You are currently viewing 4th Science Guide Term 3 Lesson 3

4th Science Guide Term 3 Lesson 3

4th Science Guide Term 3 Lesson 3

TN Board 4th Science Solutions Term 3 Unit 3 நாம் சுவாசிக்கும் காற்று

4th Standard Science Guide Term 3 Lesson 3 நாம் சுவாசிக்கும் காற்று Book Back Question and Answers Download PDf Tamil Medium. 4th Science Term 3 English Medium Book in answers. 4th All Subject Book Back Answers

4th Science Guide நாம் சுவாசிக்கும் காற்று Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு.

Question 1.

காற்று ஒரு ______________

அ. கலவை

ஆ. கூட்டு

இ. சிக்கல்

விடை:. கலவை

Question 2.

காற்றில் ஆக்ஸிஜன் _____________ சதவீதம் உள்ளது.

அ. 21

ஆ. 78

இ. 1

விடை:. 21

Question 3.

சில தாவரங்களின் வேர் முடிச்சுகளில் உள்ளது.

அ. ஆக்ஸிஜன்

ஆ. நைட்ரஜன்

இ. நியான்

விடை:. நைட்ரஜன்

Question 4.

காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம்

அ. கழிவு

ஆ. புகை

இ. நீராவி

விடை:. புகை

II. நான் யார்?

(மிதிவண்டி, மரம், கார்பன் டை ஆக்சைடு, காற்று)

Question 1.

நான் வாயுக்களின் கலவை.

விடை:காற்று

Question 2.

நான் உங்களுக்கு ஆக்ஸிஜனை தருகிறேன்.

விடை:மரம்

Question 3.

நான் எரிவதற்கு உதவி செய்பவன் அல்ல.

விடை:கார்பன் டை ஆக்சைடு

Question 4.

என் மீது சவாரி செய்வத மூலம் மாசுபாட்டைக் குறைக்கலாம்

விடை:மிதிவண்டி

III. சரியா தவறா என எழுதுக.

Question 1.

தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் தேவை.விடை:சரி

Question 2.

காற்றில் ஆக்ஸிஜன் வாயு மட்டுமே உள்ளது.விடை:தவறு

Question 3.

பொருள்களை எரிக்க ஆர்கான் வாயு பயன்படுகிறது.விடை:தவறு

Question 4.

கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் உடல் நலத்தற்கு தீமையானது.விடை:சரி

IV. பொருத்துக.

  1. நைட்ரஜன் – காற்று மாசுபாடு
  2. பலூன் – புகை மற்றும் மூடுபனி
  3. புகை – 78%
  4. நுரையீரல் – காற்று புற்றுநோய்

விடை:

  1. நைட்ரஜன் – 78%
  2. பலூன் – காற்று
  3. புகை – காற்று மாசுபாடு
  4. நுரையீரல் – புகை மற்றும் மூடுபனி

V. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

காற்று என்பது பல ____________ கலவையாகும்.விடை:வாயுக்களின்

Question 2.

காற்றில் _____________ அளவு கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது.விடை:0.04%

Question 3.

நாம் ____________ வாயுவை உள்ளிழுக்கிறோம்விடை:ஆக்ஸிஜன்

Question 4.

_____________ வாயு தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.விடை:கார்பன் டை ஆக்சைடு

VI. சுருக்கமாக விடையளி.

1. நமது அன்றாட வாழ்க்கையில் காற்றின் முக்கியத்துவம் என்ன ?

விடை:

  • மழையை உருவாக்குவதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கும் காற்று அவசியமானது.

2. காற்றின் கூறுகள் யாவை?

விடை:

  • ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நீராவி

3. காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

விடை:

  • உலக வெப்பமயமாதல், பனிப்புகை உருவாக்கம், அமில மழை உருவாக்கம், ஏரோசால் உருவாக்கம், ஓசோன் குறைதல்

4. ஆக்ஸிஜனின் பயன்கள் யாவை?

விடை:

  • சுவாசித்தல், எரிதல், உலோகங்களை உருக்கி இணைத்தல் ஆகியவை ஆக்ஸிஜனின் பயன்கள் ஆகும்.

VII. விரிவாக விடையளி.

1. காற்று மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகள் யாவை?

விடை:

  1. காற்று ஆற்றல் ஆதாரத்தை (எ.கா. சூரிய ஆற்றல்) பயன்படுத்த வேண்டும்.
  2. தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலப்பதைத் தடுக்க காற்று வடிகட்டிகளை பயன்படுத்தவேண்டும்.
  3. மோட்டார் வாகனங்களின் சான்றிதழ் மற்றும் புகை உமிழ்வு சோதனையினை செயல்படுத்தப்பட வேண்டும்.
  4. கார்பன் டைஆக்சைடை உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நட்வேண்டும்.

2. காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் யாவை?

விடை:

  1. சுவாச நோய்கள். எ.கா. காய்ச்சல், காசநோய்
  2. இருதய இரத்தநாள பாதிப்பு
  3. சோர்வு, தலைவலி மற்றும் பதட்டம்
  4. நரம்பு மண்டல பாதிப்பு

3. கார்பன் டைஆக்சைடின் பயன்கள் எழுதுக.

விடை:

  1. ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது.
  2. தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
  3. குளிர்சாதனப் பெட்டிகளில் உலர் பனிக்கட்டியாகப்
  4. பயன்படுத்தப்படுகிறது.
  5. நெகிழி மற்றும் பலபடிமம் (Polymer) தயாரிக்கப் பயன்படுகிறது.

VIII. கூடுதல் வினா :

1. காற்று என்றால் என்ன?

விடை:

  • பல வாயுக்களின் கலவையே காற்று ஆகும்.

2. ஆக்சிஜன் ஏன் மிகவும் முக்கியமானது?

விடை:

  • ஆக்சிஜன் சுவாசத்திற்கு தேவை. எனவே இது மிகவும் முக்கியமானது.

3. காற்றைக் கொண்டு இசைக்கப்படும் கருவிகள் யாவை?

விடை:

  1. நாதஸ்வரம் 2. புல்லாங்குழல்

4. பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவினை நீண்ட நாள் பாதுகாக்கப் பயன்படுவது எது?

விடை:

  • நைட்ரஜன்

5. ஒரு மனிதன் உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜனை பெறுவதற்கு எத்தனை மரங்கள் தேவை?

விடை:

  • மூன்று மரங்கள்

6. ஓசோன் அடுக்கினைப் பாதிப்பவை எவை?

விடை:

  • குளோரோ புளூரோ கார்பன்கள் (CFC) ஓசோன் அடுக்கினைப் பாதிக்கின்றன.

7. அமில மழை உண்டாகக் காரணமான இரண்டு வாயுக்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை:

  • சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள்

8. காற்றில் கார்பன் டை ஆக்சைடு உள்ள தைக் கண்டுபிடித்தவர் யார்?

விடை:

  • ஜோசப் பிளாக் என்ற ஸ்காட்லாந்து வேதியியலாளர், காற்றில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதைக் கண்டுபிடித்தவர்.

4th Science Guide நாம் சுவாசிக்கும் காற்று InText Questions and Answers

பக்கம் 85 செய்து மகிழ்வோம்

காலி தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துளையிட்டு, அம் மூடியால் பாட்டிலை இறுக்காக மூடவும். அம்மூடி உங்கள் முகத்தின் அருகே இருக்கும் வகையில் வைத்து பாட்டிலின் மையத்தில் உங்கள் கையால் அழுத்தவும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

விடை:

காற்று வேகமாக வெளிவருவதை உணரமுடியும்.

பக்கம் 89 முயல்வோம்

காற்று / வாயு உள்ள பொருள்களை (✓) குறியிடுக.

விடை:

பக்கம் 90 முயல்வோம்

நீராவியை வெளியிடுபவைகளை (✓) குறியிடுக.

விடை:

பக்கம் 90 நிரப்புவோம்

காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை எழுதுக.

விடை:

பக்கம் 91 விவாதிப்போம்

சில பல்பொருளங்காடிகளில், நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட பெரிய பலூன்கள் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கான காரணத்தை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுக.

விடை:

நைட்ரஜன், காற்றை விட சிறிது லேசான, மந்தமான வாயுவாகும். எனவே பலூன் அதிக உயரத்தில் பறக்கத் தேவையில்லாதபோது நைட்ரஜன் அதில் பயன்படுத்தப்படுகிறது.

பக்கம் 93 முயல்வோம்

பின்வருவனவற்றை வகைப்படுத்து.

(நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி)

விடை:

பக்கம் 95 முயல்வோம்

புவி வெப்பமயமாதலுக்கு காரணமானவற்றை (✓) குறிப்பிடுக.

விடை:

பக்கம் 96 செயல்பாடு

காற்று மாசுபாட்டின் விளைவுகள் குறித்த விளம்பர முழக்கங்களை எழுதி காட்சிக்கு ஒட்டவும்.

  1. _______________________
  2. _______________________
  3. _______________________
  4. _______________________

விடை:

  1. உலகனைத்திற்கும் ஒரு தாய் மடியாம் புவி இயற்கையை காப்போம்.
  2. மரத்தின் சேவை நமக்கு தேவை.
  3. இன்று காற்று மாசுபாடு நாளை நுரையீரல் அழிபாடு.
  4. மரம் வளர்ப்போம் தூய காற்று சுவாசிப்போம்.

Leave a Reply