6th Tamil Guide Term 3 Lesson 1.4
TN 6th Standard Tamil Book Back Answers Term 3 – Lesson 1.4 நால்வகைச் சொற்கள் Solution Guide
6th Tamil Guide. 6th Std Tamil Term 3 Lesson 1.4 நால்வகைச் சொற்கள் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 3 – Lesson 1.4 புதுமைகள் செய்யும் தேசமிது – நால்வகைச் சொற்கள் Book Back Answers
கற்பவை கற்றபின்
பின்வரும் தாெடர்களில் உள்ள நால்வகைச் சாெற்களை வகைப்படுத்துக.
1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.
விடை : பெயர்ச்சொல் – பேருந்தில்
2. நாள்தாேறும் திருக்குறள் படி.
விடை : இடைச்சொல் – ஐ (திருக்குறளை)
3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர்.
விடை : உரிச்சொல் – சால (சாலச்சிறந்தது)
4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சாெல்லை எழுதுக.
மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
விடை : இடைச்சொல் – கு (செவிக்கு)
மதிப்பீடு
I. சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு
- அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு
விடை : படித்தாள்
- அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஆல்
விடை : ஆல்
- அ) சென்ற ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்த
விடை : சித்திரை
- அ) மாநாடு ஆ) ஐ இ) உம் ஈ) மற்று
விடை : மாநாடு
II. குறுவினாக்கள்
1. சாெல் என்றால் என்ன?
- தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தாெடரந்து வந்தும் பொருள் தரும். இவவாறு பொருள் தருபவை சாெல் எனப்படும்.
2. சாெற்களின் வகைகளை எழுதுக.
- இலக்கண அடிப்படையில் சாெற்கள் பெயரச்சாெல், வினைச்சாெல், இடைச்சாெல், உரிச்சாெல் என நான்கு வகைப்படும்.
3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை எவ்வாறு வழங்குகிறோம்?
- பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை இடைச்சொல் என்று வழங்குகிறோம். இது தனித்து இயங்காது.
மொழியை ஆள்வோம்
1. பெயர்ச்சொல் என்றால் என்ன? சான்று தருக
- ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
- (எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
2. இடைச்சொல் என்றால் என்ன? சான்று தருக
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
(எ.கா.)
- உம் – தந்தையும் தாயும்
- மற்று – மற்றொருவர்
- ஐ – திருக்குறளை
1. உரிச்சொல் என்றால் என்ன? சான்று தருக
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்
(எ.கா.)
- மா – மாநகரம்
- சால – சாலச்சிறந்தது
மொழியை ஆள்வோம்
I. கீழ்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
- இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தாெழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தாெடங்கியவர்.
- 1906 ஆம் ஆணடு அக்டாேபர் 16ஆம் நாள் ”சுதேசி நாவாயச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
1. சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் யார்?
- சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் வ.உ.சிதம்பரனார்.
2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
- வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்
3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
- வ. உ.சி. அவர்கள் பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?
- வழக்கறிஞர்
- எழுத்தாளர்
- பேச்சாளர்
- தாெழிற்சங்கத் தலைவர்
5. வ. உ. சி. அவரகள் புலமை பெற்றிருந்த மாெழிகள் யாவை?
- வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்
II. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக
1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
- ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
- ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
- அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
- அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5. அது ஒரு இனிய பாடல்.
- அஃது அது ஒரு இனிய பாடல்.
III. அகரவரிசைப்படுத்து
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.
விடை :
- பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து,
மொழியோடு விளையாடு
I. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.
சொற்கள் |
உண்டு |
இல்லை |
எனக்கு |
எனக்குண்டு |
எனக்கில்லை |
வடக்கு |
வடக்குண்டு |
வடக்கில்லை |
பந்து |
பந்துண்டு |
பந்தில்லை |
பாட்டு |
பாட்டுண்டு |
பாட்டில்லை |
II. கட்டங்களில் உள்ள சொற்களை கொண்டு தொடர்களை உருவாக்குக
பாரி |
வீட்டுக்கு |
வந்தன |
எழிலி |
வந்தான் |
|
மாணவர்கள் |
வந்தது |
|
மாடு |
வந்தார்கள் |
|
மாடுகள் |
வந்தாள் |
- பாரி வீட்டுக்கு வந்தான்
- எழிலி வீட்டுக்கு வந்தாள்
- மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்
- மாடு வீட்டுக்கு வந்தது
- மாடுகள் வீட்டுக்கு வந்தன
III. கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக
கு |
ம் |
பே |
சி |
வ |
ன் |
ம |
ர |
ரு |
ப |
ண் |
தா |
ர |
க |
ந் |
று |
டி |
ய் |
ன் |
ந |
து |
உ |
ம் |
செ |
ஐ |
மா |
டு |
ம |
ற் |
று |
ந |
ட |
க் |
கி |
றா |
ன் |
பெயர்ச்சொல்
- குமரன், கரம், மாடு, பேருந்து, சிவன், தாய், வண்டி, செறு, பண், பசி, நகரம்
வினைச்சொல்
- நடக்கிறாள், செய்தான்
இடைச்சொல்
- கு, ஐ, உம், மற்று, தான்
உரிச்சொல்
- உறு, மாநகரம்
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்
- நட்டுப்பற்று – Patriotism
- இலக்கியம் – Literature
- கலைக்கூடம் – Art Gallery
- மெய்யுணர்வு – Knowledge of Reality