12th Botany Lesson 3 Additional 3 Marks
12th Botany Lesson 3 Additional 3 Marks. TN 12th Bio Botany Unit 7 Lesson 3 Additional 3 Marks Question and Answers Tamil Medium. Tamil Nadu Samacheer kalvi guide 12th Standard Botany 3rd Chapter Full Answer key Additional 3 Mark Question and Answers. Students Guide 360.
12th Botany Lesson 3 Additional 3 Marks
XII. மூன்று மதிப்பெண் வினாக்கள்
1. குறுக்கேற்றம் மற்றும் பரிமாற்ற இடம் மாறுதல் வேறுபடுத்துக.
குறுக்கேற்றம் | பரிமாற்ற இடம் பெயர்தல் |
1. இது இயல்பானது | இது முறையற்ற குறுக்கேற்றம் (குரோமோசோம் அமைப்புப் பிறழ்ச்சி) |
2. ஒத்திசைவான குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோசோம்களுக்கிடையே நடைபெறுகிறது. | ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமாடிடுகளுக்கிடையே நடைபெறுகிறது. |
2. பைவேலண்ட், டெட்ரடு வேறுபடுத்து
பைவேலண்ட் (அ) இரட்டை இணை
டெட்ரடு (அ) நான்கமை நிலை
1. ஒத்திசைவு குரோமோசோம்கள் ஒன்றுக்கொன்று நெருங்கமைவதால் தோன்றும் ஒரு இணை - இரட்டை இணை
இரட்டை இணையில் உள்ள ஒவ்வொரு ஒத்திசைவு குரோமோசோமும் இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோடிட்டுகளை உருவாகத் தொடங்குகிறது.
2. ஒத்திசைவான குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோசோம்களுக்கிடையே நடைபெறுகிறது.
இது ஒரு சென்டிரோமியர் உடைய நிலையில் நான்கு குரோமோடிட்களாகத் தெரிவதால் இது நான்கமை நிலை எனப்படுகிறது.
பைவேலண்ட் (அ) இரட்டை இணை | டெட்ரடு (அ) நான்கமை நிலை |
1. ஒத்திசைவு குரோமோசோம்கள் ஒன்றுக்கொன்று நெருங்கமைவதால் தோன்றும் ஒரு இணை - இரட்டை இணை | இரட்டை இணையில் உள்ள ஒவ்வொரு ஒத்திசைவு குரோமோசோமும் இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோடிட்டுகளை உருவாகத் தொடங்குகிறது. |
2. ஒத்திசைவான குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோசோம்களுக்கிடையே நடைபெறுகிறது. | இது ஒரு சென்டிரோமியர் உடைய நிலையில் நான்கு குரோமோடிட்களாகத் தெரிவதால் இது நான்கமை நிலை எனப்படுகிறது. |
3. மறு சேர்க்கை என்பதை வரையறு.
- குறுக்கேற்றத்தின் போது உருவாகும் கயாஸ்மா புள்ளிகளில் குரோமோடிடுகள் துண்டாகி மீண்டும் மறு இணையும் நடைபெறுகிறது – இந்த பரஸ்பர துண்டுகள் பரிமாற்றத்தினால் புதிய மறு சேர்க்கை உருவாகிறது.
4. கோல்ச்சிசின் – குறிப்பு வரைக
- கோல்ச்சிசிகம் ஆட்டம்னேல் -தாவரவேர் மற்றும் கந்தம் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆல்கலாய்டு ஆகும்.
- தாவர வளர் நுனியில் குறைந்த செறிவில் பயன் படுத்தப்படும் போது பன்மடியத்தைத் தூண்டு கிறது
- ஆனால் மூலத் தாவரம் அதிலுள்ள எதிர்கோல்ச் சிசினால் எவ்வித பாதிப்புக்கும் ஆளாவதில்லை.
5. பன்மடியத்தின் முக்கியத்துவம் தருக.
