10th Tamil guide unit 3

10th Tamil Guide Unit 3.6

10th Tamil Guide Unit 3.6

இயல் 3.6. திருக்குறள்

10th Tamil Guide Unit 3.6 TN 10th Samacheer kalvi Guide Lesson 3, Unit 3.6 Book Back and Additional Question and answer. SSLC Tamil Unit 3.6. திருக்குறள் Full Answer key 2022. SSLC Tamil Reduced Syllabus Guide. 10th Tamil Unit 3 Free Online Test. 10th Tamil Full Guide Samacheer kalvi guide. Unit Test Question paper. 1st and 2nd Revision Test Syllabus & Time Table. 10th Tamil Chapter 3 Answers. TN Goc Announced KALVI TV Videos.

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide Unit 3.6 திருக்குறள்

 

3.6. திருக்குறள்

10th Tamil Guide Unit 3.6
10th tamil guide 3.6. திருக்குறள்
10th tamil guide 3.6. திருக்குறள்
10th tamil guide 3.6

 

1. ‘நச்சப் படாதவன்’ செல்வம்’ – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
  • நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன்
2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
  • கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம்  – இன்னிசை அளபெடைகள்

3. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பப்பாடு எது?
  1. கூவிளம் தேமா மலர்
  2. கூவிளம் புளிமா நாள்
  3. தேமா புளிமா காசு
  4. புளிமா தேமா பிறப்பு
விடை : கூவிளம் தேமா மலர்
 

II. சிறு வினா

 

வேலோடு நின்றான் இடஎன்றது போலும்
கோலோடு நின்றாள் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
 
இப்பாடலில் உவமை அணி பயின்று வந்துள்ளது.
அணி இலக்கணம்:-
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும், உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.
உவமை:-
வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்
உவமேயம்:-
ஆட்சி அதிகாரத்தை கொண்டு மன்னர் வரி விதித்தல்
உவம உருபு:-
போல (வெளிப்படை)
விளக்கம்:-
ஆட்சியதிகாரத்தை கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்.

  திருக்குறள் – கூடுதல் வினாக்கள்

II. குறு வினா

 

1. ஒழுக்கம் எதற்கு மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்?
ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.
2. ஒழுக்கமாக வாழ்பவர், ஒழுக்கம் தவறுபவர் எதனை அடைவர்?
ஒழுக்கமாக வாழும் எல்லோரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்.
3. எவை அழிந்தால் அவற்றால் வரும் துன்பம் அழியும் என வள்ளுவர் கூறுகிறார்?
ஆசை, சினம், அறியாமை அழிந்தால் அவற்றால் வரும் துன்பம் அழியும் என வள்ளுவர் கூறுகிறார்.
4. யார் பகைவர் இன்றி தானே கெடுவான்?
குற்றங்களை கண்டபோது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக் கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னனே பகைவர் இன்றி தானே கெடுவான்.
5. எப்பொருளை காண்பது அறிவு என வள்ளூவர் கூறுகிறார்
எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மைப் பொருளை காண்பது அறிவு என வள்ளூவர் கூறுகிறார்.
6. கிடைத்தற்கரிய பெரும்பேறு எது?
பெரியோரைப் போற்றி துணையாக்கி கொள்ளுதேல கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.
7. எவரால் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.
விடா முயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.
8. இரக்கமில்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது?
பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை அதைப் போல இரக்கம் இல்லாத கண்களாலும் பயனில்லை.
9. உலகமே உரிமையுதாகும் எப்போது?
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
10. ஒருவருக்கு பெருமை தருவது எது?
விரும்பத்தக்க இரக்ககுணம் கொண்டவர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் ஏனெனில் பிறர் நன்மை கருத்திக் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவர்.
11. முயற்சி பற்றி வள்ளூவர் கூறுவன யாவை?
முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.

பலவுள் தெரிக

 

1.கீழக்காண்பனவற்றுள் பொருந்தாத இணை எது?
அ) உயிரினும் மேலானது – ஒழுக்கம்
ஆ) ஒழுக்கமுடையவர் – மேன்மை அடைவர்
இ) உண்மைப் பொருளைக் காண்பது – அறிவு
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்
Answer:
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்
2.பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) அழிக்க வேண்டியவை – ஆசை, சினம், அறியாமை
ஆ) பெரியோரை துணையாக்கிக் கொள்ளுதல் – பெறும்பேறு
இ) நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் – பிறர் நன்மையைக் கருதுபவர்
ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்
Answer:
ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்
3.நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி எது?
அ) உவமையணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உருவக அணி
Answer:
அ) உவமையணி
4.பொருத்துக.
1. மேன்மை – அ) சினம்
2. வெகுளி – ஆ) உயர்வு
3. மயக்கம் – இ) வறுமை
4. இன்மை – ஈ) அறியாமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
5.உயிரினும் மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது……………………………….
அ) ஒழுக்கம்
ஆ) மெய் உணர்தல்
இ) கண்ணோட்டம்
ஈ) கல்வி
Answer:
அ) ஒழுக்கம்
6.“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) எதுகை
7.“பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….
அ) நூல்
ஆ) துணை
இ) பேறு
ஈ) அரிய
Answer:
ஆ) துணை
8.“முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” இதில் “இன்மை’ என்பதன் பொருள்……………………………….
அ) வறுமை
ஆ) இல்லை
இ) முயற்சி
ஈ) செல்வம்
Answer:
அ) வறுமை
9.பொருத்துக.
1. ஒழுக்கமுடைமை – அ) 36 வது அதிகாரம்
2. மெய்உணர்தல் – ஆ)14 வது அதிகாரம்
3. பெரியாரைத் துணைக்கோடல் – இ) 56வது அதிகாரம்
4. கொடுங்கோன்மை – ஈ) 45 வது அதிகாரம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4. ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Leave a Reply