10th Tamil Guide Unit 9.1 | 10th Tamil Samacheer kalvi guide chapter 9.1
9.1. ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
10th Standard Tamil 9th Lesson Unit 9.1 Book Back Answers. TN 10th Tamil Unit 9.1 Book Back and additional Questions and answers. SSLC Tamil Chapter 9.1 Full Answer key based on the reduced syllabus. 10th Tamil Free Online Test. இயல் 9.1. ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Book Back Answers. 10th Tamil Unit 9.1 to 9.5 Answers. TNPSC, TNTET, TRB… Important Notes. 10th Tamil Full Guide. Get More TN Book Answers https://www.studentsguide360.com/.
-
10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
விருதுகள்
- குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன்- திரைப்படம்)
- சாகித்திய அகாதெமி விருது – சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
- சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது
I. பலவுள் தெரிக.
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
- அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
- பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
- அறிவியல் முன்னேற்றம்
- வெளிநாட்டு முதலீடுகள்
விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் –இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
- தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
- சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
- அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
- அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
விடை : தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
II. குறு வினா
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
- நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு. நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.
III. சிறு வினா
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
“தாகத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:-
- கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்
மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்பிக்கும் செயல்:-
- இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைகாரனுக்கு இரண்டனாவை அவர் போட்டார். அதை பெற்றுக் கொண்டவர் கைகள் குவித்து “சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்த பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யமாமல் இருந்திருந்தாலோ அல்லது தரம்ம் செய்ய ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில் தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதை தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
- தர்மம் தந்தவனும் அதைப் பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.
IV. நெடு வினா
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க
ஜெயகாந்தம் (நினைவு இதழ்) – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _____________ சாகித்திய அகாதெமி விருது ஜெயகாந்தனின் புதினம் ஆகும்
விடை : சிலநேரங்களில் சில மனிதர்கள்
2. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் _________ முதல் _________வரை ஆகும்.
விடை : 1934 முதல் 2015
3. ஜெயகாந்தன் _________ என சிறப்பு பெயர் பெற்றவர்
விடை : சிறுகதை மன்னன்
4. ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு _________
விடை : 1972
II. சிறு வினா
1. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
- குடியரசுத்தலைவர் விருது
- சாகித்திய அகாதெமி விருது
- சோவியத் நாட்டு விருது
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது
2. அசோக மித்திரன் பார்வையில் ஜெயகாந்தன் பற்றி எழுதுக
- ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்த பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை.
- துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்று ஒவ்வாது, அவர் அரசியிலில் தொடர்நது பங்கு பெறமால் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.
3. கா.செல்லப்பன் பார்வையில் ஜெயகாந்தன் பற்றி எழுதுக
- நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை.
- நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமரிந்த ஞானச் செருக்கு, கம்பீரமானக குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் – இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழினின் சிறப்பான அடையாளங்கள்.
- படிக்காத மேதை என குறிப்பிடப்படும் அவர், முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரஞ்சு இலக்கியங்களை தானே படித்து உணர்ந்தத மட்டுமன்றி, வாழ்க்கையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர்.
4. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு யாவை?
- குருபீடம்
- யுகசாந்தி
- ஒரு பிடி சோறு
- உண்மை சுடும்
- இனிப்பும் கரிப்பும்
- தேவன் வருவாரா
- புதிய வார்ப்புகள்
5. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் யாவை?
- பிரளயம்
- கைவிலங்கு
- ரிஷிமூலம்
- பிரம்ம உபதேசம்
யாருக்காக அழுதான்?
- கருணையினால் அல்ல
- சினிமாகவுக்குப் போன சித்தாளு
6. ஜெயகாந்தன் எழுதிய புதினங்களை எழுதுக.
- பாரீசுக்குப் போ
- சுந்தர காண்டம்
- உன்னைப் போல் ஒருவன்
- கங்கை எங்கே போகிறாள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
7. ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுக.
- வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை
8. ஜெயகாந்தன் திரைப்படமான படைப்புகளை எழுதுக.
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார்
- ஊருக்கு நூறு பேர்
- உன்னைப் போல் ஒருவன்
- யாருக்காக அழுதான்
9. ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
- ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தது. மிகப்பெரிய சவாலும் அதுதான்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்
2.சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
3.தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்
4.“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
5.கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை
6.ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015
7.பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி
8.முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை
9.“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி
10.தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்
11.ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
12.சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்
13.கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
14.சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன
15.உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது
16.மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)
17.கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்
18.கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்
19.கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
20.பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
21.ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு
22.சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
23.படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
24.திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்
25.ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
26.ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………………..
அ) 1972
ஆ) 1971
இ) 1975
ஈ) 1978
Answer:
அ) 1972
இன்னுமொரு முகம் (கவிதை)
ஜெயகாந்தன் சில கவிதைகளையும் திரைப்பாடல்களையும் படைத்திருக்கிறார். அவரது படைப்பாற்றலின் இன்னொரு பக்கம் அது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அவரின் கவிதை இது
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும்-ஏழைகண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழையமண்ணின் வாடையும் சேர்ந்து வரும்”