் படுத்துவதை தடுக்கும் பொறுப்பு இத்துறைக்கு உள்ளது.

12th Botany Unit 10 Lesson 10 Additional 3 Marks

11. தாவர வளங்களைப் பயன்படுத்தி பதிய தொழிலைத் தொடங்கலாமா?
  • தாவர வளங்களையும் பயன்படுத்தி, புதிய தொழிலைத் தொடங்கும் வழி, அதற்கான செயல்முறைகள், இவற்றை தொழில்முனைவுத் தாவரவியல் விளக்கும்.
12. தொழில்முனைவோரின் பணி என்ன? 
  • மக்கள் வாங்குவதற்கான, தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்குபவர்.
  • தயாரிப்புக்கும், விற்பனைக்கும் துணை நிற்கும். நிறுவனத்தைத் துவக்கி நடத்துபவர்.
13. கேப்சைசின் – குறிப்பு வரைக
  • மிளகாயின் செயல்படும் கலவைக் கூறு.
  • வலி நீக்கும் பண்பு கொண்டது.
  • காரத்தன்மை ஸீகோவில்லி அலகுகளால் அளக்கப்படும்.
  • இந்தியாவின் மிகக்காரமான நாகா வெப்பர் மிளகாய்: 1,349,000 SHU அளவு கொண்டது.
14. புளியின் பயன்கள் கூறு?
  • சூப்களை மணமூட்ட அமெரிக்கா, மெக்லி கோவில் பயன்படும்.
  • இந்தியாவில் சமையலுக்கு, பழக்கூழ் கலவைப் பொருள்.
  • தாய்லாந்து, மலேசியாவின் இனிப்புப்புளி இறக்குமதி செய்யப்பட்டு, உண்ணும் பழங்களாக விற்கப்படும்.
15. சுத்திகரிக்கப்பட்ட கரையும் கூழின் பயன்கள் கூறு? 
  • ரேயான், செயற்கைப்பட்டு. ஒளி ஊடுருவும் பிலிம், செல்லோபேன், செல்லுலோஸ் அசிட்டேட் பிலிம், நெகிழி,

12th Botany Unit 10 Lesson 10 Additional 3 Marks

16.மைசூர் மல்லிக்குப் பிறகு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட இரண்டாவது மல்லிகை இரகம் எது?  மதுரை மல்லியின் தனித்துவம்
  1. தடித்த இதழ்
  2. உயரத்திற்கேற்ற காம்பு
  3. ஜாஸ்மைன், ஆல்பா டெர்பினியால் வேதிப் பொருளால் நறுமணம்,
17. மருத்துவ அறிவால் அறியப்பட்ட தமிழ்நாட்டில் பழங்குடி இனங்கள் எது?
  • இருளர்கள்,
  • மலையாளி,
  • குரும்பர்,
  • பளியர்
  • காணிகள்.
18.நிலையான வேளாண் அபிவிருத்தி என்றால் என்ன?
  • இயற்கை வேளாண்மையில் உயிரிகள் பயன் படுத்தப்படுகின்றன.
  • இவை விலை குறைந்த, புதுப்பிக்கத் தகுந்த மூலமாக இருப்பதால் வேதி உரத்திற்கு மாற்றாகத் தொடர்பயன் தரு வேளாண்மையில் (Sustainable agriculuture) பங்கு பெறுகின்றன..
19. பழங்களில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எவை? 
  • பொட்டாசியம்.
  • நார்ச்சத்து,
  • போலிக் அமிலம்.
  • வைட்டமின்கள்,
20. நறுமண எண்ணெய்கள் தயாரிக்க பயன்படும் தாவர பாகங்கள் கூறு? 
  • இலை – கருவேப்பிலை, புதினா
  • மலர் – ரோஜா. மல்லிகை
  • பழங்கள் – சிட்ரஸ், ஸ்டிரா பெர்ரி
  • மரம் – சந்தனக்கட்டை, யூகலிப்டஸ்
21. ரேயான் என்றால் என்ன?
  • ரேயான் என்பது செயற்கைப்பட்டு, துணிகள், ஒளி ஊடுருவும் பிலிம்கள் (செல்லோபேன், சொல்லுலோஸ் அசிட்டேட் பிலிம்கள்) நெகிழிகள் தயாரிப்பிற்கான அடிப்படைப் பொருளாக சுத்திகரிக்கப்பட்ட கரையும் கூழ் உபயோகப்படுத்தப்படுகிறது. விஸ்கோஸ் செயல்முறையில் ரேயான் தயாரிப்பது ஒரு மிகப் பொதுவான செயல்முறையாகும்.
22. புலனுணர்வு மாற்ற மருந்துகள் என்றால் என்ன? 
  • சில தாவரங்களிலிருந்து பெறப்படும் வேதிப் பொருட்கள் அல்லது மருந்துகள் ஒருவனுடைய புலனுணர்வுக் காட்சிகளில் மருட்சியை ஏற்படுத்தும் தன்மையுடையதால் இது புலனுணர்வு மாற்ற மருந்துகள் என அழைக்கப்படுகின்றன.

Leave a Reply