- அதிகவீரியம் – அதிக தகவமைப்பு இருமடியத்தை விட அதிக வீரீயம் & அதிக தகவமைப்புடையது.
- அலங்காரத் தாவரங்கள் (தன் நான்மடியங்கள்)
- பெரிய மலர்களையும், நீண்ட மலரும் காலமும் கொண்டவை.
- அதிக நீர்ச்சத்து எனவே அதிக உயிர் எடை உடையதாக உள்ளது.
6. R.F. அல்லது மறுகூட்டிணைவு நிகழ்விரைவ ன் என்றால் என்ன?
- மறு சேர்க்கை நடைபெறும் நிகழ்விரைவு பின் வரும் சூத்திரம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
RF =மொத்த மறு கூட்டிணைவியின் எண்ணிக்கை/மொத்த வழித்தோன்றல்களின் எண்ணிக்கைx 100
7. ஒரு இருமடிய உயிரினம் 4 மரபணு அமைவிடங் களுக்கு ஹெட்டிரோசைகஸ் தன்மையுடையது என்றால் எத்தனை வகை கேமிட்டுகள் உருவா கின்றன?
n = 4
So 2n = 24 = 2x2x2x2= 16
16 வகையான கேமிட்டுகளை உருவாக்குகிறது.
8. மெண்டலின் மாறுபாடுகளை குரோமோசோம் பிறழ்ச்சியிலிருந்து வேறுபடுத்து.
மெண்டலின் மாறுபாடுகள்
குரோமோசோம் பிறழ்ச்சி
ஒரு மரபணுவில் ஏற்படும் சடுதி மாற்றத்தினால் ஏற்படும் - மெண்டலின் பாரம்பரிய பண்பு
கடத்துதலை ஒத்தது.
எ.கா: அரிவாள் செல் அனிமீயா
குரோமோசோம்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாறுபாடுகளினால் உருவாகிறது.
எ.கா: டவுண் சிண்ட்ரோம்
மெண்டலின் மாறுபாடுகள் | குரோமோசோம் பிறழ்ச்சி |
ஒரு மரபணுவில் ஏற்படும் சடுதி மாற்றத்தினால் ஏற்படும் - மெண்டலின் பாரம்பரிய பண்பு கடத்துதலை ஒத்தது. எ.கா: அரிவாள் செல் அனிமீயா | குரோமோசோம்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாறுபாடுகளினால் உருவாகிறது. எ.கா: டவுண் சிண்ட்ரோம் |
9. தலைகீழ் திருப்பம் என்றால் என்ன ?
- குரோமோசோமில் உள்ள மரபணுக்கள் 180° கோணத்தில் தலைகீழாக மாற்றப்படுகிறது.
- இரு பிளவுகள் ஏற்பட்டு மறு இணைவு நடைபெறுகிறது.
- இதில் எவ்வித மரபணுக்கள் எண்ணிக்கை கூடுதலோ குறைதலோ நடைபெறாது. ஆனால் அவற்றின் வரிசை அமைப்பில் மாறுதல் ஏற்படும்.
- முதன் முதலாக ஸ்டர்ட் இலாண்ட் என்பவரால் டுரோசோபில்லாவில் கண்டறியப்பட்டது. பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தது.
10.பாராசென்டிரிக் மற்றும் பெரி சென்டிரிக் தலைகீழ் திருப்பம் வேறுபடுத்து.
பாரா சென்டிரிக் | பெரி சென்டிரிக் |
இதில் மரபணு எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்படுவதில்லை - வரிசை எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும். | இதில் மரபணு எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்படுவதில்லை. வரிசை அமைப்பு மாறுகிறது. |
சென்டிரோமியர் அல்லாத பகுதியில் தலைகீழ் திருப்பம் நடைபெறுகிறது. | சென்டிரோமியர் உள்ள பகுதியில் தலைகீழ் திருப்பம் நடைபெறுகிறது. |
11. இப்படத்தில் குரோமோசோம் எண்ணிக்கை பிறட்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்து குறிப்பெழுதுக. (PTA – 4)
- இரண்டு அல்லது மூன்று தனித்த குரோமோசோம்கள் இழக்கப்பட்டால் முறையே இரட்டை மோனோசோமி (Double monsomy) (2n-1-1) என அழைக்கப்படுகிறது.
