5th Tamil Term 3 Lesson 2.4 Book Back Answers
5th Tamil Term 3 Lesson 2.4 மயங்கொலிச்சொற்கள் Book Back Answers. 5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide.
5th Tamil Guide – Term 3 – Lesson 2.4. மயங்கொலிச்சொற்கள்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. சாலையில் பள்ளம் இருந்ததால், ——— பேருந்தை மெதுவாக ஓட்டிச்சென்றார்.
- ஓட்டுநர்
- ஓட்டுனர்
- ஓட்டுணர்
விடை : ஓட்டுநர்
2. கடவூருக்குச் செல்ல எந்த ———ப் போக வேண்டும்?
- வலியாக
- வளியாக
- வழியாக
விடை : வழியாக
3. கூண்டிலிருந்த ———யைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டான் எழிலன்.
- கிலி
- கிளி
- கிழி
விடை : கிளி
4. நீரில் துள்ளி விளையாடுகிறது ——— மீன்
- வாளை
- வாலை
- வாழை
விடை : வாலை
5. தாய்ப்பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ——–ப்போனது.
- இழைத்து
- இளைத்து
- இலைத்து
விடை : இளைத்து
6. கடல்——-யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.
- அளை
- அழை
- அலை
விடை : அலை
II. பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களைப் படித்துக்காட்டுக
- நடனம் என்பது, ஒரு —————- (களை/ கலை/ கழை)
விடை : கலை
- சோளம் என்பது, ஒரு ————— (தினை/ திணை)
விடை : தினை
- பெட்ரோல் என்பது, ஓர்————– (எரிபொருள்/ எறிபொருள்)
விடை : எரிபொருள்
- ஒட்டகம் என்பது ஒரு ————— (விளங்கு/ விலங்கு)
விடை : விலங்கு
- தென்னை என்பது, ஒரு ————- (மறம்/ மரம்)
விடை : மரம்
III. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.
- ஆற்றின் ஓரம் ———. ஆடையில் இருப்பது ———.
விடை : கரை / கறை
- மடியைக் குறிப்பது ———. மரத்தில் தாவுவது ———.
விடை : குறங்கு / குரங்கு
- பரந்து இருப்பது ———. பறந்து செல்வது ———.
விடை : பரவை / பறவை
- மரத்தை அறுப்பது ———. மனிதர் செய்வது ———.
விடை : அரம் / அறம்
- சுவரில் அடிப்பது ———. மாதத்தில் ஒன்று ———.
விடை : ஆணி / ஆனி
IV. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. ஆயிரம்
விடை : என்னிடம் ராமு ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினான்.
2. உண்மை
விடை : நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்
3. புகார் நகரம்
விடை : புகார் நகரம் சோழநாட்டின் துறைமுகமாக இருந்தது,
4. ஆடுகள்
விடை : ஆடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
V. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
கல்வி கண் போன்றது
நீதி தவறாதவன் அரசன்
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்
தீங்கு செய்தால் தீமை விளையும்
1. தீங்கு செய்தால் என்ன நேரிடும்?
- தீங்கு செய்தால் தீமை நேரிடும்
2. சிலம்பின் பரல் எவற்றால் ஆனது?
- சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது
3. கல்வி எதனைப் போன்றது?
- கல்வி கண் போன்றது
4. நீதி தவறாதவன் யார்?
- நீதி தவறாதவன் அரசன்
5. பணப்பையுடன் வந்தது யார்?
- ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்
VI. வினாக்களுக்கு விடையளிக்க.
புறநானூறு என்னும் நூலில் அறப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அரசன் ஒருவன் மற்றொரு நாட்டு அரசன்மீது போர் தொடுக்கும் முன்பு, பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளர்களையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இச்செய்தி முதுகுடுமிப்பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்னும் புலவர் பாராட்டுகிறார். மேலும், படையெடுத்து வரும் பகைவன் மீது, மறைந்துநின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ‘ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.
1. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
- புறநானூறு
2. நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் யார்?
- முதுகுடமிப்பெருவழதி
3. ‘ஞாயில்கள்’ என்றால் என்ன?
- மறைந்து நின்று அம்பு எய்தும் நிலையங்கள்
4. பகைவன் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
- நண்பன்
5. ‘பிணி’ என்பதன் பொருள்
நோய்
VII. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க
(சொல்லி, மீனவன், கடலிலே, பார்த்ததே, வலையில் விட்டதே, செய்ததே)
துள்ளி குதிக்கும் மீன் கடலிலே
வெள்ளியை வானத்தில் பார்த்ததே
மீனவன் வலை போட்டானே
வலையில் சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி செய்ததே
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி விட்டதே
மீன் நன்றி சொல்லி சென்றதே
VIII. ஒரு சொல்லில் இரு தொடரை உருவாக்குவோம்.
திங்கள் வாரத்தின் இரண்டாம் நாள். நிலவுக்கு திங்கள் என்றும் பெயர் உண்டு |
திங்கள்
|
சூரியனுக்கு ஞாயிறு என்ற பெயர் மறுபெயர் உண்டு. ஞாயிறு வாரத்தின் முதல் நாள் |
ஞாயிறு
|
IX. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் எழுதுக.
1. கல்விக் கண் திறந்தவர் போற்றப்படுகிறார் எனக் காமராசர்
- விடை : கல்விக்கண் திறந்தவர் எனக் காமராசர் போற்றப்படுகிறார்.
2. கற்றிட வேண்டும் கல்வியைக் கசடறக்
- விடை : கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்
3. மனுநீதிச் சோழன் மன்னர் சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த
- விடை : சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த மன்னர் மனுநீதிச் சோழன்
4. காற்சிலம்பு உடையது கண்ணகியின் மாணிக்கப்பரல்கள்
- விடை : கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் உடையது
5. தந்தையும் தெய்வம் அன்னையும்
- விடை : அன்னையும் தந்தையும் தெய்வம்
X. சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
நெய்தல், வயது |
நெல், வயல் |
நெல் வயல் |
கல்வி, கண் |
கவி, கண் |
கண்கவி |
தலைவன், மீனவர் |
மீன், தலை |
மீன் தலை |
மரகதம், பல்லாண்டு |
மரம், பலா |
பலாமரம் |
பாண்டியர், மனைவி |
பார். மனை |
மனைபார் |