You are currently viewing 4th Tamil Term 3 Guide Lesson 9

4th Tamil Term 3 Guide Lesson 9

4th Tamil Term 3 Guide Lesson 9

4th Standard Term 3 – Lesson 9 அறிவுநிலா Book Back Answers

4th Standard TN State Board Syllabus Term 3 Lesson 9 – இயல் 9 அறிவுநிலா Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers.  Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

 

4th Tamil Term 3 Lesson 9: அறிவுநிலா

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘தினமும்’ என்ற சொல்லின் பொருள்?

  1. நாள்தோறும்
  2. வேலைதோறும்
  3. மாதந் தோறும்
  4. வாரந்தோறும்

விடை : நாள்தோறும்

2. “பனிச்சறுக்கு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. பனி + சறுக்கு
  2. பனிச் + சறுக்கு
  3. பன + சறுக்கு
  4. பன் + சறுக்கு

விடை : பனி + சறுக்கு

3. “வேட்டை + நாய்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

  1. வேட்ட நாய்
  2. வேட்நாய்
  3. வேட்டைநாய்
  4. வேட்டநாய்

விடை : வேட்டைநாய்

எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?

  1. குறைய – இழைத்த
  2. மெல்லிய – முடியாத
  3. முடியும் – மெதுவாக
  4. விரைவாக – தடித்த
  5. கொழுத்த – நிறைய

விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 4 – அ

மொழியோடு விளையாடு

1. புகைவண்டி

  1. புகை
  2. வடி
  3. வண்டி
  4. கை
  5. வகை
  6. கைவண்டி

2. கதைப்பாட்டு

  1. கதை
  2. பாட்டு
  3. பாடு
  4. தை
  5. பாதை
  6. பாப்பா

3. பருத்தி ஆடைகள்

  1. பருத்தி
  2. ஆடை
  3. கடை
  4. படை
  5. ஆதி
  6. கரு

கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.

  1. சதம் – நூறு
  2. சித்திரம் – ஓவியம்
  3. நட்சத்திரம் – விண்மீன்

 

அறிந்து கொள்வோம்

விடுகதைகளுக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளன.

  1. புதிர்
  2. சொல் விளையாட்டு
  3. மாற்றெழுத்துப் புதிர்
  4. வினோதச் சொற்கள்
  5. எழுத்துக் கூட்டு
  6. விகடம்
  7. ஓவியப் புதிர்
  8. சொற்புதிர்
  9. நொடிவினா
    .

அகர முதலி

  • அதிகம் – மிகுதி
  • அதிகரித்தல் – மிகுதல்
  • அபத்தமான பதில்கள் – பொய்யான விடைகள்
  • அவசியம் – தேவை
  • அற்புதம் – வியப்பு / புதுமை
  • ஆச்சரியம் – வியப்பு
  • ஆமோதித்தன – உடன்பட்டன
  • ஆர்வம் – ஈடுபாடு
  • ஆனந்தம் – மகிழ்ச்சி
  • இயைந்து – பொருந்தி
  • இரசிகர்கள் – சுவைஞர்கள் (இரசித்தல் – சுவைத்தல்)
  • இராகம் – இன்னிசை
  • இன்னல் – துன்பம்
  • உற்சாகம் – மகிழ்ச்சி / ஊக்கம்
  • எதிரொலி – ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்
  • கிரீடம் – மணிமுடி
  • கேலி – விளையாட்டுப் பேச்சு
  • சிந்தை – மனம்
  • சீர்கேடு – ஒழுக்கக் குறைவு
  • சுகம் – இன்பம் / நலம்
  • சுருதி – இசைவகை
  • செருமியது – இருமியது
  • தத்துவம் – உண்மை நிலை
  • தைரியம் – துணிவு
  • நிரூபித்தல் – மெய்ப்பித்தல்
  • நுண்மை – நுட்பம்
  • பழுதான – பயன்படுத்த முடியாத
  • பாதிப்புகள் – விளைவுகள்
  • பாரம்பரியம் – தொன்றுதொட்டு / பரம்பரை
  • புத்திசாலித்தனம் – அறிவுக்கூர்மை
  • மனமார்ந்த – மனம் நிறைந்த
  • மாசு – குற்றம் / அழுக்கு
  • லேசாய் – மெதுவாய்
  • வம்பு – வீண்பேச்சு
  • விசேஷம் – சிறப்பு
  • வெட்கம் – நாணம்

Leave a Reply