12.பல்கூட்டு அல்லீல்களின் பண்புகள் யாவை?
- ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள பல்கூட் அல்லீல்களின்வரிசை – எப்போதுமே ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ளது -இந்த
அல்லீல்களின் வரிசைகளுக்குள் குறுக்கேற்றம் நடைவெறுவது இல்லை. - ஒரு பண்புக்கு மட்டுமே காரணமானவை.
- இயல்பான வகை அல்லீல்கள் ஓங்கு பண்பை வெளிப்படுத்தும் சடுதி மாற்ற முற்ற தாவரங்களின் அல்லீல்கள் ஓங்கு அல்லது நடுத்தர வகை புறத்தோற்ற விளைவுகளை வெளிப்படுத்துகின்றன.
- சடுதிமாற்றம் பல்கூட்டு அல்லீல்களைக் கலப்பு செய்யப்படும் போது அதன் புறத்தோற்ற வகையம் எப்பொழுதுமே சடுதிமாற்ற முற்ற வகையை ஒத்தே அமைந்திருக்கும் – இயல்பான வகையை ஒத்திருக்காது.
13. முழுபிணைப்பு முழுமையற்ற பிணைப்பு வேறுபடுத்துக.
முழுபிணைப்பு
முழுமையற்ற பிணைப்பு
மரபணுக்கள் ஒரே குரோமோசோம்களில் நெருக்கமாக அமைந்து காணப்படுவதால் குறுக்கேற்றம் நடை |பெறவில்லை - பெற்றோர் பண்புகளைக் காணப் படுகின்றன. மறு சேர்க்கை மரபணுக்கள் உருவாவ தில்லையாதலால் பரிமாண முக்கியத்துவம் அற்றது.
மரபணுக்கள் நெருக்கமின்றி ஒரே குரோமோசோமில் காணப்படுவதால் - அவற்றிற்கிடையே சிறிதளவு குறுக்கேற்றம் நடைபெற வாய்ப்புள்ளதால் இது முழுமையற்ற குறுக்கேற்றம் எனப்படுகிறது. புதிய மறு சேர்க்கை மரபணுக்கள் உருவாவதால் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தது.
முழுபிணைப்பு | முழுமையற்ற பிணைப்பு |
மரபணுக்கள் ஒரே குரோமோசோம்களில் நெருக்கமாக அமைந்து காணப்படுவதால் குறுக்கேற்றம் நடை |பெறவில்லை - பெற்றோர் பண்புகளைக் காணப் படுகின்றன. மறு சேர்க்கை மரபணுக்கள் உருவாவ தில்லையாதலால் பரிமாண முக்கியத்துவம் அற்றது. | மரபணுக்கள் நெருக்கமின்றி ஒரே குரோமோசோமில் காணப்படுவதால் - அவற்றிற்கிடையே சிறிதளவு குறுக்கேற்றம் நடைபெற வாய்ப்புள்ளதால் இது முழுமையற்ற குறுக்கேற்றம் எனப்படுகிறது. புதிய மறு சேர்க்கை மரபணுக்கள் உருவாவதால் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தது. |
14. சினாப்சிஸ் வரையறு? அதன் வகைகள் யாவை?
- மியாசிஸ் செல்பிரிதலின் புரோபோஸ் 1 நிலையின் சைகோட்டின் துணை நிலையின் போது ஒத்திசை வான குரோமோசோம்கள் அருகருகே வருகின்றது – இது இது இணைகள் உருவாகிறது.
