5th Tamil Guide Term 3 Guide Lesson 2.1 கல்வியே தெய்வம்
5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide.
இயல் 2: அறம்/தத்துவம்/சிந்தனை
2.1. கல்வியே தெய்வம்
I. சொல்பொருள்
- விஞ்சும் – மிகும்
- அண்டும் – நெருங்கும்
- கசடற – குற்றம் நீங்க
- ஊறும் – சுரக்கும்
- திண்மை – வலிமை
- செழித்திட – தழைத்திட
II. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1.“கசடற” இச்சொல்லின் பொருள் …………………………….
- தவறான
- குற்றம் நீங்க
- குற்றமுடன்
- தெளிவின்றி
விடை : குற்றம் நீங்க
2. “வளமதை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
- வள + மதை
- வளமை + அதை
- வளம் + அதை
- வளம் + மதை
விடை : வளம் + அதை
3. “வெளிச்சம்” இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………
- இருட்டு
- வெளிப்படையான
- வெளியில்
- பகல்
விடை : இருட்டு
III. ஒன்றுபோல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.
முதலெழுத்து |
இரண்டாமெழுத்து |
|
|
IV. எதிர்ச்சொல் எழுதுக.
- நன்மை X தீமை
- புகழ் X இகழ்
- வெற்றி X தோல்வி
- வெளிச்சம் X இருட்டு
- தோன்றும் X மறையும்
V. “உம்“ என முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
- அன்னையும் – தந்தையும்
- கல்வியும் – நீயும்
- நன்மையும் – மென்மையும்
- சேரும் – கூடும்
- விண்ணையும் – திண்மையும்
- விஞ்சும் – கொஞ்சும்
VI. வினாக்களுக்கு விடையளிக்க..
1. பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது எது?
- பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது கல்வியே ஆகும்
2. கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்?
- கல்வியை குற்றம் நீங்க கற்க வேண்டும்.