You are currently viewing 12th Bio Botany Lesson 2 Additional 3 Marks

12th Bio Botany Lesson 2 Additional 3 Marks

12th Bio Botany Lesson 2 Additional 3 Marks

மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Bio-Botany Unit 7 Lesson 2 Additional 3 Marks. TN 12th Botany Lesson 2 Additional 3 Marks. 12th Standard Botany Lesson 2 Additional 3 Marks Tamil Medium. TN Samacheer kalvi Guide 12th Standard Botany Unit 7, Lesson 2 பாரம்பரிய மரபியல் Book back and additional question and answers. Two Mark Question and Answers.  +2 Samacheer kalvi guide Tamil Medium Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360. 12th Botany பாரம்பரிய மரபியல்.  12th Botany Unit 7 Book Back Full Answer key.  and also the Additional Answer key.

12th Bio-Botany Unit 7 Lesson 2 Additional 3 Marks

12th Bio-Botany Unit 7 Lesson 2 Additional 3 Marks

1. வேறுபட்ட சீர்தன்மையுடைய நெட்டை பைசம் சட்டைவம் தாவரத்தை குட்டைத் தாவரத்துடன் கலப்பினம் செய்யும் தொடர் ஓட்ட வரைபடத்தை வரைக. (PTA-3)

மாறுபட்ட பண்பிணைவு பெற்ற நெட்டை தாவரத்துடன் சோதனைக் கலப்பு

12th Bio Botany Lesson 2 Additional 3 Marks

2. பேட்சனின் காரணிக் கருதுகோள் யாது?

  • மெண்டலுக்குப் பின் வந்த W.பேட்சன் என்பவர் மெண்டலின் ஒரு பண்பை ஒரு மரபணு கட்டுப் படுத்துகிறது என்பதற்கு விதிவிலக்காக காரணிக் கருதுகோலை உருவாக்கினார்.
  • இதன்படி சில பண்புகள் ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் (அ) அல்லீல்களுக கிடையேயான இடைச்செயலால் ஏற்படுகிறது என கலப்புகள் மூலம் நிரூபித்தார். இதுவே பேட்சனின் காரணிக் கருதுகோலின் கூறுகள் ஆகும்.

3. மனிதனின் ABO இரத்த வகைகளின் புறத்தோற்ற அமைப்பு எதைச் சார்ந்தது?

  • ABO இரத்த வகை இரண்டு வகை மரபணுக் களைச் சார்ந்தது.
  • இவையே சிவப்பணு செல்களின் புறத்தோற்றத் தன்மையை தீர்மானிக்கிறது.
  • A மற்றும் A மற்றும் மரபணு இரத்த செல்கள் Type A வகை.
  • எனவே 4 இரத்த குழுக்கள் உள்ளன. அவை, A, B, AB, & O. அதன் -புறத்தோற்ற விகிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இரத்தவகை

O

AB

O

O

A & B

A

O & A

A,B or AB

B

O & B

A,B or AB

4.. வேறுபாடுகளின் முக்கியத்துவம் தருக.

  • சில உயிரிகளில் – வேறுபாடுகள் போராடி வாழ சூழலில் தகவமைப்பாகின்றன.
  • இயற்கை தேர்வுக்கான மரபியல் பண்புகளைப் வழங்குவதாக உள்ளது.
  • பயிர் உற்பத்தியாளர்களுக்கு தரமான உருவாக்க உதவுகிறது.

– மேம்பட்ட உற்பத்தி

-விரைவான உற்பத்தி

-அதிக நோய் எதிர்ப்புத் தன்மை

-குறைவான முதலீடு

  • பரிமாணத்தின் அடிப்படை வேறுபாடுகளாகும்.

5. இரத்த வகைகளின் மரபணுக்களின் பாரம்பரியத்தை விவரி.

  • மாற்றுப் பண்பிணைவு கொண்ட தாவரத்தில் இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப்படுத்தும் முறை இணை ஓங்கு தன்மை 1 மரபணு மூன்று அல்லீல்களைக் கொண்டு உள்ளது. (i.e) IA, IB, I ஒவ்வொரு மனிதனும் இம்மூன்றில் இரண்டைக் கொண்டிருப்பதால் அதன்படி இரத்தவகை அமைகிறது.