- இந்த இணைதல் சினாப்ஸிஸ் (அ) சின்டசிஸ் எனப்படும்.
- துவங்கும் இடத்தினடிப்படையில் 3 விதமான சினாப்ஸிஸ் காணப்படுகிறது.
- ஒரு குரோமோடிட்டுகளில் ஒரு அல்லீல் காணப் படுகிறது.
- அனாஃபேஸ் 1-ல் ஒத்திசைவு குரோமோசோம்கள் பிரிவதன் மூலம் இருவேறுபட்ட அல்லீல்கள்
15. செல்பிரிதலின் போது குரோமோசோம்களின் செயல் பாடுகள் பற்றிய முக்கியக் கூற்றுகள் யாவை?
- ஒத்திசைவு குரோமோசோம்களில் அல்லீல்களின் மரபணு வகையம் அதற்கென ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் உள்ளது.
- குன்றல் பகுப்பின் – இடைநிலையின் – S நிலையில் குரோமோசோம் இரட்டிப்படையும் போது ஒவ்வொரு அல்லீல்களும் ஒரு நகல்களாக (AA/aa) மாறுகின்றன.
- (AA) மற்றும் (aa) பிரிதலடைகின்றன. ஒவ்வொரு சேய்செல்லும் (கேமிட் ) ஒரு பண்பிற்கான ஒரு அல்லீலை மரபணு எடுத்துச் செல்கிறது. (A), (A) (a) மற்றும் (a).
12th Botany Lesson 3 Additional 3 Marks
16.சார்பதி சொனோரா மற்றும் காஸ்டர் அருணா – வேறுபடுத்து
சார்பதி சொனோரா (64)
காஸ்டர் அருணா -
மக்சிகன் வகையிலிருந்து காமா கதிர்வீச்சின் மூலம் உருவாக்கப்பட்ட சடுதிமாற்ற கோதுமை வகை
-
M.S.சுவாமிநாதன் குழுவினரால் உருவாக்கப் பட்டது.
-
முன் முதிர்வு - அதிகம் புரத அளவு கொண்டதாகும்.
ஆமணக்கு தாவரத்தின் சடுதிமாற்ற வகை - வெப்ப நியுட்ரான்களை விதைகளில் செலுத்தி உருவாக்கப்பட்ட சடுதிமாற்ற முற்ற ரகம் முன் முதிர்வு (120) நாட்கள் அடைவதால் சிறப்புத் தன்மையுடையது - வறட்சிக்கு முன் தப்பித்து பலன் தரத்தக்கது.
சார்பதி சொனோரா (64) | காஸ்டர் அருணா |
| ஆமணக்கு தாவரத்தின் சடுதிமாற்ற வகை - வெப்ப நியுட்ரான்களை விதைகளில் செலுத்தி உருவாக்கப்பட்ட சடுதிமாற்ற முற்ற ரகம் முன் முதிர்வு (120) நாட்கள் அடைவதால் சிறப்புத் தன்மையுடையது - வறட்சிக்கு முன் தப்பித்து பலன் தரத்தக்கது. |
18.அயனியாக்கும் கதிர்வீச்சுக்களினால் நடைபெறும் சடுதிமாற்றம் மற்றும் அயனியாக்க கதிர் வீச்சுக்களினால் நடைபெறும் சடுதிமாற்றம் இவற்றை வேறுபடுத்துக.
அயனியாக்கும் கதிர்வீச்சுக்களின் சடுதிமாற்றம்
அயனியாக்க கதிர்வீச்சுக்களின் சடுதிமாற்றம்
இதின் குறுகிய அலை நீளம் உடையது. இது அணுவிலுள்ள எலக்ட்ரான்களை அயனியாக்கப் போதுமான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.
