5th Science Guide Term 2 Lesson 2
TN Board 5th Science Solutions Term 2 Chapter 2 நீர் – Book Back Answers
5th Science Tamil Medium Guide. 5th Science Term 2 Lesson 2 நீர் Book Back and Additional Questions and Answers. TN Samacheer kalvi guide Science Solutions. 5th All Subject Text Books Download pdf. Class 5 / Fifth Standard Term 1 Lesson 1 Organ System question answers. Class 1 to 12 Book Back Guide.
-
5th Std SCIENCE Term 1, 2, 3 All Unit Book Back & Addition Question and Answers – Tamil Medium & English Medium
-
5th All Subject Guide – Tamil Medium & English Medium
5th Science Guide நீர் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
Question 1.
கீழ்க்கண்ட நுண்ணுயிரிகளில் எவை நீரால் பரவும் நோய்களைத் தோற்றுவிக்கின்றன?
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. புரோட்டோசோவா
ஈ. அனைத்தும்
விடை:ஈ. அனைத்தும்
Question 2.
_____________ இல் நீரானது அதிக அளவில் நீராவியாகவும், மேகங்களாகவும் காணப்படுகிறது.
அ. வானம்
ஆ. பூமி
இ. வளி மண்டலம்
ஈ. மழை
விடை:இ. வளி மண்டலம்
Question 3.
_____________ நீரில் மாசுக்கள் இருக்காது.
அ. கடல்
ஆ. கிணற்று
இ. ஆற்று
ஈ. நிலத்தடி
விடை:ஈ. நிலத்தடி
Question 4.
____________ நீர் கடலிலும் பெருங்கடலிலும் காணப்படுகிறது.
அ. 97%
ஆ. 87%
இ. 47%
ஈ. 77.5%
விடை:அ. 97%
Question 5.
___________ என்பது கடல் நீரை தூய நீராக மாற்றும் – செயற்கையான செயல்பாடாகும்.
அ. பின்னக் காய்ச்சி வடித்தல்
ஆ. தெளிய வைத்து இறுத்தல்
இ. தலைகீழ் சவ்வூடு பரவல்
ஈ. உப்புத் தன்மை நீக்குதல்
விடை:ஈ. உப்புத் தன்மை நீக்குதல்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
நிலத்தடி நீர் _______________ வடிவில் புவியின் மேற்பரப்பிற்கு வெளியே வரும்.
விடை:ஊற்று நீர்
Question 2.
நீரானது சூரிய வெப்பத்தினால் ஆவியாக மாறுவதற்கு _______________ என்று பெயர்.விடை:ஆவியாதல்
Question 3.
மழை நீரால் உருவாக்கப்பட்ட நீரோடை மற்றும் _______________ ஆகியவை ஒன்றிணைந்து ஆறாக உருவாகின்றன.விடை:ஊற்று நீர்
Question 4.
மழை நீரைச் சேகரித்து அதைச் சேமிக்கும் முறைக்கு ________________ என்று பெயர்.விடை:மழைநீர் சேகரிப்பு
Question 5.
காலரா நோயைத் தோற்றுவிப்பது ________________.
விடை:விப்ரியோ காலரே பாக்டீரியா
III. பொருத்துக.
- எண்ணெய்க்கசிவு – மேகம்
- நீர்த் தேக்கம் – தாவர வளர்ச்சி
- பின்னக்காய்ச்சி வடித்தல் – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
- மழை நீர் சேகரிப்பு – இன்புளூயன்சா வைரஸ்
- பன்றிக் காய்ச்சல் – அணைக்கட்டு
விடை:
- எண்ணெய்க்கசிவு – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
- நீர்த் தேக்கம் – அணைக்கட்டு
- பின்னக்காய்ச்சி வடித்தல் – மேகம்
- மழை நீர் சேகரிப்பு – தாவர வளர்ச்சி
- பன்றிக் காய்ச்சல் – இன்புளுயன்சா வைரஸ்
IV. சுருக்கமாக விடையளி.
1. நீரின் மூலங்களை எழுதுக.
விடை:
- ஆறுகள், ஓடைகள், நிலத்தடி நீர், மழைநீர், உருகிய , பனிப்பாறை ஆகியவை தனித்தோ அல்லது சேர்ந்தோ ஏரிகள், – நீர்த்தேக்கங்கள் மற்றும் குட்டையில் காணப்படும் நீரின் – ஆதாரங்களாக உள்ளன.
2. உப்பு நீக்கல் என்றால் என்ன?
விடை:
- கடல்நீரைக் குடிநீராக்குதல் என்பது கடல்நீரில் உள்ள உப்பை’ அகற்றி தூய நீராக மாற்றும் செயற்கையான செயல்முறையாகும். கடல்நீரைக் குடிநீராக்குவதற்கு காய்ச்சி – வடித்தல், தலைகீழ் சவ்வூடு பரவல் ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
3. நீர்சுழற்சியின் படிநிலைகள் யாவை?
விடை:
- ஆவியாதல்
- ஆவி சுருங்குதல்
- வீழ்ப்படிவாதல்
- கடலை நோக்கிச் செல்லுதல்
4. நீர்த்தேக்கம் என்றால் என்ன?
விடை:
- ஆற்றின் குறுக்காக அணை கட்டப்படுவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகள் தோன்றுகின்றன. இவை நீர்தேக்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
5. டெங்கு காய்ச்சலை எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:
→ வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
→ அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கதவைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்.
→ வீட்டைச்சுற்றிலும் கொசுக்களைத் தடுக்கும் திரவத்தைத் தெளிக்க வேண்டும்.
→ உடல் பகுதிகளை மூடியிருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும்.
V. விரிவாக விடையளி.
1. மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் யாவை?
விடை:
மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் :
→ நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
→ புவியின் மேற்புற மண் அரிக்கப்படுவதைத் தவிர்க்கிறது.
→ தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது.
→ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது.
→ நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது.
2. நீர் மூலம் பரவும் நோய்களை எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:
→ முறையான தன் சுத்தம் பேணுதல் வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
→ குளோரின் கலந்த, கொதிக்க வைக்கப்பட்ட நீரையே பருக வேண்டும்.
→ நன்கு கொதிக்க வைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பாலைக் குடிக்க வேண்டும்.
→ தொற்று நோய் பரப்பும் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.