5th Tamil Term 3 Guide Lesson 1.4 இணைச்சொற்கள்
5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Bubject book answers and guide.
இயல் 1: நாடு / சமூகம் / அரசு / நிருவாகம்
1.4 இணைச்சொற்கள்
I. கீழ்க்காணும் தொடர்களில் பொரு த்தமான இணைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
(ஈடும்எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக, இன்பமும்துன்பமும், கீரியும்பாம்பும்)
1. பானைகள் ———— வைக்கப்பட்டிருந்தன.
விடை : அடுக்கடுக்காக
2. நேற்றுவரை ———— போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.
விடை : கீரியும் பாம்பும்
- தேர்வில் ———— படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.
விடை : கண்ணுங்கருத்துமாக
4. வாழ்வில் ———— உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.
விடை : இன்பமும் துன்பமும்
5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ———— இருக்கும்.
விடை : ஈடும் எடுப்புமாக
II. விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக
- இன்பமும்துன்பமும் x துன்பமும்இன்பமும்
- அன்றும்இன்றும் x இன்றும்அன்றும்
- அங்கும்இங்கும் x இங்கும்அங்கும்
- உயர்வும்தாழ்வும் x தாழ்வும்உயர்வும்
- விண்ணும்மண்ணும் x மண்ணும்விண்ணும்
III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
1. பொருளுதவி
விடை : ஏழைகளுக்கு பொருளுதவி செய்யலாம
2. திறமைசாலி
விடை : திறமை உள்ளவனை திறமைசாலிகள் என்பர்
3. நம்பிக்கை
விடை : வாழ்வின் நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் முக்கியம்
4. ஆராய்ச்சி
விடை : பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்திய பின் தான் மருந்துகள் மனித பயன்பாட்டுக்கு வருகிறது.
5. வான்புகழ்
விடை : வள்ளுவரை வான்புகழ் கொண்ட வள்ளுவர் என்ற பெயரும் உண்டு
IV. பொருத்தமான சொற்களைக்கொண்டு, தொடரை முழுமையாக்குக.
(பாணர், ஊர்த்தலைவர், வல்வில் ஓரி, பூவண்ணன், பாலன்)
1. கொடைத்திறத்தில் சிறந்தவர்
விடை : வல்வில் ஓரி
2. மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தவர்
விடை : பாலன்
3. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தவர்
விடை : பூவண்ணன்
4. இசைப் பாடல்களைப் பாடுபவர்
விடை : பாணர்
5. மூதாட்டிபோல் வேடமிட்டவர்
விடை : ஊர்த்தலைவர்
மொழியோடு விளையாடு
I. சரியான எழுத்தை தேர்ந்தெடுத்து எழுதுக
- வல்வில் ஓரி வாரித் தரும் வள்ளல் (ள், ல், ழ்)
- பாணரே! உம் வறுமையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
- களிறும் கொடையாய் நல்கும் வான்புகழ்வல்வில் ஓரி (ன், ண்/ல், ள், ழ் )
- மக்களுக்குப் பாலன் மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது (ற்/ர்)
- பூவண்ணன் மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்தான் (ண, ன, ந)
II. கொடுக்கப்பட்ட சொற்களையும், குறிப்புகளையும் கொண்டு புதிய சொல் உருவாக்குக.
- விடுகதை – மரத்திற்கு ஆதாரம் __________விடை : விதை
- திருநெல்வேலி – பயிர்களைப் பாதுகாக்கும் __________விடை : வேலி
- நகர்ப்புறம் – விரலின் மணிமகுடம் __________விடை : நகம்
- இமயமலை – உண்கலம் __________விடை : இலை
- உருண்டை – நமது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று __________விடை : உடை
III. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
1. மதிவாணன் பலம் மிக்கவன் காற்றடித்ததால்
மரத்திலிருந்து பழம் விழுந்தது. (பழம்)
2. இந்த மரம் உயரமாக உள்ளது.
படைவீரகள் மறம் (வீரம்) கொண்டவர்கள் (மறம்)
3. நிலா தன் கையில் வளை அணிந்திருந்தாள்.
மீனவன் மீன் பிடிக்க வலை அவசியம் (வலை)
4. சூரியனில் இருந்து ஒளி கிடைக்கிறது.
இடி சத்தமாக ஒலித்தது (ஒலி)
5. பரிமளா கடையில் வெல்லம் வாங்கினார்.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது (வெள்ளம்)
IV. கீழ்க்காணும் குறுக்கெழுத்துப் புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடிக்க.
இடமிருந்து வலம்
- அறிவியல் அறிஞர்கள் செய்வது ____________________
விடை : ஆராய்ச்சி
- இரக்கம் என்ற சொல்லை இப்படியும் கூறலாம் ____________________
விடை : பரிவு
வலமிருந்து இடம்
- உலகின் மற்றொரு பெயர் ____________________
விடை : தரணி
- மக்களைக் காப்பவர் _______________
விடை : வேந்தன்
- நவதானிய வகைகளுள் ஒன்று _____________
விடை : கம்பு
மேலிருந்து கீழ்
- அரசரின் ஆலோசகர் ________________
விடை : அமைச்சர்
- கொல்லிமலை நாட்டின் அரசன் ________________
விடை : வல்வில்
கீழிருந்து மேல்
- இது வந்திட பத்தும் பறக்கும் ____________________
விடை : பசி
- விரைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________________
விடை : மெதுவாக
- இதைக் கேட்டால் மனம் மயங்கும் ___________________
விடை : இசை
VIII. வரிசைமாறியுள்ள தொடர்களை நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
- மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்
- ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
- ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்
- பாலன், பூவண்ணன் இருவரும் நிர்வாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
- பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
விடை :
- ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
- பாலன், பூவண்ணன் இருவரும் நிர்வாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
- மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்
- பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
- ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்