You are currently viewing 7th Science Guide Term 1 Unit 4

7th Science Guide Term 1 Unit 4

7th Science Guide Term 1 Unit 4

7th Standard Science Term 1 Unit 4 அணு அமைப்பு

7th Standard Science Unit 4 அணு அமைப்பு Tamil Medium Guide Book Back Question and answers. 7th Science All Unit Book Back Answers Guide.  7th STD All Subject Text Book Download pdf. 7th Science Physics, Chemistry, Biology Guide Book in Answers. Class 1 to 12 All Subject Guide.

7th Science Guide Term 1 Unit 1

 

7th Science Guide Term 1 Unit 4 அணு அமைப்பு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பருப்பொருளின் அடிப்படை அலகு ___________ ஆகும்.

  1. தனிமம்
  2. அணு
  3. மூலக்கூறு
  4. எலக்ட்ரான்

விடை : அணு

2. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் ___________ ஆகும்.

  1. அணு
  2. நியூட்ரான்
  3. எலக்ட்ரான்
  4. புரோட்டான்

விடை : எலக்ட்ரான்

3.   ___________ நேர்மின் சுமையுடையது.

  1. புரோட்டான்
  2. எலக்ட்ரான்
  3. மூலக்கூறு
  4. நியூட்ரான்

விடை : புரோட்டான்

4. ஓர் அணுவின் அணு எண் என்பது ___________ ஆகும்.

  1. நியூட்ரான்களின் எண்ணிக்கை
  2. புரோட்டான்களின் எண்ணிக்கை
  3. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
  4. அணுகளின் எண்ணிக்கை

விடை : புரோட்டான்களின் எண்ணிக்கை

5. நியூக்ளியான்கள் என்பது ___________ கொண்டது

  1. புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
  2. நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
  3. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
  4. நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

விடை : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் . ___________ விடை : அடிப்படைத் துகள்கள்
  1. அணுவின் உட்கருவில் ___________ மற்றும் ___________ இருக்கும். விடை : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள்
  1. அணுவின் உட்கருவை ___________ சுற்றி வரும்.விடை : எலக்ட்ரான்கள்
  2. கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆகும். எனில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு ___________ விடை : CH4
  3. மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் _________ .விடை : 2

III. பொருத்துக

  1. இணைதிறன் – Fe
  2. மின்சுமையற்ற துகள் – புரோட்டான்
  3. இரும்பு – வெளிவட்டப்பாதையில் காணப்படும் எலக்ட்ரான்
  1. ஹைட்ரஜன் – நியூட்ரான்
  2. நேர்மின்சுமை கொண்ட துகள் – ஓர் இணைதிறன்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 –

IV. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக

  1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.விடை : தவறு
  • சரியான விடை : ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு அணு எண் ஆகும்
  1. எலக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை.விடை : தவறு
  • சரியான விடை : எலக்ட்ரான்கள் எதிர்மின்சுமை கொண்டவை.
  1. ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை கொண்டிருக்கும்விடை : சரி
  • சரியான விடை : அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியும்
  1. அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படும்.விடை : தவறு
  • சரியான விடை : அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் காணப்படும்

V. ஒப்புமை பூர்த்தி செய்க.

  1. சூரியன் : உட்கரு ; கோள்கள் : ____________விடை : எலக்ட்ரான்கள்
  2. அணு எண் : ____________ , நிறை எண் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கைவிடை : புரோட்டான்கள் எண்ணிக்கை
  3. K : பொட்டாசியம் ; C : ____________விடை : கார்பன்

VI. வலியுறுத்தல் மற்றும் காரணம்.

  1. கூற்று (A) காரணம் (R) சரி, காரணம் (R) கூற்று (A) யை விளக்குகிறது.
  2. கூற்று (A) காரணம் (R) சரி, ஆனால் காரணம் (R) கூற்று (A) யை விளக்கவில்லை.
  3. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு.
  4. கூற்று (A) தவறு ஆனால் காரணம் (R) சரி.

1. கூற்று A : ஓர் அணு மின்சுமையற்றது நடுநிலையானது

காரணம் R : அணுக்கள் சம எண்ணிக்கையான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டது.

விடை : கூற்று (A) காரணம் (R) சரி, காரணம் (R) கூற்று (A) யை விளக்குகிறது.

2. கூற்று A : ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.

காரணம் R : உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.

விடை : கூற்று (A) காரணம் (R) சரி, ஆனால் காரணம் (R) கூற்று (A) யை விளக்கவில்லை.

3. கூற்று A : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.

காரணம் R : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.

விடை : கூற்று (A) தவறு ஆனால் காரணம் (R) சரி.

VII. மிக குறுகிய விடையளிக்கவும்.

1. அணு வரையறுக்கவும்.

  • ஒரு தனிமத்தின் வேதிப்பண்புகளை தக்க வைத்துக் கொள்ளத்தக்க மிகச் சிறிய துகளே அணுவாகும்

2. அணுவின் அடிப்படைத் துகள்களைக் குறிப்பிடவும்.

  • புரோட்டான்கள்
  • எலக்ட்ரான்கள்
  • நியூட்ரான்கள்

3. அணு எண் என்றால் என்ன?

  • ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் ஆகும்.
  • இது Z என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.

4. புரோட்டானின் பண்புகள் யாவை?

