7th Social Science Economics Guide Term 1 Unit 1
7th Standard Social Science Economics Guide Term 1 Lesson 1 உற்பத்தி
7th Standard Social Science Economics Guide Term 1 Lesson 1 உற்பத்தி Book Back answers Samacheer kalvi guide Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Social Science Text Book Download PDF.
7th Social Science Economics Guide Term 1 Unit 1 உற்பத்தி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. உற்பத்தி என்பது
- பயன்பாட்டை அழித்தல்
- பயன்பாட்டை உருவாக்குதல்
- மாற்று மதிப்பு
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : பயன்பாட்டை உருவாக்குதல்
2. பயன்பாட்டின் வகைகளாவன
- வடிவப் பயன்பாடு
- காலப் பயன்பாடு
- இடப் பயன்பாடு
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும்
3. முதன்மைக் காரணிகள் என்பன __________
- நிலம், மூலதனம்
- மூலதனம், உழைப்பு
- நிலம், உழைப்பு
- எதுவுமில்லை
விடை : நிலம், உழைப்பு
4. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
- பரிமாற்றம் செய்பவர்
- முகவர்
- அமைப்பாளர்
- தொடர்பாளர்
விடை : முகவர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- __________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.விடை : உற்பத்தி
- பெறப்பட்ட காரணிகள் என்பது __________ மற்றும் __________ ஆகும். விடை : முதலீடு மற்றம் அமைப்பு
- __________ என்பது நிலையான அளிப்பினை உடையது.விடை : நிலம்
- __________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.விடை : நுகர்வோர்
- __________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்விடை : மூலதனம்
III. பொருத்துக
- முதன்மை உற்பத்தி – ஆடம்ஸ்மித்
- காலப் பயன்பாடு – மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்
- நாடுகளின் செல்வம் – தொழில் முனைவோன்
- மனித மூலதனம் – எதிர்கால சேமிப்பு
- புதுமை புனைபவர் – கல்வி, உடல்நலம்
விடை: 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-இ
IV. குறுகிய விடையளி
1. உற்பத்தி என்றால் என்ன?
- நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும்
2. பயன்பாடு என்பது என்ன?
- பயன்பாடு என்பது, நமது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும
3. பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
- வடிவப் பயன்பாடு
- இடப்பயன்பாடு
- காலப் பயன்பாடு
4. உற்பத்தியின் வகைகளைக் குறிப்பிடுக.
- முதன்மை நிலை உற்பத்தி
- இரண்டாம் நிலை உற்பத்தி
- மூன்றாம் நிலை உற்பத்தி
5. உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
முதல்நிலை உற்பத்திக் காரணிகள்
- முதல்நிலை உற்பத்திக்காரணிகளில் நிலமும் உழைப்பும் அடங்கும்.
மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக்காரணிகள்
- மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகளில் முதலீடும், அமைப்பும் அடங்கும்.
6. உழைப்பு வரையறு
- உற்பத்தியில், மனித உழைப்பு ஓர் உள்ளீடாகும். வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன்கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு என ஆல்பிரட் மார்ஷல் உழைப்பிற்கு விளக்கமளிக்கிறார்
7. வேலை பகுப்பு முறை –வரையறு.
- ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும்.
8. மூலதனத்தின் வடிவங்கள் யாவை?
பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம்.
- இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் போன்றவை
பணமூலதனம் அல்லது பணவியல் வளங்கள்
- வங்கி வைப்புகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவை.
மனித மூலதனம் அல்லது மனிதத் திறன் வளங்கள்
- கல்வி, பயிற்சி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்
9. சமூதாய மாற்றம் காணும் முகவர் யார்?
- தொழில் முனைவோர், “சமுதாய மாற்றம் காணும் முகவர்” என அழைக்கப்படுகிறார்.
10. தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக.
- இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்
- உற்பத்தி அலகின் இருப்பிடத்தைத் தீர்மானித்தல்
- புதுமைகளை உருவாக்குதல்
- வெகுமதி செலவைத் தீர்மானித்தல்
- இடர்களை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளல்
V. விரிவான விடையளி
1. உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக
உற்பத்தியில் மூவகை உள்ளன. அவையாவன:
- முதன்மை நிலை உற்பத்தி
- இரண்டாம் நிலை உற்பத்தி
- மூன்றாம் நிலை உற்பத்தி
1. முதன்மை நிலை உற்பத்தி
- இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை நிலை உற்பத்தி என்கிறோம்.
- முதன்மைநிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
- வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய செயல்கள், வனங்களைப் பாதுகாத்தல், மீன் பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற செயல்பாடுகள் முதன்மை நிலை உற்பத்தியுள் அடங்கும்.
- இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், பூமியின் மேற்பரப்பிலிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கின்றன.
இரண்டாம் நிலை உற்பத்தி
- முதன்மை நிலையின் உற்பத்திப் பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம்.
- இரண்டாம் நிலையில் தொழிலுக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனைத் தொழில்துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
- எடுத்துக்காட்டாக, மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல், இரும்புத் தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருள்களைத் தயாரித்தல் போன்றவற்றைக் கூறலாம்.
- மேலும், நான்கு சக்கர வண்டிகள், ஆடைகள், இரசாயனப் பொருள்கள் போன்றவற்றைத் தயாரித்தலும் பொறியியல் துறை சார்ந்த பணிகள், கட்டடப் பணிகள் சார்ந்த தொழில்களும் இரண்டாம் நிலை உற்பத்தியுள் அடங்கும்.
மூன்றாம் நிலை உற்பத்தி
- முதன்மை நிலை, இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருள்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். மூன்றாம் நிலையில் சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனைச் சேவைத்துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
- சேவைத் துறை நிறுவனமானது, உற்பத்திப் பொருள்களைத் தொழில்துறை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக வழங்குகிறது.
- எடுத்துக்காட்டாக வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித்தொடர்பு, சட்டம், நிருவாகம், கல்வி, உடல்நலப் பாதுகாப்பு போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை உற்பத்தி நிறுவனங்களாக விளங்குகின்றன.
2. நிலம் என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகளை விவரிக்க?
‘நிலம்’ என்னும் உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும்
நிலம் இயற்கையின் கொடை
- மனிதன் மற்ற உற்பத்திக் காரணிகளைப் பெறுவதற்காக மனிதன் முயற்சி செய்கிறான்.
- ஆனால் நிலம் என்ற உற்பத்திக் காரணியைப் பெறுவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.
- நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. மாறாக, அது மனிதனின்பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே என தோன்றியதாகும்.
நிலத்தின் அளிப்பு நிலையானது
- நிலத்தின் மொத்த பரப்பளவையும் எந்த மாற்றத்திற்கும் உட்படுத்த இயலாது.
- மனிதன் மேற்கொள்ளும் முயற்சியால் நிலத்தின் அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது.
- நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.
- நிலத்தின் செழிப்பை உயர்த்த முடியுமே தவிர, அதன் அளவை மாற்ற முடியாது. எனவே நிலத்தின் அளிப்பு என்றென்றும் நிலையானது.
நிலம் அழிவில்லாதது
மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்துப் பண்டங்களும் அழிந்து போகக் கூடியவை. ஆனால் நிலம் அழிவில்லாதது. நிலத்தின் அளிப்பு என்றும் மாறாததாக, அழிவற்றதாக உள்ளது.
நிலம் ஓரு முதன்மை உற்பத்திக் காரணி
- பண்டங்களை உற்பத்தி செய்திட நிலம் ஒரு முக்கியக் காரணியாகும்.
- நாம் செய்கின்ற எந்த ஓர் உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படையாக அமைகிறது.
- எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை அளிக்க உதவுகிறது.
- வேளாண்மை மூலம், பயிர்களை விளைவிக்க உதவுகிறது.
நிலம் இடம் பெயரக் கூடியதன்று
- நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல முடியாது.
