5th Social Science Guide Term 1 Lesson 2
5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி Book Back Answers
5th Standard Social Science Book Back and Additional Question and answers Term 1 Lesson 2 வரலாற்றை நோக்கி Book in answers download pdf. 5th Social Science Samacheer kalvi guide Tamil Medium Download answers. 5th All Subject Test Book download. 5th Tamil Medium Guide. Class 5 All Subject Book Back Answers.
5th Social Science Guide வரலாற்றை நோக்கி Text Book Back Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பழங்கற்கால மனிதர்கள்.
அ) பருத்தி ஆடைகள் அணிந்திருந்தனர்.
ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.
இ) கம்பளி ஆடைகள் அணிந்திருந்தனர்.
விடை:ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.
2. பழங்கால மனிதரால் வளர்க்கப்பட்ட விலங்கு
அ) பசு
ஆ) குதிரை
இ) நாய்
விடை:இ) நாய்
3. பழங்கால மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம்.
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) தங்கம்
விடை:ஆ) செம்பு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
- பழங்கால மனிதன் வாழ்ந்த இடம் _____________விடை:குகைகள்
- எழுத்துக்கள் கண்டுபிடிப்புகளுக்கு முந்திய காலம் _______________ விடை:வரலாற்றுக்கு முந்தையக் காலம்
- இரும்புக் கருவிகளை பயன் படுத்திய காலம் ______________விடை:இரும்புக் காலம்
- மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு ________________ விடை:கல்சக்கரங்கள்
- வரலாற்று ஆராய்ச்சி நடைபெறும் ஒரு தமிழக இடம் _____________விடை:கீழடி
III. விரிவாக விடையளி
1. கற்காலம் என்றால் என்ன?
விடை:
- கற்காலம் என்பது கற்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு காலமாகும்.
2. புதுக்கற்காலக் காலம் வரையறு.
விடை:
- கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.
- எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன. வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.
3. எந்தக்காலத்தில் கல்லும் தாமிரமும் பயன்படுத்தப் பட்டன?
விடை:
- கற்காலத்தில் கல் பயன்படுத்தப்பட்டது. புதிய கற்காலத்தின் இறுதியில் செம்புக்காலத்தில் கல்லுடன் தாமிரம் பயன்படுத்தப்பட்டது.
4. வரலாற்றை நாம் கற்க உதவும் மூலங்கள் யாவை?
விடை:
- கைவினைப் பொருள்கள், மண்பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் எழுதப்பட்ட ஆவணங்கள் போன்றவை வரலாற்றைக் கட்டமைக்க உதவும் – மதிப்புமிக்க ஆதாரங்களாகும்.
5. அருங்காட்சியகம் என்றால் என்ன?
விடை:
- அருங்காட்சியகம் என்பது அரிய மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இடம். இவை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. எனவே, கடந்த காலத்தின் எச்சங்களைப் பாதுகாப்பது முக்கியமாகும். எச்சங்கள் என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய பூமியில் புதையுண்ட பொருள்கள் ஆகும்.
6. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
- வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
7. பழங்கற்காலக் கருவிகளை வகைப்படுத்துக.
விடை:
பண்டைய மனிதர்கள் விலங்குகளோடு சேர்ந்து காடுகளில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகளை விரட்டவும், வேர்கள், குருத்துகள் முதலியவைகளை தோண்டவும் கற்கருவிகளைப் பயன்படுத்தினர்,
கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.
எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் – ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன, வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.
- பழங்காலத்தில் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
- குவார்ட்சைட் என்ற கல்லிலிருந்து ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.
- நெருப்பை உருவாக்க சிக்கி முக்கி கற்கள் பயன்படுத்தப்பட்டன.
5th Social Science Guide வரலாற்றை நோக்கி InText Questions and Answers
பக்கம் 150 செயல்பாடு :
1. பழைய கற்கால மனிதர்களால் உண்ணப்பட்ட உணவு எது?
விடை:
- வேர்கள், குருத்துகள், மாமிசம், தானியம்
2.குகைகளில் பழைய மனிதர்கள் ஏன் வாழ்ந்தார்கள்?
விடை:
- பழங்கால மனிதர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வீடு கட்டத் தெரியாது. எனவே அவர்கள் குகைகளில் வாழ்ந்து வந்தனர்.
3. ஏன் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்?
விடை:
- கற்கால மனிதர்களுக்கு நெருப்பை உருவாக்கவும் சமைக்கவும் தெரியாது. எனவே அவர்கள் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்.
செயல்பாடு :
வரலாற்று காலத்தின் வயதைக் கண்டுபிடி.
பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், இரும்புக் காலம்
விடை: