7th Science Guide Term 3 Lesson 3
7th Standard Science Term 3 Solution Guide Tamil Medium | Lesson 3 பலபடி வேதியியல்
7th Standard Science Samacheer kalvi guide Term 3 Lesson 3 பலபடி வேதியியல் Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Science Text Book Download PDF.
7th Science Guide Term 3 பாடம் 3 பலபடி வேதியியல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. மனிதனால் முதல் இழை _________ ஆகும்.
- நைலான்
- பாலியஸ்டர்
- ரேயான்
- பஞ்சு
விடை : ரேயான்
2. வலுவான இழை _________ ஆகும்
- ரேயான்
- நைலான்
- அக்ரிலிக்
- பாலியஸ்டர்
விடை : நைலான்
3. ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை _________
- உருகும்
- எரிதல்
- ஒன்றும் ஏற்படுவதில்லை
- வெடித்தல்
விடை : எரிதல்
4. கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை _________ ஆகும்.
- நைலான்
- பாலியெஸ்டர்
- அக்ரிலிக்
- PVC
விடை : PVC
5. நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது _________ என்ற பயன்பாட்டில் அறியலாம்.
- இரத்தப்பைகள்
- நெகிழிக் கருவிகள்
- நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
- நெகிழி கேரி பைகள்
விடை : நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
6. _________ என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்
- காகிதம்
- நெகிழி புட்டி
- பருத்தி துணி
- கம்பளி
விடை : நெகிழி புட்டி
7. PET என்பது _________ இன் சுருக்கெழுத்தாகும்.
- பாலியெஸ்டர்
- பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்
- பாலிஎத்திலின்டெரிப்தாலேட்
- பாலித்தின்டெரிலின்
விடை : பாலிஎத்திலின்டெரிப்தாலேட்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
- _________ என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். விடை : பாலிகாட்
- பல்வகை நெகிழிகளை இனம்காண _________ பயன்படுகின்றன.விடை : ரெசின் குறீயீடு
- சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் _________ ஆகும்.விடை : பலபடி
- முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு _________ ஆகும்.விடை : பருத்தி
- கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை _________ என்று பெயர்.விடை : பட்டு
III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியானகூற்றை எழுதுக
- அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.விடை :சரி
- மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும். விடை : சரி
- செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையறையில் வேலை செய்வது சிறந்ததே.விடை : தவறு
- சரியான விடை : இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையறையில் வேலை செய்வது சிறந்ததே.
- வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்.விடை : சரி
- பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்.விடை : சரி
IV. பொருத்துக
- நைலான் – வெப்பத்தால் இளகும் நெகிழி
- PVC – வெப்பத்தால் இறுகும் நெகிழி
- பேக்லைட் – இழை
- டெஃப்லான் – மரக்கூழ்
- ரேயான் – ஒட்டாத சமையல்கலன்கள்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ
V. சரியான வரிசையில் எழுக
- நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
- இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.
- ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
- அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
- அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம்.
- அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
விடை :
- நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
- அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
- அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம்.
- அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
- இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.
- ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
VI. ஒப்புமை
- பருத்தி : இயற்கை : பாலியெஸ்டர் : ____________விடை : செயற்கை
- PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : ____________விடை : மட்காத தன்மை
- நைலான் : வெப்பத்தால் உருகும் : பட்டு : ____________ விடை : வெப்பத்தால் எரியும்
VII வாக்கியம் மற்றும் காரணம்
1. வாக்கியம் : மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம் : காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை.
விடை : வாக்கியம் மற்றும் காரணம் சரி, காரணம் வாக்கியத்தை விளக்குகிறது
2. வாக்கியம் : நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம் : நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
விடை : வாக்கியம் மற்றும் காரணம் சரி, காரணம் வாக்கியத்தை விளக்குகிறது
3. வாக்கியம் : நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம் : நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
விடை : வாக்கியம் மற்றும் காரணம் சரி, காரணம் வாக்கியத்தை விளக்குகிறது
VIII குறுக்கெழுத்து
இடமிருந்து வலம்
1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை.