கீழ்கண்ட அட்டவணையைக் காண்க

வெற்றோர் அல்லீல்

A

B

O

A

AA(A)

AB(AB)

AO(A)

B

AB(AB)

BB(B)

BO(B)

O

AO(A)

BO(B)

OO(O)

  • A & B அல்லீல்கள் ஓங்கு தன்மையுடையதாகவும் ஒடுங்கு தன்மை உடையதாகவும் உள்ளன. BO காணப்பட்டால் ஒருவனுக்கு B இரத்த வகையும்
  • AB காணப்பட்டால் AB இரத்த வகையும்
  • OO காணப்பட்டால் O இரத்த வகையும் காணப் படுகிறது.

6. கதிர் அரிவாள் அனீமியாவில் காணப்படுவது இணைக் காரணியா (அ) முழுமையற்ற ஓங்கு தன்மையா? விவரி

  • கதிர் அரிவாள் அனீமியா ஒரு ஒத்த காரணி ஒடுங்கு பண்பு தன்மையால் ஏற்படும் நோய்
  • Hbs – Hbs – என்ற ஒத்த ஒடுங்கு காரணி தன்மை யால் ஹீமோகுளோபின் மூலக்கூறு புரத அமைப்பு சடுதி மாற்ற மாறுபாடடைந்து கதிர் அரிவாள் வடிவத்தை அடைகிறது. இதனால் ஆக்ஸிஜனை சரிவர எடுத்துச் செல்ல இயலாத தால் அனீமியா (இரத்த சோகை நோய்) ஏற்படுகிறது.

7. Bb cc மற்றும் Bb cc கலப்பு செய்வதால் அதிலிருந்து என்ன கிடைக்கும் என்பதைக் கூறு.

 

8. ஒத்திசைவான குரோமோசோம்கள் (அ) ஹோமோ லாகஸ் குரோமோசோம் என்றால் என்ன?

  • ஒரு இருசமய செல்லில் புற அமைப்பு, செயல் படும் விதம் ஒத்த தன்மையுடைய இரு குரோமோ சோம்கள் ஹோமோலாகஸ் குரோமோசோம் எனப்படும்.
  • இதில் ஒன்று ஆண் பெற்றோரிடமும் மற்றொன்று பெண் பெற்றோரிடமும் இருந்து பெறப்பட்டவை

 

9. ஆண் மலடாக்குதல் என்றால் என்ன?

  • தற்கருவுறுதலைத் தடுத்து இரு வேறுபட்ட தாவரங்களை சேர்ககை செய்வதற்காக மலரின் ஆண் பாகமான மகரந்தப்பைகளை மலர் மொட்டாக இருக்கும் போதே வெட்டி எடுப்பதற்கு ஆண் மலடாக்கல் என்று பெயர். இதன் மூலம் தற்கருவுறுதல் தடுக்கப்படுவதோடு வேண்டிய இர தாவரக் கலப்பின் சந்ததியை உருவாக்கி சந்ததிகளின் பாரம்பரியத்தை கற்க இயலும் (அ) ஆய்வு செய்ய இயலும்.

10. ஹோமோசைகஸ் (ஒத்த பண்பிணைவு) – ஹெட்டிரோசைகஸ் (வேறுபட்ட பண்பிணைவு) வேறுபாடு தருக.

ஹோமோசைகஸ்

ஹைட்டிரோசைகஸ்

1. ஒரு பண்புக்குரிய அல்லீல்கள் ஒத்த பண்புடையவை களாக இருப்பது.

ஒரு பண்புக்குரிய அல்லீல்கள் வேறுபட்டு காணப்படுகிறது.

2. அது தூய கால்வழி உடையது.

இது கல்ப்பின வகை.

3. அவை ஒரே ஒரு வகை கேமீட்டுகளை உருவாக்கும். எ.கா. நெட்டை TT (ஹோமோசைகேஸ் ஓங்குதன்மை) குட்டை tt (ஹோமோசைகேஸ் ஒடுங்குதன்மை)

ஒன்றுக்கு மேற்பட்ட கேமீட்டுகளை உருவாக்கும். எ.கா. நெட்டை Tt (ஹெட்டிரோசைகஸ் ஓங்கு தன்மை)

11. ஓங்கு தன்மை ஒடுங்கு தன்மை வேறுபாடு தருக.

ஓங்கு தன்மை 

ஒடுங்கு தன்மை

1. F1 இல் வெளிப்படும் பண்பே ஓங்கு தன்மைப்பண்பு

F1 இல் மறைக்கப்படும் பண்பு ஒடுங்கு தன்மைப் பண்பு

2. ஓங்கு அல்லீல் மற்றும் ஒடுங்கு அல்லீல் இருந்த போதும் இப்பண்பு வெளிப்படும்.

