7th Social Science History Guide Term 1 Unit 4
7th Standard Social Science History Guide Term 1 Lesson 4 டெல்லி சுல்தானியம்
7th Standard Social Science History Guide Term 1 Lesson 4 டெல்லி சுல்தானியம் Samacheer kalvi guide Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Social Science Text Book Download PDF.
7th Social Science History Guide Term 1 Unit 4 டெல்லி சுல்தானியம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
- முகமதுகோரி
- ஜலாலுதீன்
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
விடை : பா குத்புதீன் ஐபக்
2. குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
- லாகூர்
- புனே
- தௌலதாபாத்
- ஆக்ரா
விடை : லாகூர்
3. ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
- ரஸ்ஸியா
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
- பால்பன்
விடை : இல்துமிஷ்
4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
- முகமதுபின் துக்ளக்
- பிரோஷ் ஷா துக்ளக்
- ஜலாலுதீன்
- கியாசுதீன்
விடை : கியாசுதீன்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்.விடை : கியாசுதீன் துக்ளக்
- முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்விடை : தேவகிரி
- புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.விடை : பால்பன்
- டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.விடை : குத்புதின் ஐசக்
- இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டதுவிடை : பால்பன்
III. பொருத்துக:
- துக்ரில்கான் – காராவின் ஆளுநர்
- அலாவுதீன் – ஜலாலுதீன் யாகுத்
- பகலூல் லோடி – வங்காள ஆளுநர்
- ரஸ்ஸியா – சிர்கந்தின் ஆளுநர்
Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
IV. சரியா? தவறா?
- குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.விடை : தவறு
- ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.விடை : சரி
- ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.விடை : தவறு
- தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்.விடை : சரி
V. அ. கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.
கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
- காரணமும் கூற்றும் தவறானவை.
- கூற்று தவறு; காரணம் சரி.
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ. சரியான இணையைத் தேர்வு செய்க:
- ஹெய்சாளர் – தேவகிரி
- யாதவர் – துவாரசமுத்திரம்
- காகதியர் – வாராங்கல்
- பல்லவர் – மதுர
விடை : காகதியர் – வாராங்கல்
இ) தவறான கூற்றினை / கூற்றுகளைக் கண்டறியவும்
- 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்
- ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்
- மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்
- இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை : ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்
VI. கீழ்க்காண்பனவற்றிற்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன?
- “இக்தா”
2. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
- சிக்கந்தர் லோடி
3. கி.பி.(பொ.ஆ)12ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
- முகமது கோரி
4. ‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
- மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
5. அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?
- ஜலால்-உத்-தின் மருமகனும், காராவின் ஆளுநருமான அலாவுதீன் தென் பிராந்தியங்களை ஆக்கிரமித்து கொள்ளையடித்து பெரும் செல்வத்துடன் திரும்பினார்.
- அவர் ஆட்சியாளரான ஜலால்-உத்-தின் பிரபுக்கள் மற்றும் தளபதிகளின் ஆதரவால் கொல்லப்பட்டார் மற்றும் 1296 இல் தன்னை டெல்லி சுல்தான் என்று அறிவித்து டெல்லி சுல்தானை பலப்படுத்தினார்.
6. பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக
- பிரோஷ் ஷா துக்ளக்க் ஏழை முஸ்லிம்களுக்காக தொண்டு நிறுவனங்களை உருவாக்கினார்.
- மசூதிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டினார்.
- அவர் பல மனிதாபிமான நடவடிக்கைகளை பின்பற்றினார்.
- மனிதாபிமானமற்ற தண்டனைகளையும் அங்கீகரிக்கப்படாத வரிகளையும் அவர் தடை செய்தார்.
- பல கால்வாய்கள், தோட்டங்கள் மற்றும் நகரங்களை நிர்மாணிப்பதன் மூலம் விவசாயத்தை ஊக்குவித்தார்.