- அக்ரிலிக்
2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி
- பாலிஎத்திலின்
கீழிருந்து மேல்
3. குறை – செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு.
- ரேயான்
4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள்
- பலபடி
மேலிருந்து கீழ்
5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை.
- பட்டு
6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர் செயற்கை இழை
- டெரிகாட்
7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி
- நைலான்
IX. மிகக் குறுகிய விடை தருக
1. பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?
- ஆடைகளில் பயன்படுத்தப்படும் பருத்தியின் முக்கிய அங்கமான செல்லுலோஸ் மூலக்கூறுகளால் ஆனது.
- எ.கா. கார்போ ஹைட்ரேட்
2. நெகிழி பொருள்கள் வெவ்வேறு பண்புகளையும் குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன?
- பலவகையான வேதிப்பொருள்கள் (சேர்த்திகள்) நெகிழியுடன் சேர்க்கப்படுவதால் அப்பொருள் நெகிழ்வுத்தன்மை, வலிமை, மென்மை அல்லது ஒளி ஊடுவும் தன்மை போன்ற பல பண்புகளையும் குணங்களையும் பெறுகின்றன.
3. நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்?
- மீண்டும் புதுப்பிக்க இயலாத வளங்களைப் பாழ்படுத்துவதாலும், கையாள முடியாத அளவில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களும் சாம்பலும் உருவாவதாலும், நெகிழிகளை எரித்தல் என்பது சிறந்த முறையன்று.
4. நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வாளி துருப்பிடித்து விடுகிறது. ஏன்?
- நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வாளி துருப்பிடித்து விடுகிறது. ஏனெனில்
- நெகிழிகள், இயற்கை முறையில் பாக்டீரியாக்களின் செயல்பாட்டால் சிதைக்கப்படுவதில்லை.
- எனவே, அவை மட்கும் தன்மை கொண்டதல்ல என்று அறியலாம்.
5. நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?
- நெகிழியாலான பொருள்களைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த முறையாகும்.
- ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களைப் பெரும்பாலும் தவிர்க்கலாம்.
- எடுத்துக்காட்டாக, நாம் கடைகளுக்குச் செல்லும் பொழுது பருத்தியிலான பை அல்லது சணல் பைகளைக் கொண்டு சென்றால், கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை வேண்டா என்று மறுக்கலாம்.
6. வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
- பேக்லைட்
- மெலமைன்
7. 5 R – கொள்கை என்பது என்ன?
நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று 5R கொள்கை
- தவிர்த்தல் (Refuse)
- குறைத்தல் (Reduce)
- மீண்டும் பயன்படுத்துதல் (Reuse),
- மறுசுழற்சி செய் (Recycle)
- மீட்டெடுத்தல் (Recover)
X. சிறுவினா
1. ‘மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற சொல்லின் பொருள் என்ன?
- காய்கறிகளின் புறத்தோல்கள், பழங்கள் மற்றும் மீதமான உணவுப் பொருள்கள் போன்றவற்றை மண்ணில் இட்டால் அவை மண்ணில் உள்ள பாக்டீரியாவல் சிதைக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை உரமாகின்றன
- இயற்கை முறையில் பாக்டீரியாக்களின் செயல்பட்டால் எந்தப்பொருள் சிதைக்கப்படுகிறதோ அதற்கு மட்கும் தன்மை கொண்ட பொருள் என்று பெயர்
2. கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது அணிய ஏதுவான ஆடைவகை யாது? ஏன்?
- கோடைக் காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமானதாக இருக்கும்.
- ஏனெனில், செயற்கை இழைகள் மிகக் குறைந்த அளவே நீரை உறிஞ்சுவதால், செயற்கை இழைகளாலான உடைகளை அணியும்பொழுது நமக்குப் போதுமான காற்றோட்டம் கிடைக்காததால் நாம் வெப்பமாகவும், சிர்மமாகவும் உணர்கிறோம்.
3. விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழியின் தாக்கம் என்ன?
- மீதமுள்ள உணவுப்பொருளை எறியும்பொழுது பெரும்பாலும் அவற்றை நெகிழி பையிலிட்டே எறிகிறோம். உணவுப்பொருள்களின் வாசனையை நுகரும் விலங்குகள், அவற்றை உண்ணும்பொழுது தவறுதலாக நெகிழி பைகளையும் சேர்த்தே உட்கொள்கின்றன.
- பாசிகளால் சூழப்பட்ட சிறிய நெகிழி துகள்களையும், சிறிய நெகிழித் துணுக்குகளையும் அதிகளவு பறவைகள் அதிக அளவில் உண்ண நேரிடுகிறது.
- இவ்வாறாக நெகிழிப் பொருள்களை உண்ட விலங்குகளின் வயிற்றில் நெகிழிப் பொருள்கள் அவற்றின் வயிறு உறுப்புகளில் இடத்தை அடைத்துக் கொள்வதால், அவ்விலங்குகள் உணவுப் பொருள்களை உண்ணமுடியாமல் பட்டினியால் வாடுகின்றன. வயிற்றில் உள்ள நெகிழிப் பொருள்கள் செரிமானம் அடைவதில்லை.
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன்பைகள் மற்றும் உணவு பொட்டலங்களைப் அதிகளவு பயன்படுத்தி எறிவதால், நமது சுற்றுப்புறமும் குப்பைக் கூடமாகி வடிகால்களிலும் அடைத்துக் கொண்டு சுற்றுப்புறத்தினை மாசுபடுத்துகின்றன. வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால், நீர் தேங்கி நிற்கின்றது.
- இந்நீர்க்குட்டைகள் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற வியாதிகளைப் பரப்புவதோடு, நீர் வடிந்து ஓடாமல், வெள்ளமாகப் பரவுவதற்கும் காரணமாகினறன.
XI. நெடுவினா
1. செயற்கை இழைகளின் பயன்களையும், வரம்புகளையும் பட்டியலிடுக.
செயற்கை இழைகளின் சிறப்புகள்
- உமது ஆடைகளுள் சில ஆடைகள், சலவை செய்ய அவசியமில்லாமலும், பல வருடங்கள் பயன்படுத்திய பின்னரும் நிறம் மங்காமல் இருக்கின்றன. ஏனெனில் பாலியெஸ்டர் என்ற செயற்கை இழையால் ஆனவை.
- செயற்கை இழை ஆடைகளின் சுருங்குவதும் இல்லை, நிறம் மங்குவதும் இல்லை.
- எனவே, பருத்தியாலான ஆடைகளைவிட அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன
- மீன்பிடி வலைபோல் பல பொருள்கள், செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
- செயற்கை இழைகளைப் பயன்படுத்துவதில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில், பட்டு அல்லது கம்பளி இழைகளைக் காட்டிலும், நைலான் போன்ற செயற்கை இழைகள் அதிக வலிமை கொண்டதாக இருக்கின்றன.
- டிராம்போலைன் என்ற செயற்கை இழையானது, அதிகவலிமையும் நீட்சித்தன்மை கொண்டதுமாக இருப்பதால் அவ்விழையானது அதன்மீது குதிப்பதையும் தாங்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.
செயற்கை இழையின் குறைபாடுகள்
- பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகளின் ஒரு முக்கிய குறையாடென்பது அவை வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை. மேலும் அவை எளிதில் தீப்பற்றக்கூடியவை.
- கோடைக் காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமானதாக இருக்கும்.
- ஏனெனில், செயற்கை இழைகள் மிகக் குறைந்த அளவே நீரை உறிஞ்சுவதால், செயற்கை இழைகளாலான உடைகளை அணியும்பொழுது நமக்குப் போதுமான காற்றோட்டம் கிடைக்காததால் நாம் வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம்.