ஒடுங்கு அல்லீல்கள் இருந்தால் மட்டுமே இப்பண்பு வெளிப்படும்

3. பட்டாணி தாவரத்தில் நெட்டை மற்றும் சிவப்பு மலர்கள் ஓங்கு பண்புகள் ஆகும்.

குட்டை மற்றும் வெள்ளை மலர்கள் பட்டாணி தாவர ஒடுங்கு பண்புகள் ஆகும்.

4. ஓங்கு பண்பு ஹோமோசைகஸ் & ஹெட்டிரோசைகஸ் தன்மையிலும் வெளிப்படும்.

ஓங்கு பண்பு - ஹோமோசைகஸ் (ஒத்த காரணி நிலை) தன்மையில் மட்டுமே வெளிப்படும்.

12. மெண்டலின் ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தோட்டப் பட்டாணி தாவரத்தின் 7 பண்புகள் யாவை?

  • மரபியலின் முதல் மாதிரி உயிரி – தோட்டப் பட்டாணி இத்தாவரத்தில் மெண்டலால் ஆய்வு செய்யப்பட்ட ஏழு பண்புகளின் விவரம்.

மெண்டலின் ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தோட்டப் பட்டாணி தாவரத்தின் 7 பண்புகள் யாவை

13. ஏன் தனித்துப்பிரிதல் விதி – கேமீட்டுகளின் தூய தன்மை விதி எனப்படுகிறது?

  • F1 கலப்பினம் (11) இரண்டு அல்லீல்கள் காணப்படுகிறது – நெட்டை (1) குட்டை (t) இவையிரண்டும் கேமீட்டு உருவாக்கத்தின் போது இந்த இணை அல்லீல்கள் ஒவ்வொரு கேமீட்டிலும் ஒன்று என்ற வீதத்தில் தனித்துப் பிரிகின்றன. எனவே கேமீட்டுகள் எப்போதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை.
  • இதனாலே தனித்துப் பிரிதல் விதி (அ) கேமீட்டுகளின் தூய தன்மை விதி என அழைக்கப்படுகிறது.

14. ஒரு பண்புக்கலப்பை இரு பண்புக் கலப்பிலிருந்து வேறுபடுத்து

ஒரு பண்பு கலப்பு

இரு பண்பு கலப்பு

1. ஒரு ஜோடி வேறுபடும் பண்புகளையுடைய வேறு படும் இரு தூய கால் வழி பெற்றோரிடையே நடைபெறும் கலப்பு

இரு ஜோடி வேறுபடும் பண்புகளை உடைய இரு தூய கால் வழி பெற்றோரிடையே நடை பெறும் கலப்பு

2. Fz புறத்தோற்ற விகிதம் 3: 1

F2 புறத்தோற்ற விகிதம் 9:3:3:1

3. F2 மரபணுவாக்க விகிதம் 1: 2:1

F2 மரபணுவாக்க விகிதம் 1:2:2:4:1:2:1:2:1

4. தனித்துப் பிரிதல் விதியை விளக்குகிறது.

சார்பின்றி ஒதுங்குதல் விதியை விளக்குகிறது.

15. பீனோஃடைப் மற்றும் ஜீனோடைப் வேறுபடுத்துக.

பீனோஃடைப் (அ) புறத்தோற்ற வகையம்

ஜீனோடைப் (அ) மரபணு வகையம்

1. ஒரு உயிரியின் வெளிப்படக்கூடிய பண்புகள் புறத்தோற்ற வகையம் எனப்படும்.

ஒரு உயிரியின் பண்புகளுக்கான மரபணு தொகுப்பு மரபணுவாக்கம் எனப்படும்.

2. இது வெளியே காணப்படும் பண்பு

இது பாரம்பரியக் கூறுகளால் ஏற்படக்கூடியது

3. மரபணு வாக்கத்தின் வெளிப்பாடே புறப்பண்பாக்கம்

4. நெட்டை -புறப்பண்பாக்கம்

TT - Tt (நெட்டைக்குரிய மரபணுவாக்கம்)

5. நெட்டை குட்டை புறத்தோற்றம்

நெட்டை : குட்டை  
           TT : tt
மரபணுவாக்கம்

16. சோதனைக்கலப்பு மற்றும் பிற்கலப்பு வேறுபடுத்துக.

