You are currently viewing 6th Science Guide Term 3 Lesson 1

6th Science Guide Term 3 Lesson 1

6th Science Guide Term 3 Lesson 1

6th Standard Science Term 3 Book Back Question & Answers Lesson.1 காந்தவியல்

6th Standard Science Term 3 Guide Lesson 1 காந்தவியல் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Science Term 3 Guide. 6th All Subject Book Back Answers

6th Science Guide Term 3 – Lesson 1 காந்தவியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

  1. மரக்கட்டை
  2. ஊசி
  3. அழிப்பான்
  4. காகிதத்துண்டு

விடை : ஊசி

2. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  1. இந்தியர்கள்
  2. ஐரோப்பியர்கள்
  3. சீனர்கள்
  4. எகிப்தியர்கள்

விடை : சீனர்கள்

3. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________________ திசையில்தான் நிற்கும்

  1. வடக்கு-கிழக்கு
  2. தெற்கு-மேற்கு
  3. கிழக்கு-மேற்கு
  4. வடக்கு-தெற்கு

விடை : வடக்குதெற்கு

4. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

  1. பயன்படுத்தப்படுவதால்
  2. பாதுகாப்பாக வைத்திருப்பதால்
  3. சுத்தியால் தட்டுவதால்
  4. சுத்தப்படுத்துவதால்

விடை : சுத்தியால் தட்டுவதால்

5. காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _________________ அறிந்து கொள்ள முடியும்.

  1. வேகத்தை
  2. கடந்த தொலைவை
  3. திசையை
  4. இயக்கத்தை

விடை : திசையை

II. சரியா? தவறா?

  1. உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.விடை : தவறு
  • சரியான விடை : உருளை வடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு
  1. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.விடை : சரி
  2. காந்தத்தினை இரும்புத்தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.

விடை : தவறு

  • சரியான விடை : காந்தத்தினை இரும்புத்தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது குறைந்த அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
  1. காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.விடை : சரி
  2. இரப்பர் ஒரு காந்தப் பொருள்.விடை : தவறு
  • சரியான விடை : இரப்பர் ஒரு காந்த தன்மையற்ற பொருள்.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. செயற்கைக்காந்தங்கள் _________, _________, _________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.விடை : சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம்
  2. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _________ எனப்படுகின்றன. விடை : காந்த தன்மையுள்ள பொருள்
  1. காகிதம் __________________ பொருளல்ல.விடை : காந்த
  2. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.விடை : சட்ட காந்தம்
  3. ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ___________ துருவங்கள் இருக்கும் விடை : இரண்டு

IV.பொருத்துக

  1. காந்த திசைகாட்டி – அதிக காந்த வலிமை
  2. ஈர்ப்பு – ஒத்த துருவங்கள்
  3. விலக்குதல் – எதிரெதிர் துருவங்கள்
  4. காந்த துருவங்கள் – காந்த ஊசி

விடை : 1 – , 2 – , 3 – , 4 –

V. பொருத்தமில்லாததை வட்டமிட்டுக் காரணம் கூறுக

1. இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர்குழாய், ஊசி.

விடை : இரப்பர்குழாய்

  • காரணம் – காந்த தன்மையற்ற பொருள்

2. மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு.

விடை : மின்பல்பு

  • காரணம் – மின் பல்பு மின்சாரத்தின் உதவியால் இயங்குகிறது

3. கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்.

விடை : ஒளியூட்டுதல்

  • காரணம் – ஒளி அலங்காரம்

VI. பின்வரும் படங்களில் இரு சட்டகாந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் எனக்கூறு.

[ஈர்க்கும், விலக்கும், திரும்பி ஒட்டிக் கொள்ளும்]

ஈர்க்கும்

Ans : a & c

விலக்கும்

திரும்பி ஒட்டிக் கொள்ளும்

Ans : d & f

VII. நிரப்புக.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்கள்

  • ஆணி
  • இரும்பு
  • கொண்டை
  • ஊசி
  • நிக்கல்
  • அரிதான உலோகம்

காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருட்கள்

  • பிளாஸ்டிக்
  • மரம்
  • இரப்பர்
  • வெள்ளி
  • தாமிரம்
  • தாமிர பேப்பர்
  • தங்கம்

VIII. சிறு வினாக்கள

1. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக

காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் (S-N, N-S) ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் (N-N, S-S) ஒன்றையொன்று விலக்குகின்றன.

2. பள்ளி ஆய்வுக்கூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும். மூன்று காரணங்களைக் கூறு.

வெப்பப்படுத்தும் பொழுதோ, உயரத்திலிருந்து கீழே போடும்பொழுதோ, சுத்தியால் தட்டும் பொழுதோ காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்து

விடுகின்றன.

  • வெப்பப்படுத்துதல்
  • கீழே போடுதல்
  • சுத்தியால் தட்டுதல்

IX. நெடுவினா

1. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

முனையிலிருந்து மறுமுனை வரை ஒரே திசையில் தேய்க்கவும். தேய்க்கும்போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும். 30 அல்லது 40 முறை இதேபோல் செய்யவும்.

இரும்பு ஊசி காந்தமாக மாறி உள்ளதா என்பதைக் கண்டறிய அதன் அருகில் சில குண்டூசிகள் அல்லது இரும்புத்தூள்களைக் கொண்டு செல்லவும். அவை காந்தமாக்கப்பட்ட இரும்பு ஊசியால் ஈர்க்கப்படுவதை கண்டறியலாம்

2. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

மின்காந்தத் தொடர் வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. இவற்றின் வழியே மின்சாரம் பாயும்போது மட்டுமே காந்தத்தன்மை பெறுகின்றன. மின்சாரத்தின் திசை மாறும்போது இதன் துருவங்களும் மாறுகின்றன. தொடர்வண்டியின் அடியிலும், தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விக்குவதன் காரணமாக இத்தொடர்வண்டிகள் தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் அந்தரத்தில் நிலைநிறுத்தப்படுன்றன. காந்தத்தின் ஈர்ப்பு விசையையும், காந்தத்தின் விலக்கு விசையையும் பயன்படுத்தி காந்தப் பொரு ள்களை நகர்த்த முடியும் என உனக்குத் தெரியுமல்லவா? தண்டவாளத்தில் பக்கவாட்டிலும், தொடர்வண்டியின் கீழே பக்கவாட்டிலும் உள்ள காந்தங்களினால் இந்தத் தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது. மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இத்தொடர்வண்டியில் சக்கரம் போன்ற அசையும் பொருள்கள் இல்லையென்பதால் உராய்வு விசை கிடையாது. அதனால் மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாகச் செல்லலாம். இவை மணிக்கு 600 கி.மீ வேகம் வரை கூட செல்லும் திறன் உடையவை. உராய்வு இல்லையென்பதால் இவை செல்லும் போது அதிக சத்தம் கேட்பதில்லை. குறைந்த மின்சாரமே போதுமானது. சுற்றுச்சூழலுக்கும் இவை உகந்தவை.

பல நாடுகளில் இது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் மட்டுமே தற்போது நடைமுறையில் பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. இந்தியாவிலும் இது தொடர்பான சாத்தியக் கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

Leave a Reply