You are currently viewing 6th Tamil Guide Term 2 Lesson 2.1

6th Tamil Guide Term 2 Lesson 2.1

6th Tamil Guide Term 2 Lesson 2.1

TN 6th Standard Tamil Book Back Answers Term 2 – Lesson 2.1 ஆசாரக்கோவை Solution

6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 2.1 ஆசாரக்கோவை Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 1 – Lesson 2.1 பாடறிந்து ஒழுகுதல் – ஆசாரக்கோவை Book Back Answers

நூல்வெளி

  • ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
  • இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
  • ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு” என்பது பொருள்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

I. சொல்லும் பொருளும்

  1. நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
  2. ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்
  3. நட்டல் – நட்பு கொள்ளுதல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறரிடம் நான் _______ பேசுவேன்.

  1. கடுஞ்சொல்
  2. இன்சொல்
  3. வன்சொல்
  4. கொடுஞ்சொல்

விடை : இன்சொல்

2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்.

  1. வம்பு
  2. அமைதி
  3. அடக்கம்
  4. பொறை

விடை : பொறை

3. “அறிவு + உடைமை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. அறிவுடைமை
  2. அறிவுஉடைமை
  3. அறியுடைமை
  4. அறிஉடைமை

விடை : அறிவுடைமை

4. “இவை + எட்டும்” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. இவைஎட்டும்
  2. இவையெட்டும்
  3. இவ்வெட்டும்
  4. இவ்எட்டும்

விடை : இவையெட்டும்

5. “நன்றியறிதல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. நன்றி + யறிதல்
  2. நன்றி + அறிதல்
  3. நன்று + அறிதல்
  4. நன்று + அறிதல்

விடை : நன்றி + அறிதல்

6. “பொறையுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பொறுமை + உடைமை
  2. பொறை + யுடைமை
  3. பொறு + யுடைமை
  4. பொறை + உடைமை

விடை : பொறை + உடைமை

III. குறுவினாக்கள்

1. எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது எது?

  • எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது துன்பம்.

2. நாம் யாருடன் நட்புக் காெள்ள வேண்டும்?

  • நாம் நற்பண்புகள் உடையவரோடு நட்புக் காெள்ள வேண்டும்.

3. ஆசாரக்காேவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

  1. பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்
  2. பிறர் செய்யும் தீமைகளைப் பாெறுத்துக் காெள்ளுதல்
  3. இனிய சொற்களைப் பேசுதல்
  4. எவ்வுயிருக்கும் துன்பம் செய்யாதிருத்தல்
  5. கல்வி அறிவு பெறுதல்
  6. பிறருக்கு உதவுதல்
  7. அறிவுடையவராய் இருத்தல்
  8. நற்பண்புகள் உடையவரோடு நட்புக் காெள்ளுதல்

ஆகிய எட்டும் நல்லொழுக்கத்ளத விதைக்கும் விதைகள் ஆகும்.

ஆசாரக்கோவை – கூடுதல் வினாக்கள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆசாரக்கோவையில் ஆசிரியர் ________________

  1. பாரதிதாசன்
  2. ஒளவையார்
  3. பெருவாயின் முள்ளியார்
  4. கவிமணி

விடை : பெருவாயின் முள்ளியார்

2.  __________________ மறக்கக் கூடாது

  1. பிறர் செய்த தீங்கினை
  2. பிறர் செய்த கொடுமையை
  3. பிறர் கூறிய தீயசொற்களை
  4. பிறர் செய்த உதவியை

விடை : பிறர் செய்த உதவியை

3. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _________________

  1. இரு நூறு
  2. நானூறு
  3. முந்நூறு
  4. நூறு

விடை : நூறு

4. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _______________________

  1. பாளையங்கோட்டை
  2. வயநாடு
  3. மதுரை
  4. கயத்தூர்

விடை : கயத்தூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. ஆசாரக்கோவை ______________ நூல்களுள் ஒன்று.விடை : பதினெண்கீழ்கணக்கு
  2. “நட்டல்” என்பதன் பொருள் ______________விடை : நட்புக் கொள்ளுதல்
  3. நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை ______________விடை : எட்டு

III. வினாக்கள்

1. எதனை மறத்தல் கூடாது?

  • பிறர் செய்த உதவியை மறக்கக் கூடாது

2. பொறுத்து கொள்ள வேண்டுவது எதுவென ஆசாரக்கோவை கூறுகிறது?

  • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்து கொள்ள வேண்டுவது ஆசாரக்கோவை கூறுகிறது

3. எப்படிபட்பட்ட சொற்களை பேசுதல் வேண்டும்?

  • அனைவரும் இனிய சொற்களைப் பேசுதல் வேண்டும்

4. எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என ஆசாரக்கோவை கூறுகிறது

  • கல்வி அறிவுடன், பிறருக்கு உதவும் தன்மையுடன் அறிவுடையவராய் இருத்தல் வேண்டும் என ஆசாரக்கோவை கூறுகிறது

5. ஆசாரக்கோவை என்பதன் பொருள் யாது

  • ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு” என்பது பொருள்

6. பெருவாளின் முள்ளியார் பற்றிய குறிப்பு எழுதுக

  • ஆசாரக்கோவையில் ஆசிரியர் பெருவாளின் முள்ளியார்.
  • இவர் பிறந்த ஊர் கயத்தூர்
  • ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்
  • இந்நூல் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நூறு வெண்பாக்களை கொண்டது.

Leave a Reply