You are currently viewing 5th Social Science Guide Term 3 Lesson 1

5th Social Science Guide Term 3 Lesson 1

5th Social Science Guide Term 3 Lesson 1

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ____________ கோட்டை விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது.

அ. உதயகிரி

ஆ. வேலூர்

இ. செஞ்சி

விடை:ஆ. வேலூர்

2. திருமலை நாயக்கர் அரண்மனை ______________ யில் அமைந்துள்ளது.

அ. சேலம்

ஆ. திருமலை

இ. மதுரை

விடை:இ. மதுரை

3. உலகின் இடைக்கால கையெழுத்துப் பிரதி நூலகங்களில் ______________ மஹால் ஒன்றாகும்.

அ. சரஸ்வதி

ஆ. லட்சுமி

இ. துர்கா

விடை:அ. சரஸ்வதி

4. பத்மநாபபுரம் அரண்மனை ____________ பில் அமைந்துள்ளது.

அ. ஊட்டி

ஆ. கன்னியாகுமரி

இ. சென்னை

விடை:ஆ. கன்னியாகுமரி

5. _____________ கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

அ. திண்டுக்கல்

ஆ. செஞ்சி

இ. தரங்கம்பாடி

விடை:இ. தரங்கம்பாடி

II. பொருத்துக.

விடை:

III. சரியா தவறா?

Question 1.

தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.விடை:சரி

Question 2.

வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன.விடை:சரி

Question 3.

திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.விடை:சரி

Question 4.

ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின் மற்றொரு பெயராகும்.

விடை:தவறு. (ஊமையன் கோட்டை என்பது திருமயம் கோட்டையின் மற்றொரு பெயராகும்)

Question 5.

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது.விடை:சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

1. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் யாவை?

விடை:

  • சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனைகளும், கோட்டைகளும் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

2. தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

விடை:

  • டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படும் தரங்கம்பாடி கோட்டை, தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் (Tranquebar) வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது.
  • இந்தக் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. கோட்டையின் மையப் பகுதியில் நான்கு குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத்தூண் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது.

3. செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?

விடை:

  • செஞ்சிக் கோட்டை பல சிறப்பு அமைவுகளைக் கொண்டுள்ளது. அவை: திருமண மண்டபம், கோவில்கள், ஆனைக்குளம், களஞ்சியங்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.

4. திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறுகுறிப்பு வரைக.

விடை:

  • திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை நகரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

5. தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர் யார்? – அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

விடை:

  • தஞ்சாவூர் மராத்திய அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் நாயக்க அரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது தஞ்சாவூர் மராத்தியரின் அதிகாரப்பூர்வ இல்லமாகத் திகழ்ந்தது.
  • தஞ்சாவூர் அரண்மனை வளாகம் ஒரு சுற்றுலாத்தலமாகும். இது மூன்று தனித்தனி பார்வையிடங்களைக் கொண்டுள்ளது. அவையாவன : அரண்மனை, கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி (Manuscript) நூலகம் (சரஸ்வதி மஹால்)

V. விரிவான விடையளிக்க

1. வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.

விடை:

  • வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
  • தமிழ்நாட்டின் கோட்டைகளில், வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. இது ஆழமான மற்றும் அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளது. இந்த அகழி, ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருந்ததால் படையெடுப்பவர்கள் இதனைக் கடக்க அஞ்சினர்.
  • வேலூர்க் கோட்டை இராணுவக் கட்டடக்கலைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இது இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற கோபுரங்கள், உட்புற கோபுரங்களைவிடத் தாழ்வாக உள்ளன. 1799ஆம் ஆண்டில், 1 திப்பு சுல்தானின் குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்குச் சிறை வைக்கப்பட்டது. 1806ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது. வேலூர்க் கோட்டைக்குள் புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. வேலூர்க் கோட்டையின் உள்ளே முக்கியமான ஐந்து மஹால்கள் காணப்படுகின்றன,
  • அவையாவன: ஹைதர் மஹால், திப்பு மஹால், பேகம் மஹால், கண்டி மஹால், பாதுஷா மஹால்

2. திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.

விடை:

  • தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள திண்டுக்கல் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டை திண்டுக்கல் மலைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • மைசூர் அரசின் படையெடுப்பில் இருந்து தங்கள் நாட்டைக் காக்கும் பொருட்டு, மதுரை நாயக்கர்களால் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது. கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை, இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.

3. பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக் கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.

விடை:

  • பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று நினைவுச் சின்னமாகும். இது கல்குளம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.
  • பத்மநாபபுரம் அரண்மனை கேரள கட்டடக் கலையைக் கொண்டு மரத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது கலை மற்றும் கைவினைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
  • பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல்வேறு பார்வையிடங்கள் உள்ளன.

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

_________________, _____________ மற்றும் _____________ போன்ற அயல் நாட்டினர் இந்தியாவில் கோட்டைகளைக் கட்டினர்.விடை:டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

Question 2.

விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது _______________ ஆகும்.விடை:வேலூர்க் கோட்டை

Question 3.

1799ஆம் ஆண்டு _______________ குடும்பம் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது.விடை:திப்பு சுல்தானின்

Question 4.

வேலூர்க் கோட்டையில் _______________ உள்ளது.விடை:ஜலகண்டேஸ்வரர் கோயில்

Question 5.

மலைக் கோயில் என அழைக்கப்படுவது ______________ கோட்டையாகும்.

விடை:திண்டுக்கல்

Question 6.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை _______________

விடை:புனித ஜார்ஜ் கோட்டை

Question 7.

திருமயம் கோட்டை ______________ என்றும் அழைக்கப்படுகிறது.

விடை:ஊமையன் கோட்டை

Question 8.

சதுரங்கப்பட்டினம் கோட்டை _______________ உள்ளது.

விடை:காஞ்சிபுரத்தில்

Question 9.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டை _______________ ஆகும்.

விடை:செஞ்சிக்கோட்டை

Question 10.

டேனிஷ் கோட்டை என்பது ________________ கோட்டையைக் குறிக்கும்.

விடை:தரங்கம்பாடி

II. பொருத்துக

  1. தரங்கம்பாடி – சரஸ்வதி மஹால்
  2. செஞ்சிக்கோட்டை – இராணுவக் கட்டடக்கலை
  3. தஞ்சாவூர் கோட்டை – ஆனைக்குளம்
  4. பத்மநாபபுரம் அரண்மனை – சரிவகம்
  5. வேலூர்க் கோட்டை – கன்னியாகுமரி மாவட்டம்

விடை:

  1. தரங்கம்பாடி – சரிவகம்
  2. செஞ்சிக்கோட்டை – ஆனைக்குளம்
  3. தஞ்சாவூர் கோட்டை – சரஸ்வதி மஹால்
  4. பத்மநாபபுரம் அரண்மனை- கன்னியாகுமரி மாவட்டம்
  5. வேலூர்க் கோட்டை – இராணுவக் கட்டடக்கலை

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் InText Questions and Answers

பக்கம் 113 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின்வரும் படங்களுக்குப் பெயரிடுக. (அரசர், அரசி, இளவரசர், இளவரசி)

விடை:

பக்கம் 117 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின் வரும் பொருள்களை அவற்றின் பெயர்களுடன் இணைத்துக் காட்டுக.

விடை:

 

Leave a Reply