- உதாரணமாக, இந்தியப் பரப்பின் எந்த ஒரு பகுதியையும் வேறு நாட்டிற்கு இடம் பெயரச் செய்ய இயலாது.
நிலம் ஆற்றல் வாய்ந்தது
- மனிதனால், அழிக்க முடியாத ஆற்றல்கள் சிலவற்றை நிலம் கொண்டுள்ளது.
- இயற்கையில் ஏற்படும் மாற்றங்களால் நிலத்தின் செழிப்புத் தன்மையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் அதனை முழுமையாக அழித்தல் இயலாது.
நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்
- நிலம், அதனுடைய செழிப்புத் தன்மையின் அடிப்படையில் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அதனால் தான் நிலத்தின் உற்பத்தித் திறன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
- ஒரிடத்தில் அதிக உற்பத்தி இருந்தால் மற்றொரு இடத்தில் உற்பத்தி குறைவாக இருக்கும். நிலம் என்பது இயற்கையின் நன்கொடை. தொடக்க நிலையில் நிலத்திடமிருந்து நாம் பெறுவது ஒன்றுமில்லை.
- இருப்பினும், உற்பத்திக்காகப் பயன்படும் நிலம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே எங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் பற்றாக்குறையைப் பொறுத்தே உற்பத்தி செய்யும் பொருள் சந்தையில் விலை பெறுகிறது.
3. வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.
வேலைப்பகுப்பு முறையின் நன்மைகள்
- உழைப்பாளி ஒருவர், ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால், அந்த வேலையில் திறமையுடையவராக ஆகிறார்.
- இம்முறை நவீன இயந்திரங்களை உற்பத்தியில் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு வழி வகுக்கிறது. உதாரணம் கம்பியில்லாத் தந்தியின் கண்டுபிடிப்பு
- காலமும், மூலப்பொருட்களும் மிகத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வேலைப்பகுப்பு முறையின் தீமைகள்
- தொழிலாளி, ஒரே வேலையைத் திரும்ப, திரும்ப செய்வதால், சுவையற்ற, களிப்பற்ற, தன்மையை அடைகிறார். இது மனிதத் தன்மையை அழிக்கிறது.
- ஒரு பகுதி பணியினை மட்டும் ஒரு தொழிலாளி மேற்கொள்வதால், அவன் குறுகிய தேர்ச்சியை மட்டுமே பெறுகிறான். இதனால் வேலை வாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது.
- இம்முறை, கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கின்றது. ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மன நிறைவினைப் பெறுவதில்லை.
4. மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
- மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி
- மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது
- இது உற்பத்தியில் தவிர்க்க முடியாத காரணியல்ல. இது இன்றியும் உற்பத்தி நடைபெறும்
- மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது
- இதன் அளிப்பு நெகிழுந்தன்மையுடையது
- மூலதனம் ஆக்கமுடையது
- மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்
- மூலதனத்தை ஈடுபடுத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதேயாகும்.
5. தொழில் முனைவோரின் பணிகளைக் கூறுக.
- தொழில் முனைவோர், எனப்படுபவர் பல உற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதனம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார். அக் காரணிகளைச் சரியான அளவிலும், முறையிலும் தொடங்கி, இடர்ப்பாடுகளை ஏற்று, உற்பத்தி அதிகரிக்க முயல்பவரே தொழில்முனைவோர் ஆவார்.
- தொழில் முனைவோர், ‘தொழில் அமைப்பாளர்’ எனவும் அழைக்கப்படுகிறார். தற்காலத்தில், தொழில் முனைவோர், “சமுதாய மாற்றம் காணும் முகவர்” என அழைக்கப்படுகிறார். இவர் சமுதாய விருப்பமுள்ள உற்பத்தியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்படவும் காரணமாகிறார்.
தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள்
- இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்
- உற்பத்தி அலகின் இருப்பிடத்தைத் தீர்மானித்தல்
- புதுமைகளை உருவாக்குதல்
- வெகுமதி செலவைத் தீர்மானித்தல்
- இடர்களை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளல்.