சோதனைக்கலப்பு

பிற்கலப்பு

1. F1 சேயை அதனுடைய ஒடுங்கு பெற்றோரோடு செய்யும் கலப்பு சோதனைக் கலப்பு எனப்படும்.

F1 சேய் தாவரத்தை அதனுடைய ஏதேனும் ஒரு பெற்றோரோடு (ஓங்கு (அ) ஒடுங்கு பெற்றோ ரோடு செய்யும் கலப்பு பிற்கலப்பு எனப்படும்.

2. இதற்கு சோதனைத் தேர்வு கலப்பு என்றும் பெயர்.

இது வெறும் பிற்கலப்பு எனப்படுகிறது.

3. இதன் மூலம் F, இன் மரபணுவாக்கம் தெரிய வருகிறது.

விரும்பப்பட்ட பண்பை பெறுவதற்கு பிற்கலப்புகள் உதவுகின்றன.

4. இதில் ஓங்கு & ஒடுங்கு பண்பு சம விகிதத்தில் கிடைக்கும்

ஓங்கு பெற்றோர் பிற்கலப்பு ஓங்கு பண்பினை உருவாக்குகிறது.

17. Pedigree analysis (அ) வம்சாவளி பகுப்பாய்வின் பயன் யாது?

  • மாபணு பிறழ்ச்சிகள் என்பது மரபணுக்களின் செயல்பாட்டுக் குறைபாடு – மரபணுவின் செயல் உருவாக்கும் புரதத்தினைச் சார்ந்துள்ளது.
  • மரபணு குறைபாடு குறைபாடுள்ள புரதத்தை உருவாக்குவதால் மரபணு நோய்கள் (அ) பாரம் பரிய நோய் உருவாகிறது.
  • இதனைக் கண்டறிய Pedigree analysis (அ) வம்சாவளி பகுப்பாய்வு முறை உதவுகிறது.

18. பாரம்பரிய குறைபாடு என்றால் என்ன?

  • பாரம்பரிய குறைபாடு – மரபணுக்களின் வரிசை யமைப்பில் ஏற்படும் மாற்றமான சடுதி மாற்றம் (Mutation) நிகழ்வினால் ஏற்படுகிறது. இதனால் தேவையான புரத தயாரிப்பு தடைபடுகிறது.(அ) செயல்படாத புரதம் தயாரிக்கப்படுகிறது.

19. சடுதி மாற்றம் என்றால் என்ன?

  • குரோமோசோம் (அ) (DNA) அமைப்பில் ஏற்படும் மாற்றம் சடுதி மாற்றம் எனப்படும்.
  • இதனை ஊக்குவிக்கும் காரணிகள் சடுதி மாற்றத் தோற்றுவிகள் எனப்படும்.
  • சடுதி மாற்றத்தினால், ஏற்படும் பலவிதமான சந்ததிகளில் அசாதாரண மாறுபாடுகள் நன்மை (அ) தீமை பயப்பவையாக உள்ளன.

20. இணை ஓங்கு தன்மை என்றால் என்ன? PTA – 6

  • ஒரு உயிரியல் மாற்று பண்புடைய இரு அல்லீல் களும் ஒரே சமயத்தில் பண்புகளை வெளிப் படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர்.
  • எ.கா:கமீலியாவில் சிவப்பு மற்றும் வெள்ளை மலர்கள்
  • கதிர் அரிவாள் வடிவ ஹீமோகுளோபின்
  • மனிதர்களின் ABO இரத்த வகை
  • இணை ஓங்கு தன்மை தாவரங்களில் காணப் படுவது மின்னாற்பகுப்பு (அ) நிறப்பிரிகை வரை படம் மூலம் புரதம் மற்றும் ப்ளேவனாய்டு பொருட்களை பிரித்தறிவதன் மூலம் கண்டறிய முடியும்
  • இதில் F2 புறத்தோற்ற மரபணுவாக்க விகிதம் 1:2:1 எனக் காணப்பட்டது.

21. பால்சார்ந்த பாரம்பரிய நோய்கள் என்றால் என்ன?

  • இதில் குறைபாடுள்ள மரபணு பால் குரோமோ சோம்களில் காணப்படுவதால் அந்தப் பண்பு பால் குரோமோசோம்களோடு சேர்ந்து கடத்தப் படுவதால் ஏற்படும் நோய்கள் பால் சார்ந்த நோய்கள் எனப்படுகிறது.

22. மரபணுத் தொகை (Genome) என்ன?

  • ஒரு உயிரினத்தின் ஒட்டு மொத்த குரோமோ ல் சோம்கள் (அ) மரபணுக்களின் தொகுப்பு அ) மரபணுத் தொகை என்று பெயர்.

23. கொல்லி மரபணுக்கள் என்றால் என்ன?

