6th Science Guide Term 1 Unit 7
6th Standard Science Guide | Term 1 – Lesson 7 கணினி ஓர் அறிமுகம்
| Tamil Medium
6th Standard Science Term 1 Lesson 7 கணினி ஓர் அறிமுகம் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers.
6th Science Guide Term 1 Lesson 7 கணினி ஓர் அறிமுகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யhர்?
- மார்ட்டீன் லூதர் கிங்
- கிரகாம்பெல்
- சார்லி சாப்ளின்
- சார்லஸ் பாபேஜ்
விடை : சார்லஸ் பாபேஜ்
2. கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?
- கரும்பலகை
- கைப்பேசி
- வானொலி
விடை : கைப்பேசி
3. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு.
- 1980
- 1947
- 1946
- 1985
விடை : 1946
4. கணினியின் முதல் நிருவர் யார்?
- லேடி வில்லிங்டன்
- அகஸ்டா அடாலவ்லேஸ்
- மேரி க்யூரி
- மேரிக்கோம்
விடை : லேடி வில்லிங்டன்
5. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக
- கணிப்பான்
- அபாகஸ்
- மின் அட்டை
- மடிக்கணினி
விடை : மின் அட்டை
II. சரியா? தவறா?
- கணினி ஒரு மின்னணு இயந்திரம்.விடை : சரி
- கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.விடை : தவறு
- கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்விடை : சரி
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- தரவு என்பது ____________________ ஆகும். விடை : முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள்
- உலகின் முதல் பொதுப் பயன்பாடுக் கணினி ________________விடை : ENIAC
- தகவல் என்பது ___________________ விவரங்கள் ஆகும்விடை : முறைப்படுத்தப்பட்ட
- ஐந்தாம் தலைமுறை ___________________ நுண்ணறிவு கொண்டதுவிடை : செயற்கை
- குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ________________ விடை : அபாகஸ்
IV.பொருத்துக
- முதல் தலைமுறை – செயற்கை நுண்ணறிவு
- இரண்டாம் தலைமுறை – ஒருங்கிணைந்தச் சுற்று
- மூன்றாம் தலைமுறை – வெற்றிடக் குழாய்கள்
- நான்காம் தலைமுறை – மின்மயப் பெருக்கி
- ஐந்தாம் தலைமுறை – நுண்செயலி
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – உ, 5 – அ
6th Science Guide Term 1 Unit 7
VI. ஓரிரு வரிகளில் பதிலளி
1. கணினி என்றால் என்ன?
- கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்னணு இயந்திரம். இதில் நாம் தரவுகளைச் சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நாம் தேவைக்கு ஏற்றவாறு தகவல்களை மாற்றி எடுத்துக் கொள்ளலாம்.
2. கணினியின் முன்னாேடிகள் யாவை?
- சார்லஸ் பாப்பேஜ்” அவர்கள் பகுப்பாய்வுப் பொறியை வடிவமைத்தார். அவர் தான் “கணினியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார் அவர் ஏற்படுத்திய அடிப்படையான கட்டமைப்புதான் இன்றைக்கும் அனைத்துக் கணினி பயன்பாட்டிலும் உள்ளது. அகஸ்டோ அடா லவ்லேஸ் என்பவர் கணித செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், உலகின் முதல் கணினி நிரலர்’ எனப் போற்றப்படுகிறார்.
3. தரவுப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
- தரவு என்பது ‘முறைப்படுத்தப்பட வேண்டிய’ விவரங்கள். இவை நேரடியாக நமக்கு பயன் தராது. பொதுவாக எண், எழுத்து, படக் குறியீடுகளாக இருக்கும்.
4. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.
- விசைப்பலகை
- சுட்டு
- தொடுதிரை
- ஜாய் ஸ்டிக்
5. மென்பாெருள் மற்றும் வன்பாெருள் இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
மென்பாெருள் |
வன்பாெருள் |
1. கணினியில் வேலைகளுக்கு உதவுக்கூடிய கட்டளைகள் அல்லது நிரல்களின் தொகுப்பு தான் மென்பொருள் எனப்படும் |
கணினியில் இருக்ககூடிய மென்பொருள் செயல்படுவதற்கு உதவுக்கூடிய கணினியின் பாகங்களே வன்பொருட்கள் எனப்படும் |
2. அறிவுறுத்தல்களின் தொகுப்பை |
மென்பொருள் ஏற்றப்பட்டவுடன் |
3. மென்பொருள் தருக்க ரீதியானது |
வன்பொருள் இயற்பியல் ரீதியானது |
VI. குறுகிய வினா
1. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக
- கணினி நம் வாழ்வில் ஒரு அங்கமா செயல்படுவதோடு வணிகத் துறையிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது.
- நம் வாழ்வில் அனைத்துத் துறைளிலும் கணினி முக்கியப் பங்கு வகிக்கிறது.
எடுத்துக்காட்டு:
- அலுவல நிர்வாகம் – வணிகம் அல்லது வணிகமல்லாதது
- இணையதளம்
- டிஜிட்டல் வீடியோ (அல்லது) ஆடியோ கலவை
- டெஸ்க்டாப் பதிப்பகம்
- மருத்துவத்தில் கணினி
- கணித கணக்கீடுகள்
- வங்கி, ஏடி.எம் இயந்திரங்கள்
- பயணங்கள்
- சான்றிதழ்
- வணிகத்தில் கணினி
- வானிலை ஆய்வு.