6th Tamil Guide Term 1 Lesson 3.2
TN 6th Standard Tamil Book Back Answers – Term 1 Lesson 3.2 அறிவியலால் ஆள்வோம்
6th Tamil Guide. 6th Std Tamil Term 1 Lesson 3.2 அறிவியலால் ஆள்வோம் Book Back Question and answers download pdf. 6th all subject book back question and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 1 Lesson 3.2 அறிவியலால் ஆள்வோம் – அறிவியல், தொழில்நுட்பம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அவன் எப்போதும் உண்மையையே __________________
- உரைக்கின்றான்
- உழைக்கின்றான்
- உறைகின்றான்
- உரைகின்றான்
விடை : உரைக்கின்றான்
2. “ஆழக்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
- ஆழமான + கடல்
- ஆழ் + கடல்
- ஆழ + கடல்
- ஆழம் + கடல்
விடை : ஆழம் + கடல்
3. “விண்வெளி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
- விண் + வளி
- விண் + வெளி
- வின் + ஒளி
- விண் + வொளி
விடை : விண் + வெளி
4. “நீலம் + வான்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________
- நீலம்வான்
- நீளம்வான்
- நீலவான்
- நீலவ்வான்
விடை : நீலவான்
5. “இல்லாது + இயங்கும்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________
- இல்லாதுஇயங்கும்
- இல்லாஇயங்கும்
- இல்லாதியங்கும்
- இல்லதியங்கும்
விடை : இல்லாதியங்கும்
II. நயம் அறிக.
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
- ஆழக்கடலின் – ஆய்வுகள்
- செயற்கைக்கோள் – செய்தி
- எலும்பும் – எந்திரமனிதன்
- உலகம் – உள்ளங்கை
- இல்லாது – இயங்கும்
- உறுப்பை – உடலும்
- அணு – அனைத்தும்
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
- ஆய்வுகள் – செய்து
- இயற்கை – புயலும்
- நீல – நிலவில்
3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
- பார்க்கின்றான் – நினைக்கின்றான்
- சிறக்கின்றான் – உரைக்கின்றான்
- படைக்கின்றான் -கொடுக்கின்றான்
- காக்கின்றான் – பார்க்கின்றான்
- வாழந்திடுவான் – அமைத்திடுவான்
III. சிறுவினா
1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
- செய்தித் தொடர்பில் சிறந்து விளங்குவதற்கும். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறவும் செயற்கைக்கோள் பயன்படுகிறது
2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
- நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.
IV. சிந்தனை வினா
1. எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக.
- ஆழ்கடலை பற்றிய ஆய்விற்கும்
- கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கும்
- இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கும்
- இயற்கையில் செறிந்துள்ள வளங்களை கண்டு கொள்வதற்கும்
- மனிதன் செய்கின்ற வேலைகளை அவனுக்கு ஈடாகச் செய்து முடிப்பதற்கும்
- உலகையே தம் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதற்கும்
- இணையத்தில் இணைந்திடவும்
- எளிதான அறுவைசிகிச்சை செய்வதற்கும்
- மனிதன் வாழ்நாளை பெருக்குவதற்கும்
- அணுசக்கதியைப் பெருக்குவதற்கும்
- வேற்றுக்கோள்களுக்குச் செல்வதற்கும்
- விண்வெளி பற்றிய ஆய்விற்கும்
- விவசாயத்தை பெருக்குவதற்கும்
- பொருளாதரத்தை உயர்த்துவதற்கும்
- இயற்கையை அழிவின்றி காப்பதற்கும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
2. இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
இதுவரை ஒன்பது கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை
|
||
புதன் |
வெள்ளி |
பூமி |
செவ்வாய் |
வியாழன் |
சனி |
யுரேனஸ் |
நெப்டியூன் |
3. இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் யாது?
- இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் சந்திராயன் ஆகும்.
அறிவியலால் ஆள்வோம் – கூடுதல் வினாக்கள்
I. பிரித்து எழுதுக
- செயற்கைக்கோள் = செயற்கை + கோள்
- எந்திரமனிதன் = எந்திரம் + மனிதன்
- உள்ளங்கை = உள் + அம் + கை
- இணையவலை = இணையம் + வலை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
- வானத்தில் செலுத்தப்படுவது _________________ விடை : செயற்கைக்கோள்கள்
- எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படுவது _________________விடை : எந்திர மனிதன்
- _________________ உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான். விடை : இணைய வலையின்
- நாளைய மனிதன் விண்ணிலுள்ள __________________ எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான்விடை : கோள்களில்