6th Science Guide Term 1 Unit 5
6th Standard Science Guide | Term 1 – Lesson 5 விலங்குகள் வாழும் உலகம்
| Tamil Medium
6th Standard Science Term 1 Lesson 5 விலங்குகள் வாழும் உலகம் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers.
6th Science Guide Term 1 Lesson 5 விலங்குகள் வாழும் உலகம்
I. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்கண்டவற்றை நிரப்புக
1. நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _____________ என்று அழைக்கலாம்
விடை : சூழ்நிலை மண்டலம்
2. செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை _____________ மற்றும் _____________ உயிரினங்கள் என வகைப்படுத்தலாம்.
விடை : ஒரு செல் மற்றும் பல செல்
3. பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு _____________ பயன்படுகிறது
விடை : திரும்புவதற்கு
4. அமீபா _____________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது
விடை : பாேலிக்கால்கள்
II. சரியா? தவறா? – தவறு எனில் சரியான விடையை எழுதக
- ஒரு உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும். விடை : சரி
- புவியியல் அமைப்பு மற்றும் சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.விடை : தவறு
- சரியான விடை : புவியியல் அமைப்பு மற்றும் சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபடும்.
- ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.விடை : சரி
- பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும். விடை : தவறு
- சரியான விடை : பறவைகளால் ஒரு நேரத்தில் இரு கண்கள் இரு வெவ்வேறு பொருட்களை பார்க்க முடியும்.
- பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.விடை : தவறு
- சரியான விடை : பாரமீசியம் ஒரு செல் உயிரி.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- வெப்பமண்டல மழைக் காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை நிலப்பரப்பு __________________ என்று அழைக்கின்றோம்விடை : சுற்றுச்சூழல்.
- ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் __________________ என்று அழைக்கப்படுகின்றன.விடை : ஒரு செல் உயிரிகள்.
- மீனின் சுவாச உறுப்பு __________________ ஆகும்விடை : செவுள்கள்
4. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ___________________ . விடை : இறங்கும்
- ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ___________________ சேமிக்கின்றன. விடை : காெழுப்பைச்
IV. குறுவினாக்கள்
1. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?
- பறவைகள் கூர்மையான நகங்கள் மற்றும் சக்திவாய்ந்த அலகு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் இரைகளை பிடிக்கின்றன
2. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?
- இந்தியாவில் ஒட்டகங்களை பாலைவனத்தில் காண முடியும்
3. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
- அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு பொய்க்கால்கள் ஆகும்.
4. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
- தலை
- வால்
- உடம்பு
- நாக்கு
- வாய்
- கண்
5. பறவைகள் காற்றில் பறக்கும் பாெழுது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் காெள்கின்றன?
- பறவைகள் காற்றில் பறக்கும் பாெழுது வால்பகுதியினை பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் காெள்கின்றன
V. சிறு வினாக்கள்
1. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.
ஒரு செல் உயிரி |
பல செல் உயிரி |
1. ஒரு செல்லால் ஆனவை |
பல செல்களால் ஆனவை |
2. உயிரியல் உள்ள ஒரு சொல்லே வாழ்க்கைச் செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது. |
செல்களுக்கிடையே வாழ்க்கைச் செயல்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு செல்கள் வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்கள் பெற்றுள்ளன. |
3. பொதுவாக இவை அளவில் மிகச் சிறியவை |
பொதுவாக இவை அளவில் பெரியவை |
4. நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க இயலும். |
கண்களால் பார்க்க இயலும். |
5. இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கிடையாது. |
இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உள்ளன. |
6. செல்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது. |
செல்பிரிவு மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வளர்ச்சி அடைகிறது |
எ.கா. அமீபொ, பாரமீசியம் மற்றும் யூக்ளினா |
எ.கா. மண்புழு, மீன், தவளை, பல்லி மற்றும் மனிதன் |
2. துருவ கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக
துருவக் கரடி:
- பாதிகாப்பிற்கான தடிமனான தோல், வெண்மையான உரோமங்கள் போன்ற தகவமைப்புகளை பெற்றுள்ளன.
பென்குயின்கள்:
- நீந்துவற்கான துடுப்புகள், நடப்பதற்கான இரண்டு கால்கள் போன்ற தகவமைப்புகளை பெற்றுள்ளன.
3. பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?
- பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பறத்தலின்போது ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்குவற்கு வலிவை மிக்க மார்புத் தசையினைப் பெற்றுள்ளன.
4. முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
- தொகுதி ஆர்த்ரோபோட்ஸ்
- தொகுதி மெல்லுடலிகள்
- தொகுதி வலைத் தசைப்புழுக்கள்
- தொகுதி சீலெண்ட்டெரேட்டா
6th Science Guide Term 1 Unit 5
VI. விரிவான விடையளி
1. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி
- இதன் நீண்ட கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.
- இவை நீர் கிடைக்கும்போதெல்லொம் அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் தேக்கி வைத்துக் கொள்கின்றன.
- உலர்ந்த பாலைவனத்திற்கு ஏற்றாற்போல் தன் உடலில் நீர் சேமிக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
- ஒட்டகம் குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. அதன் சாணம் வறண்டு காணப்படும். மேலும் அதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
- ஒட்டகம் தன் உடலில் இருந்து சிறிதளவு நீரையே இழப்பதால் அவற்றால் பல நாட்களுக்கு நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியும்.
- ஒட்டகம் திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கின்றது. சக்தி தேவைப்படும் காலங்களில் ஒட்டகம் தன் திமில் பகுதியில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகின்றது.
- ஒட்டகம் பெரிய, தட்டையான திண்டு கால்கள் மூலம் மிருதுவான மணலில் நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. இதனால் ஒட்டகத்தை “பாலைவனக் கப்பல்” என்று அழைப்பார்கள்.
- ஒட்டகங்களின் நீண்ட கண் இமைகள் மற்றும் தோல் அதன் கண் மற்றும் காதுகளை புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்கிறது.
- நாசித் துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக மூடிய நிலையில் காணப்படும்.