You are currently viewing 5th Tamil Term 3 Lesson 3.2 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.2 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.2 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.2 புதுவை வளர்த்த தமிழ் Book Back Answers. 5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide. 5th All Term Book back answers.

Class 5 – Term 3 – Lesson 3.2 புதுவை வளர்த்த தமிழ்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. ‘குயில்பாட்டு’ நூலை எழுதியவர் யார் ______________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. வாணிதாசன்
  4. புதுவை சிவம்

விடை : பாரதியார்

2. ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனப் பாடியவர் ______________

  1. பாரதிதாசன்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. பிரபஞ்சன்

விடை : பாரதிதாசன்

3. “பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆடடா“ எனப் பாடியவர் ______________

  1. பாரதிதாசன்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. திருமுருகன்

விடை : வாணிதாசன்

4. “பாட்டிசைத்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பாட்டு + இசைத்து
  2. பாடல் + இசைத்து
  3. பா + இசைத்து
  4. பாட + இசைத்து

விடை : பாட்டு + இசைத்து

5. “மூன்று + தமிழ்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________

  1. மூன்றுதமிழ்
  2. முத்துத்தமிழ்
  3. முதுதமிழ்
  4. முத்தமிழ்

விடை : முத்தமிழ்

II. பொருத்துக

  1. பாரதிதாசன் – கொடி முல்லை
  2. தமிழ்ஒளி – பாஞ்சாலி சபதம்
  3. பாரதியார் – பாவலர் பண்ணை
  4. வாணிதாசன் – மாதவி காவியம்
  5. திருமுருகன் – இருண்ட வீடு

விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ, 5 –

 

III. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?

  • பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய முப்பெருங் காவியங்களைப் பாரதியார் படைத்தளித்தார்.

2. பாரதிதாசன் – பெயர்க் காரணம் தருக.

  • பாரதியார் மீது அன்பும் பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான், தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக்கொண்டார்.

3. பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?

  • பிரபஞ்சன் எழுதிய “வானம் வசப்படும்” என்ற நூலுக்குச் “சாகித்திய அகாதெமி” விருது கிடைத்துள்ளளது.

4. பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?

  • பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் வாணிதாசனும், புதுவை சிவமும் ஆவர்.

5. தமிழ் ஒளியின் படைப்புகளை எழுதுக.

  • சிற்பியின் கனவு, வீராயி, கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீதியோ வீணையோ, முன்னும்-பின்னும், அணுவின் ஆற்றல், மாதவி காவியம் ஆகியவை தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.

Leave a Reply