எ.கா. X கதிர்கள், காமா, பீட்டா, ஆல்பா மற்றும் காஸ்மிக் கதிர்கள்
இவை அலை நீளங்களையும், குறைவான ஆற்றலையும் குறைந்த ஊடுருவக் கூடிய திறன் கொண்டவை. மேற்புற சவ்வுகளுக்கருகாமையில் உட்கரு கொண்ட ஒரு செல் நுண்ணுயிர்கள், வித்துக்கள், மகரந்தத்துகள்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
எ.கா: U.V.கதிர்கள்
அயனியாக்கும் கதிர்வீச்சுக்களின் சடுதிமாற்றம் | அயனியாக்க கதிர்வீச்சுக்களின் சடுதிமாற்றம் |
இதின் குறுகிய அலை நீளம் உடையது. இது அணுவிலுள்ள எலக்ட்ரான்களை அயனியாக்கப் போதுமான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. எ.கா. X கதிர்கள், காமா, பீட்டா, ஆல்பா மற்றும் காஸ்மிக் கதிர்கள் | இவை அலை நீளங்களையும், குறைவான ஆற்றலையும் குறைந்த ஊடுருவக் கூடிய திறன் கொண்டவை. மேற்புற சவ்வுகளுக்கருகாமையில் உட்கரு கொண்ட ஒரு செல் நுண்ணுயிர்கள், வித்துக்கள், மகரந்தத்துகள்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. எ.கா: U.V.கதிர்கள் |
19.ஹாலிடேவின் கலப்பு DNA மாதிரியின் படிநிலைகளைத் தருக.
- 1964-ல் ராபின் ஹாலிடே என்பவரால் முன் மொழியப்பட்டது.
- ஒத்திசைவு DNA மூலக்கூறுகள் (இரட்டிப் படைந்தவை) அருகமைந்து இணை சேர்கிறது.
- எண்டோநியூக்ளியேஸ் நொதி -ஒரு இழையை ஒரு இடத்தில் துண்டிக்கிறது.
- துண்டான இழைகள் – குறுக்கமைகிறது, ஒத்தி சைந்த இழையுடன் – ஹாலிடே சந்திப்பு நிகழ் கிறது.
- இந்த ஹாலிடே சந்திப்பு இடம் பெயர்கிறது. இது கிளை இடம் பெயர்வு – என அழைக்கப்படுகிறது. இதனால் வேற்றமைந்த ஈரிழைப்பகுதி ஒன்று உருவாகிறது.
- DNA இழைகள் செங்குத்தாகவோ (V வழியாக) (அ) கிடைமட்டமாகவோ (H-வழியாக) துண்டிக்கலாம்.
20. பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாட்டின் ஆய்வு பற்றி விவரி.
- பழப்பூச்சியின் (டுரோசோஃபில்லா மெலனனோ காஸ்டர்) சிவப்பு வெள்ளை நிறக் கண்களுக்கான அல்லீல்கள் X குரோமோசோமில் இருக்க அதற்கு இணையான மரபணு Y குரோமோசோமில் காணப் படவில்லை.
- பெண் பழப்பூச்சி கண்களின் நிறப்பண்பிற்கு இரண்டு அல்லீல்களைக் கொண்டும், ஆண் பழப்பூச்சியோ ஒரு அல்லீல் மட்டுமே கொண்டு உள்ளது.
- மஞ்சள் நிற உடல் மற்றும் வளர்ச்சி குன்றிய சிறகு களுக்கான மரபணுக்களும் X-குரோமோசோம் வழியாகவே கடத்தப்பட்டன.
- T.H.மார்கனின் டுரோசோஃபில்லா மெலனோ காஸ்டரில் பால் சார்ந்த பண்புகள் கடத்தலில் மேற் கொண்ட ஆய்வுகள் மரபணுக்கள் குரோமோ சோமில் காணப்படுவதை உறுதி செய்ததோடு, பாரம்பரியத் திற்கான குரோமோசோம் கொள்கைக்கு ஆதரவும் வலுவும் சேர்த்தது.
- செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால் மறுகூட்டி ணைவுடன் கூடிய வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
- கிடைமட்டத்தில் துண்டிப்பு நிகழ்ந்தால் மறு கூட்டிணைவு அற்ற வேற்றுமைந்த ஈரிழை உருவாகும்.
21. இணைப்பு மற்றும் விலகுதல் வேறுபடுத்துக.
இணைப்பு (சிஸ்வகை)
விலகல் (டீரான்ஸ் வகை)
ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப்படும் இரு ஓங்குதன்மை அல்லீல்கள் (அ) ஒரு ஒடுங்குதன்மை அல்லீல்கள் ஒரே கேமீட் மூலம் மரபு வழி அடைவது - இணைப்பு (அ) சிஸ்வகை எனப்படும்.
ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒங்கு மற்றும் ஒடுங்கு தன்மை கொண்ட அல்லீல்கள் வெவ்வேறு குரோமோ சோம்களில் அமைந்து வேறுபட்ட கேமீட்டுகள் மூலம் தனியாகவே மரபு வழி அடைந்தால் அது விலகல் அல்லது டிரான்ஸ்வகை அமைவு என்று பெயர்.
இணைப்பு (சிஸ்வகை) | விலகல் (டீரான்ஸ் வகை) |
ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப்படும் இரு ஓங்குதன்மை அல்லீல்கள் (அ) ஒரு ஒடுங்குதன்மை அல்லீல்கள் ஒரே கேமீட் மூலம் மரபு வழி அடைவது - இணைப்பு (அ) சிஸ்வகை எனப்படும். | ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒங்கு மற்றும் ஒடுங்கு தன்மை கொண்ட அல்லீல்கள் வெவ்வேறு குரோமோ சோம்களில் அமைந்து வேறுபட்ட கேமீட்டுகள் மூலம் தனியாகவே மரபு வழி அடைந்தால் அது விலகல் அல்லது டிரான்ஸ்வகை அமைவு என்று பெயர். |
22. பிணைப்பு மற்றும் குறுக்கேற்றம் வேறுபாடு தருக.
பிணைப்பு | குறுக்கேற்றம் |
1. குரோமோசோம்களில் உள்ள மரபணுக்கள் அருகமைந்து காணப்படும். | இவை பிணைப்புற்ற மரபணுக்களைப் பிரிக்கிறது. |
2. இதில் ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள ஒரு குரோமோசோம் மட்டுமே பங்கு பெறும். | இதில் ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோட்டிகளுக்கு இடையே உள்ள துண்டுகளின் பரிமாற்றம் நிகழும். |
3. புதிய மரபணுச் சேர்க்கைகளை இது குறைக்கிறது. | புதிய மரபணுச் சேர்க்கைகள் தோன்றுவதன் மூலம் வேறுபாடுகளை அதிகரிக்கிறது. புதிய உயிரினம் தோன்ற வழிவகுக்கிறது. |
23. டெட்ராசோமியை நான்மடியத்திலிருந்து வேறுபடுத்துக. (PTA – 4)
டெட்ராசோமி | நான்மடியம் |
ஒரு இணை (அ) இரண்டு இணை குரோமோசோம்கள் இருமடிய தொகுதியுடன் அதிகரித்துக் காணப்படும் நிலை டெட்ராசோம் (2n+2) எனப்படும். | தாவரங்கள் தன்னுடைய நான்கு தொகுதி மரபணு தொகையத்தைப் பெற்றிருக்கிறது. |
(2n+2+2) - இதற்கு இரட்டை டெட்ராசோமி என்று பெயர் | இருமடித் தாவரங்களின் குரோமோசோம்களை இரட்டிப்படைய தூண்டுவதன் மூலம் உருவாகிறது. |
எ.கா - கோதுமை | (எ.கா.திராட்சை,நிலக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் காஃபி) |