5th Tamil Term 3 Lesson 3.4 Book Back Answers
5th Tamil Term 3 Lesson 3.4 மரபுத் தொடர்கள் Book Back Answers. 5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide.
Class 5 – Term 3 – Lesson 3.4. மரபுத் தொடர்கள்
I. கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 நாங்கள்—————உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/ விடிவெள்ளியாக)விடை : வாழையடி வாழையாக
- அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும்கிடையாது. அவன் ஒரு——(அவசரக்குடுக்கை/புத்தகப்பூச்சி)விடை : புத்தகப்பூச்சி
- பாரதிதாசன் கவிதை உலகில்———-ப்பறந்தார். (பற்றுக்கோடாக/ கொடி கட்டி)
விடை : கொடி கட்டி
II. பொருத்துக.
- கயிறு திரித்தல் – பொய் அழுகை
- ஓலை கிழிந்தது – விடாப்பிடி
- முதலைக் கண்ணீர் – இல்லாததைச் சொல்லல்
- குரங்குப்பிடி – மறைந்து போதல்
- நீர் மேல் எழுத்து – வேலை போய்விட்டது
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ
III. ‘காலை வாரிவிடுகிறது‘ – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத்தொடருக்குப் பொருத்தமாக அமையும்?
- காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக்———————-.
- காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைக்———————-.
- மறதி நம்மை அடிக்கடி ———————-
- இளமைக்காலம் நம்மை அடிக்கடி———————-.
விடை : மறதி நம்மை அடிக்கடி
IV. மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க
- மாயச்செயல்
- கதை விடுதல்
- மாற்றம் பெறுதல்
- பயனில்லாது இருத்தல்
விடை : மாற்றம் பெறுதல்
V. சொற்களை த் தொடரில் அமைத்து எழுதுக.
1. பொறுமை _________
விடை : வாழ்வில் முன்னேற பொறுமை அவசியம்
2. நூல்கள் _________
விடை : தமிழ் நூல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை
3. தமிழ்மொழி _________
விடை : செம்மொழிகளுள் தமிழ் மொழி ஒன்று
4. அன்பு _________
விடை : அம்மா என் மீது அன்பாக இருப்பார்
5. கவிஞர் _________
விடை : பாரதியார் ஒரு தேசியக் கவிஞர் ஆவார்
VI. பொருத்துக
- பாரதியார் – என் தமிழ் இயக்கம்
- பாரதிதாசன் – கொடி முல்லை
- வாணிதாசன் – குயில் பாட்டு
- திருமுருகன் – வானம் வசப்படும்
- பிரபஞ்சன் – தமிழியக்கம்
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ
VII. பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.
அழகன், பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால், அவன் மிகவும் டையர்டாக இருந்தான்.
விடை:–
அழகன், நண்பர்களோடு விளையாட்டு திடலுக்கு சென்றான். அங்கு அனைவருடனும் சந்தோஷமாகக் மட்டைபந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் களைப்பாக இருந்தான்.
VIII. பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
கபடி விளையாட்டு மன்றம்
அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கும் ஒரு நற்செய்தி
இடம் |
அண்ணா விளையாட்டு மைதானம், சென்னை. |
|
காலம் |
மாணவர் |
காலை 9 மணிமுதல் 11 மணிவரை |
மாணவியர் |
காலை 11 மணிமுதல் 12 மணிவரை |
1. நீங்கள் மேலே படித்தது என்ன?
- பாடல்
- கதை
- விளம்பரம்
விடை : விளம்பரம்
2. பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?
- மட்டைப்பந்து
- கபடி
- சதுரங்கம்
விடை : கபடி
3. மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?
- 1 மணி
- 2 மணி
- 3 மணி
விடை: 2 மணி
4. மைதானம் – இந்தச்சொல்லுக்குரிய பொருள் எது?
- பூங்கா
- அரங்கம்
- திடல்
விடை : திடல்
5. விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?
- கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
- கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
- கபடிவிளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம
விடை : கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
மொழியோடு விளையாடு
I. குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்
விடை : பாரதியார்
2. இது வெண்ணிறப் பறவை
விடை : புறா
3. தூக்கத்தில் வருவது
விடை : கனவு
கீழிருந்து மேல்
1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்
விடை : நூல்
வலமிருந்து இடம்
1. பாராட்டி வழங்கப்படுவது
விடை : விருது
2. மக்கள் பேசுவதற்கு உதவுவது
விடை : மொழி
3. சுதந்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்
விடை : விடுதலை
குறுக்கும் நெடுக்குமாக
1. முத்தமிழுள் ஒன்று
விடை : நாடகம்
II. குறிப்புகள் கொண்டு விடை எழுதுக
1. தலைகீழாய் என் வீடு
விடை : தூக்கணாங்குருவி
2. என் பார்வை கூர்நோக்கு
விடை : கழுகு
3. நானும் ஒரு தையல்காரி
விடை : சிட்டுக்குருவி
4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன்
விடை : கொக்கு
5. எனக்கு வீடு கட்டத் தெரியாது
விடை : குயில்
III. சொல்லிருந்து புதிய சொல்
1. பாரதியார்
விடை : பாரதியார், பார், ரதி
2. மணிக்கொடி
விடை : மணி, கொடி, மடி,
3. பாவேந்தர்
விடை : பார், வேந்தர், வேர், பா
4. நாடகம்
விடை : நாகம், கடம், நாம்
5. விடுதலை
விடை : விடு, தலை, விலை, தவிடு
IV. சொற்களைக் கொண்டு புதிய தொடர் உருவாக்குக.
1. உண்மை
விடை : நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்
2. பெருமை
விடை : தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்
3. பாடல்
விடை : பாரதிதாசனின் பாடல் வரிகள் புரட்சி மிகுந்ததாக உள்ளது.
4. நாடகம்
விடை : இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்ததே முத்தமிழ் ஆகும்
5. தோட்டம்
விடை : எங்கள் தோட்டத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகமாக உள்ளது
6. பரிசு
விடை : விளையாட்டடில் வெற்றி பெற்றவரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது
V. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடரமைக்க.
1. பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.
விடை : பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
2. பறவை அழகான புறா
விடை : புறா அழகான பறவை
3. தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்
விடை : தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது
4. போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த
விடை : உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்