  • 1907 E.பார் என்பவரால் கண்டறியப்பட்டது.
  • இது ஒரு ஒடுங்கி கொல்லி மரபணுவிற்கு ஸ்னாப்டிராகன் தாவரம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

24. கதிர் அரிவாள் வடிவ ஹீமோகுளோபின் உடைய அனீமியா எவ்வாறு உருவாகிறது?

  • கதிர் அரிவாள் செல் வடிவ ஹீமோகுளோபின் Hbs என்று ஒடுங்கு பண்பினால் ஏற்படுகிறது.
  • ஒத்த ஓடுங்கு காரணி நிலை Hbs Hbs ஹீமோ குளோபினின் புரத அமைப்பு மாறுவதால் அது கதிர் அரிவாள் அமைப்பைப் பெறுவதால் ஆக்ஸிஜன் கடத்துதல் பணியை மேற்கொள்ள இயலாததால் அனீமியாவில் இறப்பு நேரிடுகிறது.
  • HbA Hbs லேசான அனீமியாவால் பாதிக்கப் படுகின்றன. (கடத்தி (அ) carrier)
  • இரு கடத்திகளின் திருமணத்தின் விளைவாக கடத்திகளும் இயல்பான RBC உடையவர்களும் 2:1 என்ற விகிதத்தில் உருவாகின்றனர்.

25. சைட்டோபிளாசம் சார் ஆண் மலட்டுத் தன்மை என்றால் என்ன?

  • செயல்படும் மகரந்தத்தூள்களை உருவாக்க இயலாத தாவரங்கள் ஆண் மலட்டுத்தன்மை உரியவைகளாகக் கருதப்படுகின்றன.
  • இந்தப் பண்பு மெண்டலின் பாரம்பரியக் கடத்துதல் மூலம் கடத்தப்படாமல், பெண் தாவரத்தின் மைட்டோகாண்டிரிய கூறுகள் (சைட்டோபிளாசம்) மூலம் கடத்தப்படுகிறது. (எ.கா முத்துச்சோளம்)
  • இது தாய் தாவரம் வழியாகக் கடத்தப்படுகிறது. இது உட்கரு சாரா மைட்டோகாண்டிரியா மூலம் கடத்தப்படுவதால் சைட்டோபிளாசம் சார் பாரம் பரியப் பண்பாகக் கருதப்படுகிறது.

26. முதுமரபு மீட்சி என்றால் என்ன? எ.கா. தருக.

  • ஒரு உயிரியில் பல பரிணாம மாற்றங்களுக்குப் பின் இழக்கப்பட்ட பண்பு ஒன்று மீண்டும் அவ்வுயிரியில் தோன்றும் நிகழ்விற்கு முதுமரபு மீட்சி என்று பெயர்.
  • பறத்தோற்றப் பண்பு ஓர் உயிரியில் பரிணாம நிகழ்வினால் மறைந்த போதிலும் அதன் DNA வில் அது மறையாது நிலையில் இருக்கும். – (மறைக்கப்பட்ட DNA வில் இந்த மரபணு வரிசை செயல்படாத நிலையில் உள்ளது.
  • பல சந்ததிகளில் எடுத்துச் செல்லப்படும் ஏதாவது ஒரு தலைமுறை உயிரியில் இது செயல்படத் துவங்கும் – மறைந்த பண்பு வெளிப்படும்.
  • எ.கா ஹிரேஷியம் பைலோ செல்லாவில் பாலினப் பெருக்கமடையும் பண்பு திரும்பத் தோன்றுதல் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

27. தாவரப் பண்புகளின் ஒரே சீர்தன்மையை அறிய எவ்வாறு சோதனை செய்யவேண்டும்? (PTA – 3)

  • ஒரு உயிரினத்தின் தெரியாத மரபணு வகையத்தை குறிப்பாக ஒங்கு பண்பு புறத்தோற்றத்தை அது ஒத்த பண்பிணைவு பெற்ற ஒங்கு தன்மையா? வேறுபட்ட பண்பினைப் பெற்ற ஒங்கு தன்மையா? என்பதைக் கண்டறிய அதனை ஒடுங்கு ஒத்த பண்பிணைவுடன் கலப்பு செய்தல் சோதனைக் கலப்பாகும். இதனால் ஒங்கு பண்பு தாவரங்கள் பெறப் பட்டால், அதன் பெற்றோர் ஒத்த பண்பிணைவு பெற்ற ஓங்கு தன்மை என்பதை கண்டறியலாம்.

Leave a Reply