12th Botany Pure Science Guide 7th Lesson Additional 3 Marks
12th Botany PURE SCIENCE 7th Lesson Additional 1 Mark Answers. 12th Standard Pure Science Grout Unit 9 7th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. சூழல் மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 9 | Lesson 9. சூழல் மண்டலம் – Additional 3 Mark Question – Answers
12th Botany Pure Science Guide 7th Lesson Additional 3 Marks
1. வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் என்றால் என்ன?
- சுமார் 1500 மீ குத்துயரத்தில்,மலை மற்றும் மலைச்சரிவுகளில் வெப்பமண்டல காணப்படும் இவை மழைக்காடுகள் அல்லது வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- 45 மீட்டருக்கு மேல் உயரமுள்ள செழிப்பாக வளரும் பெரிய மரங்கள். புதர்ச்செடிகள், கொடியினங்கள், ஏராளமான தொற்றுத்தாவரங் களும் காணப்படுகின்றன.
- பொதுவான தாவரங்கள் டிரோகார்பஸ், ஆர்டோகார்பஸ், மாஞ்சிஃபெரா, எம்பிளிகா, இக்ஸோரா போன்றவை இக்காடுகளில் காணப்படுகின்றன.
2.அலையாத்தி (அ) சதுப்புநிலக்காடுகள் பற்றி எழுதுக.
- இவை முகத்துவாரங்கள், தீவுகளின் சதுப்புநில ஓரங்களிலும், கடற்கரையோரங்களுக்கு அருகேயும் வளரும் காடுகளாகும். இதற்கு அலையாத்தி (அ) சதுப்புநிலக்காடுகள் என அழைக்கப்படுகின்றன.
- இங்கு உவர்நிலத் தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
- இவை தாங்குவேர்கள், சுவாச வேர்கள் மற்றும் கனிக்குள் விதைமுளைத்தல் (vivi pary) ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன.
- இங்கு காணப்படும் தாவரங்கள் ரைசோபோரா அவிசினியா, சொனரேசியா.
- இக்காடுகள் குஜராத், கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளின் டெல்டா.
- சுந்தரவனப் பகுதிகளிலும் தமிழ்நாட்டில் பழவேற்காடு, பிச்சாவரம், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
3.தமிழகத்தின் ‘சோலைகள்’ என அழைக்கப்படக் காரணம் யாது?
- தமிழ்நாட்டில் மலையக குளிர்மண்டலக்காடுகள் ஆனைமலை, நீலகிரி, பழனி மலைகளில் 1000 மீட்டர் உயரத்திற்கு மேலுள்ள ஈரமான பள்ளத்தாக்குகள், குறும்பள்ளத்தாக்குகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதனால் இது தமிழகத்தின் “சோலைகள்” என அழைக்கப் படுகின்றன.
4.உருண்டோடும் புல்வெளிகள் அல்லது சோலைசூழ் புல்வெளிகள் என்றால் என்ன?
- தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளின் தாழ்வான மற்றும் நீர் உருண்டோடும் பகுதிகளில் சிறு பள்ளங்களிலும் காணப்படுகின்றன.
- எனவே இவை உருண்டோடும் புல்வெளிகள் அல்லது சோலைசூழ் புல்வெளிகள் என அழைக்கப்படுகின்றன.
5.பனிமலை புதர் காடுகள் பற்றி சிறு குறிப்பு வரைக,
- இவ்வகை காடுகள் இமயமலையின் 3600 மீ முதல் 4900 மீ உயரத்தில் காணப்படுகின்றன.
- உயரம் அதிகரிக்க அதிகரிக்க மரத்தின் உயரம் குறைகிறது.
- பொதுவாக சிறிய வகை தாவரங்களான சிடம். பிரைமுலா, சாக்ஸிஃப்ரேகா, ரோடோ டெண்ட்ரான், ஜீனிபெரஸ் மற்றும் பல வகையான லைக்கன்கள் ஆகிவை காணப்படுகின்றன.
6.வெப்ப மண்டல முட்காடுகளில் காணப்படும் தாவரங்கள் யாவை?
- அக்கேஷியா
- கலோட்ராபிஸ்
- கேசியா
- அல்பிசியா
- டைக்ரோஸ்டாக்கிஸ்
- ஜீஜிபஸ்
- யூபோர்பியா
- கப்பாரிஸ்