- செயற்கை இழைகள், பெட்ரோலிய வேதிப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் மிக அதிககாலம் உறுதியாய் உழைக்கும்
- இதுவே செயற்கை இழைகளின் குறைபாடாகவும் ஆனது. ஆடைகளிலிருந்து மிகச் சிறு பகுதிகள் உடைந்து நுண்ணிய நெகிழிகள் என்றழைக்கப்படும்.
- துகள்களாய் உதிர்ந்து நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களிலும், நிலத்திலும் மாசுபாட்டை உண்டாக்குகின்றன.
2. நெகிழிப் பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும
நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று 5R கொள்கை
- தவிர்த்தல் (Refuse)
- குறைத்தல் (Reduce)
- மீண்டும் பயன்படுத்துதல் (Reuse),
- மறுசுழற்சி செய் (Recycle)
- மீட்டெடுத்தல் (Recover)
மறுத்தல் / தவிர்த்தல் (Refuse)
- நெகிழியாலான பொருள்களைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த முறையாகும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களைப் பெரும்பாலும் தவிர்க்கலாம்.
- எடுத்துக்காட்டாக, நாம் கடைகளுக்குச் செல்லும் பொழுது பருத்தியிலான பை அல்லது சணல் பைகளைக் கொண்டு சென்றால், கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை வேண்டா என்று மறுக்கலாம்.
குறைத்தல் (Reduce)
- நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் முக்கியமான முறையாகும்.
- நெகிழிப் பொருள் ஒன்றை வாங்கும் முன், அப்பொருளுக்குச் சமமாக அல்லது மாற்றாக வேறு ஏதேனும் மூலப்பொருளால் செய்யப்பட்ட பதிலிப்பொருள் உள்ளதா என சரிபார்த்தபின் அப்பொருளை வாங்கலாம்.
- நாமே நெகிழிப் பொருள்களைப் குறைவாக பயன்படுத்தினால், குறைந்த அளவிலேயே நெகிழிக் கழிவுகளையும் உருவாக்குவோம்.
மீண்டும் பயன்படுத்துதல் (Reuse)
- நெகிழியினால் செய்யப்பட்ட பொருள்களை முடிந்தளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
- எடுத்துக்காட்டாக, நம்மிடம் நல்ல நிலையில் ஒரு நெகிழிப் பை இருந்தால், அதனைத் தூக்கியெறிலாம் மறுமுறை கடைக்குப் பொருள்கள் வாங்கச் செல்லும்பொழுது, மீண்டும் பயன்படுத்தலாம்.
- நம்மிடம் நல்ல நிலையில் உள்ள ஒரு நெகிழிப் பொருள் இருந்து, நமக்கு அதைப் பயன்படுத்த விருப்பமில்லை எனில், அதனைத் தூக்கி எறியாமல், அப்பொருளை பயன்படும் வேறொருவருக்குக் கொடுக்கலாம்.
மறுசுழற்சி செய்தல் (Recycle)
- நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது நல்ல முறையாகும்.
- பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, நெகிழிக் கழிவுகளை ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் பிரித்தெடுத்து, அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் சிறந்த முறையாகும்.
- பலவகையான வெப்பத்தால் இளகும் நெகிழிகளை மறுசுழற்சி செய்யலாம். அவை வெப்பத்தால் இளகி, உருகியபின் அவற்றை மறுசுழற்சியால் வேறொரு பொருளாக மாற்ற முடியும்,
மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல் – (Recover)
- பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைக் கையாள்வதற்காகக் சாதகமான வழியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நெகிழிப் பொருள்களை எரிப்பதால் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்கள் வெளிவருவதும், நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருள்களும், கன உலோகங்கள் சாம்பலில் வெளிவருவதும் தவிர்க்க இயலாதவைகளாகும்.
- மீண்டும் புதுப்பிக்க இயலாத வளங்களைப் பாழ்படுத்துவதாலும், கையாள முடியாத அளவில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களும் சாம்பலும் உருவாவதாலும், நெகிழிகளை எரித்தல் என்பது சிறந்த முறையன்று.