6th Tamil Guide Term 2 Lesson 3.5
TN 6th Standard Tamil Book Back Answers Term 2 Lesson 3.5 சுட்டெழுத்துக்கள் வினா, எழுத்துகள் Solution Guide
6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 3.5 சுட்டெழுத்துக்கள் வினா, எழுத்துகள் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 2 – Lesson 3.5 கூடித் தொழில் செய் – சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. என் வீடு ______________ உள்ளது. (அது / அங்கே)
விடை : அங்கே
2. தம்பி ______________ வா. (இவர் / இங்கே)
விடை : இங்கே
3. நீர் ______________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
விடை : எங்கே
4. யார் ______________ தெரியுமா? (அவர்/ யாது)
விடை : அவர்
5. உன் வீடு ______________ அமைந்துள்ளது? (எங்கே/ என்ன)
விடை : எங்கே
II. குறு வினா
1. சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
- ஒன்றைச் சட்டிக் காட்ட வரும் எழுத்துக்கள் சுட்டு எழுத்து எனப்படும். அ, இ.,உ ஆகிய மூன்றும் சுட்டு எழுத்துக்ள “உ” என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை. இவை அகச்சுட்டு, புற்ச்சுட்டு, அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு ஆகும்.
2. அகவினா, புறவினா வேறுபாடு யாது?
- அக வினா
வினா எழுத்துக்கள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தரும்மாயின் அது அகவினா எனப்படும்.
அது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை
- புற வினா
வினா எழுத்துக்கள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருள் தருமாயின் அது புற வினா எனப்படும்
அவனா, வருவானோ இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- வினாப்பொருளைத்தரும் எழுத்துக்கள் __________________ என்று பெயர்
விடை : வினா எழுத்துக்கள்
- ஒன்றை சுட்டிக்காட்டி வருவது __________________ ஆகும்
விடை : சுட்டு எழுத்துக்கள்
- அண்மை சுட்டு எழுத்து _________ ஆகும் விடை : இ
- சேய்மை சுட்டு எழுத்து _________ ஆகும் விடை : அ
II. குறு வினா
1. அகச்சுட்டு என்றால் என்ன?
- சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளை தருவது அகச்சுட்டு எனப்படும்
- இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினால் எழுத்துக்கள் பொருள் தருவதில்லை
2. புறச்சுட்டு என்றால் என்ன?
- சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளை தருவது அகச்சுட்டு எனப்படும்.
- அந்நீர்வீழ்ச்சி, இம்மலை, இந்நூல் இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும்
3. சுட்டுத்திரிபு என்றால் என்ன?
- அ, இ ஆகிய சுட்டெழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும் (எ.கா) இப்பள்ளி – இந்தப்பள்ளி
4. வினா எழுத்துக்கள் என்றால் என்ன? அவை எங்கு இடம்பெறும்?
- வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் என்று பெயர்.
- எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துக்கள் ஆகும். இந்த வினா எழுத்துக்கள் சில சொல்லின் முதலிலும், சில சொல்லின் இறுதியிலும் வரும்
மொழியின் முதலில் வருபவை |
எ, யா (எங்கு, யாருக்கு) |
மொழியின் இறுதியில் வருபவை |
ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ) |
மொழியின் முதலிலும், இறுதியிலும் வருபவை |
ஏ (ஏன், நீதானே) |
5. ‘உ’ சுட்டெழுத்தின் பயன் யாது? சான்று தருக
- அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ள வற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(எ.கா.) உது, உவன
மொழியை ஆள்வோம்
I. சொற்றொடர்ப் பயிற்சி
1. அந்த, இந்த என்னும் சுட்டு சொற்களை அமைத்து தொடர்களை எழுதுக
அந்த
- அந்தப் பெண் நன்றாக பேசுவாள்
- அந்த பையன் நன்றாக விளையாடுவான்
- அந்த நாய் குரைக்கும்
இந்த
- இந்தப் பாெருள் விலை மதிப்பற்றது
- இந்த பையன் அறிவுடையவன்
- இந்த பெண் அழகானவள்
2. எங்கே. ஏன், யார் என்னும் சுட்டுச் சொற்களை அமைத்து தொடர்களை எழுதுக
எங்கே
- எங்கே நீ வந்தாய்?
- எங்கே நீ போனாய்?
ஏன்
- ஏன் நீ வந்தாய்?
- ஏன் நீ போனாய்?
யார்
- யார் உன்னுடன் வந்தார்?
- யார் அவனை அடித்தார்?