  • புரோட்டான்கள் என்பவை அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
  • இவற்றின் நேர்மின்னூட்டத்தின் மதிப்பு எலக்ட்ரான்கள் எலக்ட்ரான்கள் பெற்றுள்ள எதிர் மின்னூட்டத்தின் மதிப்பிற்குச் சம மாகும்.

5. நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?

  • நியூட்ரான்கள் அணுக்கருவினுள் அமைந்துள்ளன.
  • நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை
  • எனவே நியூட்ரான்கள் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன

VIII. குறுகிய விடையளிக்கவும்.

1. ஐசோடோப்புகள், ஐசோபார்கள்- வேறுபடுத்தவும்.

ஐசோடோப்புகள்

ஐசோபார்கள்

1. ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ள தனிமத்தின் அணுக்கள் அவை ஐசோடோப்புகள் எனப்படுகின்றன

ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும்கொண்ட அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும்

(எ.கா) ஹைட்ரஜன் (1H1), டியூட்ரியம் (1H2), டிரிட்டியம்(1H3)

(எ.கா) கால்சியம் – 40 மற்றும் ஆர்கான் – 40.

2. ஐசோடோன்கள் என்றால் என்ன? ஓர் உதாரணம் தருக.

  • வேறுபட்ட அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் ஒரே  எண்ணிக்கையிலான நியூட்ரான்களைக் கொண்ட தனிமத்தின் அணுக்கள் அவை ஐசோடோப்புகள் எனப்படுகின்றன
  • (எ.கா) கார்பன் (6H13), டியூட்ரியம் (7H14),

3. நிறை எண் அணு எண் வேறுபடுத்துக.

அணு எண்

நிறை எண்

1. ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் ஆகும்.

நிறை எண் என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமமாகும்

2. இது Z என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது

இது A என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது

4. ஒரு தனிமத்தின் அணு எண் 9, மற்றும் அத்தனிமம் 10 நியூட்ரான்களை கொண்டுள்ளது எனில், தனிம ஆவர்த்தன அட்டவணையினைக் கொண்டு அது எத் தனிமம் எனக் கண்டறிக. அதன் நிறை எண் யாது?

  • அணு எண் 9 உடைய தனிமம் = புளூரின் (F)
  • அதன் நிறை எண் (A) = n + p = 10 +9 = 19

IX. விரிவான விடையளிக்கவும்.

1. அணுவின் அமைப்பினை படமாக வரைந்து அதன் அடிப்படைத் துகள்களின் நிலையினை விளக்குக.

அணு அமைப்பு பாட வினா மற்றும் விடைகள் – 2021

எலக்ட்ரான்கள்  

  • இவை எதிர் மின்னூட்டம்பெற்ற துகள்கள் ஆகும்.
  • இவை அணுக்கருவினைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைகளில் சுற்றி வருகின்

புரோட்டான்கள்

  • அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
  • இவற்றின் நேர்மின்னூட்டத்தின் மதிப்பு எலக்ட்ரான்கள் எலக்ட்ரான்கள் பெற்றுள்ள எதிர் மின்னூட்டத்தின் மதிப்பிற்குச் சம மாகும்.

நியூட்ரான்கள்

  • இவை அணுக்கருவினுள் அமைந்துள்ளன. நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை.
  • ஹைட்ரஜன் தவிர அனைத்து அணுக்கருக்களும் நியூட்ரான்களைக் கொண்டுள்ளன.

2. ஒரு தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 26 மற்றும் 56. அந்த அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அதன் அணு அமைப்பினை வரையவும்.

தனிமத்தின் அணு எண்

= 26

தனிமத்தின் நிறை எண்

= 56

தனிமம்

= இரும்பு (Fe)

எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

= 26

புரோட்டான்களின் எண்ணிக்கை

= 26

நியூட்ரான்களின் எண்ணிக்கை

= நிறை எண் – அணு எண்

 

= 56 – 26 = 30

 

 (Fe = 2, 8, 14, 2)

3. நியூக்ளியான்கள் என்றால் என்ன? அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது? நியூக்ளியான்களின் பண்புகளை எழுதவும்.

  • அணுக்கருவினுள் காணப்படும் இரண்டு வகையான துகள்களான புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் ஆகியவை நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.
  • நியூட்ரான்களும் புரோட்டான்களும் அணுக்கருவினுள் காணப்படுவதல் அவை நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.
  • புரோட்டான் மற்றும் நியூட்ரானின் நிறையுடன் ஒப்பிடும்போத ஒரு எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்க அளவில் உள்ளது. எனவே ஒரு அணுவின் நிறையானத அணுக்கருவினுள் அமைந்துள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரானகளின் நிறையினை மட்டுமே சார்ந்திருக்கும்.

4. இணைதிறன் வரையறு. அணு எண் 8 கொண்ட ஒரு தனிமத்தின் இணைதிறன் மதிப்பு என்ன? அத்தனிமம் ஹைட்ரஜனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மம் யாது?

ஒரு அணு மற்ற அணுக்களுடன் இணையும் திறன் இணைதிறன் எனப்படும்.

  • அணு எண் 8 உடைய தனிமத்தின் இணைதிறன் = 2
  • அத்தனிமம் ஹைட்ரஜனடன் இணைந்த உருவாக்கும் சேர்மம் அணுஎண் 8 உடைய தனிம் ஆக்சிஜன்.
  • ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் இணைந்து நீரை உருவாக்கும். எனவே உருவான சேர்மம் நீர் ஆகும்.A

Leave a Reply