5th Social Science Guide Term 2 Lesson 2
TN Board 5th Social Science Solutions Term 2 Lesson 2 நீர்க் கோளம்
5th Standard Social Science Book Back and Additional Question and answers Term 2 Lesson 2 நீர்க் கோளம் Book in answers download pdf. 5th Social Science Samacheer kalvi guide English Medium Download answers. 5th All Subject Test Book download. 5th Tamil Medium Guide. Class 5 All Subject Book Back Answers.
5th Social Science Guide Term 2 – Lesson 2 நீர்க் கோளம் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. நீர்க்கோளம் என்பது, பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த _____________ அளவைக் குறிக்கும்.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) தாவரங்கள்
விடை:ஆ) நீர்
2. பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
அ) கங்கை
ஆ) அட்லாண்டிக்
இ) ஆர்டிக்
ஈ) பசிபிக்
விடை:அ) கங்கை
3. நீர்ப்பரப்பின் அனைத்துப் பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டிருந்தால் ____________ என அழைக்கப்படுகிறது.
அ) ஆறு
ஆ) வளைகுடா
இ) ஏரி
ஈ) விரிகுடா
விடை:ஆ) வளைகுடா
4. ஆவியாதல் என்பது, நீர்சுழற்சியின் ______________ படிநிலை.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
விடை:அ) முதல்
5. ஒரு நீர்ப்பரப்பின் ஒரு பகுதியை நிலம் சூழ்ந்திருந்து, மற்றப் பகுதிகள் கடலை நோக்கி இருந்தால் _____________ எனப்படும்.
அ) கடல்
ஆ) நீர்ச்சந்தி
இ) விரிகுடா
ஈ) குளம்
விடை:இ) விரிகுடா
II. பொருத்துக.
விடை:
III. சரியா | தவறா எழுதுக.
Question 1.
பூமியில் 97% நீர் உப்பாக உள்ளது.
விடை:சரி
Question 2.
நமது அன்றாடத் தேவைகளுக்கு நீர் தேவை இல்லை.
விடை:தவறு
Question 3.
கடல்நீர் இனிப்பாக இருக்கும்.
விடை:தவறு
Question 4.
நாம் பாத்திரங்களைக் கழுவி முடிக்கும் வரையில் குழாயைத் திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.விடை:தவறு
Question 5.
நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும்.விடை:சரி
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. நீர்க்கோளம் வரையறு.
விடை:
நீர்க்கோளம் என்பது, நமது புவிக்கோளில் அடங்கியுள்ள முழு நீர்ப்பரப்பினையும் குறிக்கும். மேற்பரப்பில் உள்ள நீர், நிலத்தடி நீர் மற்றும் காற்றில் கலந்துள்ள நீர் ஆகிய அனைத்தும் நீர்க்கோளத்தில் அடங்கும்.
2. நீர்க்கோளம் முக்கியமானது. ஏன்?
விடை:
நமது அன்றாட வாழ்வில் நீரின் தேவை மிகுதியாக உள்ளது. பருக, குளிக்க, சமைக்க போன்ற பல அன்றாட நடவடிக்கைகளுக்கு நீர் தேவைப்படுகிறது. விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர்வாழ நீர் தேவை. நீர் இல்லாவிடில், நீர் ஆவியாகி மேகங்களாக உருவாக முடியாது. அதனால் மழை இருக்காது. எனவே நீர்க்கோளம் பூமியில் ) உயிரினங்கள் உயிர்வாழ மிக முக்கியமானதாகும்.
3. பல்வேறு வகையான நீர்ப்பரப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை:
ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீரோடைகள், கடல்கள், பெருங்கடல்கள் ஆகியவை பல்வேறு வகையான நீர்ப்பரப்புகள் ஆகும்.
V. விரிவாக விடையளி.
1. நீர் சுழற்சியின் படிநிலைகள் யாவை?
விடை:
முதல் நிலை : ஆவியாதல் (Evaporation)
சூரிய ஒளி, நீர்ப்பரப்புகளான பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள் போன்றவற்றின் மேல் விழுவதால், நீர் மெதுவாக ஆவியாகிக் காற்றில் கலக்கிறது.
இரண்டாம் நிலை : ஆவி சுருங்குதல் (Condensation)
நீர் ஆவியாகி மேலே செல்லும்பொழுது குளிரான வெப்பநிலை, அவற்றை குளிர்வித்து மீண்டும் நீர்மமாக மாற்றுகிறது. இதுவே ஆவிசுருங்குதல் எனப்படுகிறது. காற்றானது இந்த நீர்மத்தைச் சுழற்றுவதால் மேகங்கள் உருவாகின்றன
மூன்றாம் நிலை : மழைப்பொழிவு (Precipitation)
காற்றின் இயக்கத்தால் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. அவை மழைபொழியும் மேகங்களாக மாறி மழையாக மீண்டும் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. இந்தச் செயல்முறை, மழைப்பொழிவு என்று கூறப்படுகிறது. இம் மழைப்பொழிவானது தட்ப வெப்ப நிலையைப் பொருத்து மழையாகவோ, ஆலங்கட்டி மழையாகவோ, பனிப்பொழிவாகவோ, பனித்துளியாகவோ இருக்கக்கூடும்.
நான்காம் நிலை : வழிந்தோடுதல் மற்றும் உறிஞ்சப்படுதல் (Runoff and infiltration)
நீரானது பெருங்கடல்கள், ஆறுகள் அல்லது நிலமேற்பரப்பில் வழிந்தோடுகிறது அல்லது மண்ணால் உறிஞ்சப்படுகிறது. இச் சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
2. நீரைச் சேகரிக்க உதவும் வழிமுறைகளுள் சிலவற்றைக் கூறுக.
விடை:
- நாம் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
- நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
- சாக்கடை, கழிவுகளை நீரில் கலப்பதால் நீர் மாசடைந்து போய்விடுகிறது. நம்மால் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
- தூவாலைகளில் குளிப்பதை விட வாளியில் தண்ணீர் எடுத்துக் குளிப்பது சிறந்தது.
- தண்ணீர்க் குழாய்களைத் தேவையின்றி திறந்து வைத்து நீரை வீணாக்கக் கூடாது.
- குழாய்களில் நீர் கசியாமல், சொட்டிக் கொண்டிராமல் பாதுகாக்க வேண்டும்.
- பல் துலக்கும் போதும், துவைக்கும் போதும் தண்ணீ ரை வீணாக ஓடவிடக்கூடாது.
- மழை நீர் சேகரிப்பை ஒவ்வொரு வீட்டிலும் மேற்கொள்ள வேண்டும்.
- தோட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்து மழை பெய்யும் போது நீரை சேமித்து வைக்கலாம்.