8th Tamil Refresher Course Answer key 2021

8th Tamil Refresher Course Answer key Topic 8

8th Tamil Refresher Course Answer key Topic 8

8th Tamil Refresher Course Answer key Topic 8. TN 8th Standard Refresher Course ACTIVITY 8 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 8 புதிர், விடுகதைகளுக்கு விடையளித்தல். 8th TAMIL ACTIVITY 8.  QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.

  • Class: 8
  • Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • Topic: 8
  • செயல்பாடு 8 புதிர், விடுகதைகளுக்கு விடையளித்தல்

8th Tamil Refresher Course Answer key Topic 8 புதிர், விடுகதைகளுக்கு விடையளித்தல்

8th Tamil Refresher Course Answer key 8

மதிப்பீட்டுச் செயல்பாடு

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 8 புதிர், விடுகதைகளுக்கு விடையளித்தல் Answers. 8TH TAMIL AVTIVITY 8. அலுவலகக் கடிதம் எழுதுதல். QUESTION & ANSWER

8 புதிர், விடுகதைகளுக்கு விடையளித்தல் | மதிப்பீட்டுச் செயல்பாடு

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

புதிருக்கான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(பட்டுக்கோட்டை, நூலகம், மூங்கில்காடு, பாரதியார், பாய்மரக்கப்பல்)

முதலெழுத்து பாடலின் வேறு பெயரைக் குறிக்கும். – முதல் எழுத்துடன் அடுத்த
இரண்டும் சேர்ந்தால் பெயரைக் குறிக்கும். – இறுதி இரண்டு எழுத்துகள் வினாச் சொற்களைக்குறிக்கும். இம்மூன்றுபுதிர்களும்சேரக்கிடைப்பது.தமிழ்க்கவிஞர்களில்
ஒருவரின் பெயர். யார் அவர்? ———

விடை : பாரதியார்
  • முதல் மூன்று எழுத்துகள் காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதைக் குறிப்பது. –
    இறுதி மூன்றெழுத்துகள், அரசனின் பாதுகாப்பு அரணை இவ்வாறும் அழைப்பர். இவ்விரண்டும் சேர்த்தால் கிடைப்பது ஓர் ஊரின் பெயர். அது எந்த ஊர்? ——
விடை : பட்டுக்கோட்டை
  • முதல் நான்கு எழுத்துகள், புல்லாங்குழல் செய்யப் பயன்படுவதைக் குறிக்கும். இறுதி இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் மரம், செடி கொடிகள் நிறைந்த பகுதியைக் குறிக்கும். அது என்ன? ———
விடை : மூங்கில்காடு
  • முதல் இரண்டு எழுத்துகள் உறங்குவதற்கு உதவுவது. இடையில் உள்ள மூன்றெழுத்துகள் உயிர்வாழ்வதற்கான காற்றைத் தருவது. இறுதி நான்கு எழுத்துகள் கடலில் பயணிக்க உதவுவது. அது என்ன? ——-
விடை : பாய்மரக்கப்பல்
  • முதல் இரண்டு எழுத்துகள் மாணவர் கைகளில் தவழ்வது.
  • இறுதி மூன்று புறம் என்ற சொல்லின் எதிர்ச்சொல். அது என்ன? ——
விடை : நூலகம்

மதிப்பீட்டுச் செயல்பாடு 2

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஆந்தை, மயில், கொக்கு, அணில், பாம்பு)

1. நான் ஓர் அழகு தேவதை; ஆடும் தேவதை. நான் யார்?

விடை : மயில்

2.வளைவேன், நெளிவேன், வயிறு கலங்க வைப்பேன். நான் யார்?

விடை : பாம்பு

3. மரத்திற்கு மரம் தாவுவேன். முதுகில் மூன்று கோடுகள் கொண்டிருப்பேன். நான் யார்?

விடை : அணில்

4. நான் ஒற்றைக்காலில் நிற்கிறேன். ஓடையிலே மீன் பிடிக்கிறேன். நான் யார்?

விடை : கொக்கு

5. பகலில் துயில்வேன். இரவில் அலறுவேன். நான் யார்?

விடை : ஆந்தை

மதிப்பீட்டுச் செயல்பாடு 3

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(காளான், எலுமிச்சம்பழம், தர்பூசணி, வெண்டைக்காய், மாதுளம்பழம்)

1 . பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?

விடை : வெண்டைக்காய்

2. வெளியே பார்த்தால் பச்சை; வெட்டிப் பார்த்தால் சிவப்பு; சுவைத்துப் பார்த்தால்
இனிப்பு அது என்ன?

விடை : தர்பூசணி

3. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊசலாடுது?

விடை : எலுமிச்சம்பழம்

4. சொம்பு நிறையக் கம்பு அது என்ன?

விடை : மாதுளம்பழம்

5. மழைக்காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?

விடை : காளான்

 

8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 

2. சொற்களை உருவாக்குதல்

Leave a Reply