10th Tamil Guide Unit 9.2 | 10th Tamil Samacheer kalvi guide unit 9.2
9.2. சித்தாளு
10th Standard Tamil 9th Lesson Unit 9.2 Book Back Answers. TN 10th Tamil Unit 9.2 Book Back and additional Questions and answers. SSLC Tamil Chapter 9.2 Full Answer key based on the reduced syllabus. 10th Tamil Free Online Test. இயல் 9.2. சித்தாளு Book Back Answers. 10th Tamil Unit 9.1 to 9.5 Answers. TNPSC, TNTET, TRB… Important Notes. 10th Tamil Full Guide. Get More TN Book Answers https://www.studentsguide360.com/.
-
10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
பொற்காலமாக இருந்தாலும்இவள் தலையில் எழுதியதோகற்காலம்தான் எப்போதும்.தொலைந்ததே வாழ்வு எனதலையில் கைவைத்துபுலம்புவார் பூமியிலேதன் வாழ்வு தொலைக்காமல்தற்காத்து வைப்பதற்காய்தலையில் கைவைக்கிறாள் இவள்.வாழ்வில் தலைக்கனம்பிடித்தவர் உண்டு.தலைக்கனமே வாழ்வாகஆகிப்போனது இவளுக்கு.அடுக்குமாடி அலுவலகம்எதுவாயினும்அடுத்தவர் கனவுக்காகஅலுக்காமல் இவள் சுமக்கும்செத்தாலும் சிறிதளவேகற்களெல்லாம்அடுத்தவேளை உணவுக்காக.சலனங்கள் ஏற்படுத்தும்சித்தாளின் மனச்சுமைகள்செங்கற்கள் அறியாது.
I. பலவுள் தெரிக.
1. “இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும் …” – இவ்வடிகளில் கற்காலம் என்பது
- தலைவிதி
- பழைய காலம்
- ஏழ்மை
- தலையில் கல் சுமப்பது
விடை : தலையில் கல் சுமப்பது
10th Tamil Guide Unit 9.2
II. குறு வினா
‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
- ‘வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர்கள் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து ‘தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்
III. சிறு வினா
1. “சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம் சுட்டல்:-
- “சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம் பெற்றுள்ளது
பொருள்:-
- சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை
விளக்கம்:-
- அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம் கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும்.
- பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது.
10th Tamil Guide Unit 9.2
சித்தாளு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நாகூர் ரூமி இயற்பெயர் __________
விடை : முகம்மதுரஃபி.
2. நாகூர் ரூமி __________ பிறந்தவர்.
விடை : தஞ்சை மாவட்டத்தில்
3. __________ என்ற நாவலை நாகூர் ரூமி எழுதியுள்ளார்.
விடை : கப்பலுக்குள் போன மச்சான்
4. நாகூர் ரூமி __________ என்னும் இதழில் முதலில் எழுத தொடங்கினார்.
விடை : கணையாழி
5. தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது __________ ஆகும்.
விடை : செங்கற்கள்
II. குறு வினா
1. நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களை கூறுக
- மீட்சி
- சுபமங்களா
- புதிய பார்வை
- குங்குமம்
- கொல்லிப்பார்வை
- குமுதம்
- இலக்கிய வெளிவட்டம்
2. நாகூர் ரூமி எவ்வகை தளங்களில் இயங்கி வருபவர்?
- கவிதை
- குறுநாவல்
- சிறுகதை
- மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்
3. நாகூர் ரூமியின் கவிதை தொகுதிகள் யாவை?
- நதியின் கால்கள்
- ஏழாவது சுவை
- சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் இதுவரை வெளியாகி உள்ளன
4. நாகூர் ரூமி படைப்புகள் யாவை?
- மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- சிறுகதைத் தொகுதிகள்
- கப்பலுக்குள் மச்சான் என்ற நாவல்
5. சித்தாள் கற்கள் சுமக்க காரணம் யாது?
- வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும். அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.
III. சிறு வினா
1. நாகூர் ரூமி பற்றி குறிப்பு வரைக
- நாகூர் ரூமி இயற்பெயர் முகம்மதுரஃபி.
- நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
- 1980 கணையாழி என்னும் இதழில் எழுத தொடங்கினார்.
- கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
- மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பார்வை, குமுதம், இலக்கிய வெளிவட்டம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
- நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் இதுவரை வெளியாகி உள்ளன.
- மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத் தொகுதிகள் ஆகியவற்றுடன கப்பலுக்குள் மச்சான் என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
2. சித்தாளின் இன்னல்களை விளக்குக
- பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்
- தன் வாழ்வை தொலைத்து விடாமல் காத்துக் கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.
- வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.
- அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குத்தான். இவள இறந்தால் கூட சலனம் சிறிதளவு தான்.
- இந்த சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கு செங்கற்கள் அறியாது.
பலவுள் தெரிக
1.நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Answer:
அ) முகம்மதுரஃபி
2.நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
அ) மதுரை
ஆ) நெல்லை
இ) தஞ்சை
ஈ) திருச்சி
Answer:
இ) தஞ்சை
3.நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Answer:
ஆ) கணையாழி
4.நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Answer:
இ) கப்பலுக்குப் போன மச்சான்
5.சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………
அ) தலைக்கனம்
ஆ) அடுத்தவர் கனவு
இ) சித்தாளின் மரணம்
ஈ) சித்தாளின் புலம்பல்
Answer:
இ) சித்தாளின் மரணம்
6.தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………
அ) கட்டடம்
ஆ) செங்கற்கள்
இ) கம்பிகள்
ஈ) மணல்
Answer:
ஆ) செங்கற்கள்
7.தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….
அ) சித்தாளு
ஆ) பொறியாளர்
இ) உழவர்
ஈ) காவலர்
Answer:
அ) சித்தாளு
8.நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….
அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) கொல்லிப்பாவை
இ) நதியின் கால்கள்
ஈ) மீட்சி
Answer:
இ) நதியின் கால்கள்
9.இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………
அ) முதலாளிகள்
ஆ) கவிஞர்கள்
இ) மக்கள்
ஈ) அமைச்சர்கள்
Answer:
ஆ) கவிஞர்கள்
10.தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?
அ) மோனை நயம்
ஆ) எதுகை நயம்
இ) இயைபு
ஈ) உவமை அணி
Answer:
அ) மோனை நயம்
11.‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
அ) நாகூர் ரூமி
ஆ) கண்ணதாசன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பாரதியார்
Answer:
அ) நாகூர் ரூமி
12.மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.
அ) மீட்சி
ஆ) சுபமங்களா
இ) ஏழாவது சுவை
ஈ) புதியபார்வை
Answer:
இ) ஏழாவது சுவை
13.நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
அ) கவிதைத் தொகுதி
14.‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
இ) நாவல்