II.சொற்களை சேர்த்து சொற்றொடரை நீட்டி எழுதுக
1. நான் பள்ளியில் படிக்கிறேன் (ஆறாம் வகுப்பு, அரசு)
- நான் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறேன்
- நான் அரசு பள்ளியில் படிக்கிறேன்
- நான் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறேன்
2. பொன்னன் முன்னேறினான் (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)
- பொன்னன் வணிகம் செய்து முன்னேறினான்
- பொன்னன் வணிகம் செய்து பொருளீட்டிமுன்னேறினான்
- பொன்னன் துணி வணிகம் செய்து முன்னேறினான்
- பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்
III. பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைச் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க
நான் |
ஊருக்கு |
சென்றாய் |
நீ |
சென்றார் |
|
அவன் |
சென்றேன் |
|
அவள் |
சென்றான் |
|
அவர் |
சென்றாள் |
- நான் ஊருக்கு சென்றேன்
- நீ ஊருக்கு சென்றாய்
- அவள் ஊருக்கு சென்றான்
- அவள் ஊருக்கு சென்றாள்
- அவர் ஊருக்கு சென்றார்
IV. அடைப்புக்குள் உள்ள சொல்லை தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்
1. நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
- நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்
2. நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)
- நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்
3. நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள் (மிகுந்த)
- நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்
V. கீழ்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
- மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப்ப பல் இடங்களுக்கு அனுப்புவது பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தல் கிடைக்கச் செய்வது வணிகம் ஆகும்.
- கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டி புதிய பொருளாக மாற்றுவத சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
1. கிடைக்கும் பொருள்களின் ___________ கூட்டி புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.
- அளவை
- மதிப்பை
- எண்ணிக்கையை
- எடையை
விடை : மதிப்பை
2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளைக் ______________ மாற்றலாம்.
விடை : கோலமாவாக
3. வணிகத்தின் நோக்கம் என்ன?
- மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.
4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
- கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக
- வணிக உத்தி
மொழியோடு விளையாடு
I. விடுகதைக்கு விடை காணுங்கள்
(கப்பல், ஏற்றுமதி, இறக்குமதி, தராசு , நெல்மணி , குதிரை)
1.தனிஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான் யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான் அவன் யார்?
விடை : தராசு
2. தண்ணீரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்; காலில்லாத அவன் யார்?
விடை : கப்பல்
3. பேசமுடியாத ஓட்டப்பந்த வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு அவன் யார்?
விடை : குதிரை
4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோர்க்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. அது எந்த மணி?
விடை : நெல்மணி
- ஒருமதி வெளியே பாேகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பல நதியும் சேர்ந்து வரும். அவை என்ன?
விடை : ஏற்றுமதி, இறக்குமதி
II. நவமணிகளை அகர வரிசைப்படுத்தி எழுதுக
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து புஷ்பராகம், மரகதம்
விடை : கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
III. குறுக்கெழுத்து புதிர்
1. மு |
டி |
ய |
ர |
ச |
ன் |
|
ல் |
2. சு |
ட் |
டு |
ம் |
||
லை |
ட |
|||||
டை |
ட் |
|||||
3. வே |
ரை |
தி |
கு. 4 |
மூ |
||
லி |
னி |
|||||
று |
ற் |
மா |
ட |
ண் |
ப. 5 |
இடமிருந்து வலம்
- நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் ___________
விடை : முடியரசன்
- சுட்டிக்காட்டப் பயன்படுவது ___________ எழுத்து
விடை : சுட்டு
வலமிருந்து வலம்
- அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது ___________
விடை : குதிரை
- ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை ___________
விடை : பண்டமாற்று
மேலிருந்து வலம்
- காடும் காடு சார்ந்த இடமும் ___________
விடை : முல்லை
- தோட்டத்தைச் சுற்றி ___________ அமைக்க வேண்டும்
விடை : வேலி
கீழிருந்து வலம்
- மீனவருக்கு மேகம் ___________ போன்றது
விடை : குடை
- உடலுக்குப் போர்வையாக அமைவது ___________
விடை : பனிமூட்டம்
IV. கலைச்சொல் அறிவோம்
- பண்டம் – Commodity
- கடற்பயணம் – Voyage
- பயணப்படகுகள் – Ferries
- தொழில்முனைவோர் – Entrepreneur
- பாரம்பரியம் – Heritage
- கலப்படம் – Adulteration
- நுகர்வோர் – Consumer
- வணிகர் – Merchant